Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (300.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 28/03/2025
தமிழ்நாடு, பூர்வஜா ஃபின்கார்ப் நிறுவனம் மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது

28 மார்ச் 2025

தமிழ்நாடு, பூர்வஜா ஃபின்கார்ப் நிறுவனம் மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கியின், ‘முதன்மை வழிமுறைகள் - இந்திய ரிசர்வ் வங்கி (வங்கி சாரா நிதி நிறுவனம்- அளவு அடிப்படையிலான ஒழுங்குமுறை) வழிமுறைகள், 2023’ விதிமுறைகளின் கீழ் வழங்கப்பட்ட சில உத்தரவுகளை கடைபிடிக்காததற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), மார்ச் 27 , 2025 தேதியிட்ட உத்தரவு மூலம், பூர்வஜா நிதி நிறுவனம் (நிறுவனம்) மீது 50,000/- (ரூபாய் ஐம்பாதாயிரம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது, இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் பிரிவு 58 G(1)(b) உடன் இணைந்த பிரிவு 58B (5) (aa) இன் விதிகளின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி விதித்துள்ளது.

துணைக் கடன்கள் முதிர்ச்சியடைவதற்கு முன்கூட்டிய பணம் வழங்கியது தொடர்பான கடிதங்களின் அடிப்படையில், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு நிறுவனம் இணங்கவில்லை என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக நிறுவனம் மீது ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற அறிவுறுத்தி அறிக்கை அனுப்பப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு நிறுவனத்தின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது பெறப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் ஆகியவற்றை பரிசீலனை செய்த போது, நிறுவனம், இந்திய ரிசர்வ் வங்கியின் பின்வரும் உத்தரவுகளுக்கு கட்டுப்படாதது நிரூபிக்கப்பட்டதால், பண அபராதம் விதிக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்தது:

(i) நிறுவனம், ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இல்லாமல் துணைக் கடன்களை முன்கூட்டியே மீட்டெடுக்க அனுமதித்து பணம் வழங்கியுள்ளது.

இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இது நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்துடனானதல்ல. மேலும், இந்த பண அபராதம் விதிக்கப்படுவது, நிறுவனத்திற்கு எதிராக ரிசர்வ் வங்கியால் தொடங்கப்படும் வேறு எந்த நடவடிக்கைக்கும் பாரபட்சம் இல்லாமல் இருக்கும்.

(புனீத் பஞ்சோலி)    
தலைமை பொது மேலாளர்

பத்திரிகை வெளியீடு: 2024-2025/2513

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்