Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (83.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 03/02/2017
₹ 100 வங்கி நோட்டுகள் உட்பொதிந்த “R” எழுத்துடன், வெளியீடு

பிப்ரவரி 03, 2017

₹ 100 வங்கி நோட்டுகள் உட்பொதிந்த “R” எழுத்துடன்,
வெளியீடு

இந்திய ரிசர்வ் வங்கி, 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வரிசை வங்கி நோட்டுகளில் இருபக்கமும் வரிசை எண்களில் உட்பொதிந்த “R” எழுத்துடன், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் Dr. உர்ஜித் R.படேல் அவர்கள் கையெழுத்துடன், பின்புறத்தில் நோட்டு அச்சிடும் ஆண்டு “2017“ என்பது அச்சடிக்கப்பட்ட ₹ 100 மதிப்பிலக்க ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிட உள்ளது .

தற்போது வெளியிடப்படவிருக்கும் நோட்டுகளின் வடிவமைப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள, இருபக்கமும் வரிசை எண்கள் அளவில் ஏறுமுகமாக உள்ள,வரிக் கோடுகள், பின்புறத்தில் பெரிதாக்கப்பட்ட அடையாளக் குறீயீட்டுடன் கூடிய மகாத்மா காந்தி வரிசை – 2005, சார்ந்த ₹ 100 மதிப்பிலக்க ரூபாய் நோட்டுகளை ஒத்ததாக இருக்கும். (பத்திரிக்கை வெளியீட்டு எண் 2016-2017/1427, டிசம்பர், 06, 2016 தேதியிட்டதைப் பார்க்கவும்)

இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ₹ 100 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு - 2016-2017/2086

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்