Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (508.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 21/08/2015
ரூபாய் (₹) சின்னத்துடன் உட்பொதிந்த எழுத்து L உடன் வரிசை எண்கள், வடிவத்தில் ஏறுமுகமாக அமைந்துள்ள ₹ 1000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு

ஆகஸ்ட் 21, 2015

ரூபாய் (₹) சின்னத்துடன் உட்பொதிந்த எழுத்து L உடன்
வரிசை எண்கள், வடிவத்தில் ஏறுமுகமாக அமைந்துள்ள
₹ 1000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு

இந்திய ரிசர்வ் வங்கி, ஆளுநர் டாக்டர் ரகுராம் G. ராஜன் அவர்கள் கையெழுத்துடன், நோட்டின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் ₹ என்ற ரூபாய் குறியீட்டுடன், இரண்டு வரிசை எண்களில் உட்பொதிந்த எழுத்து L உடன், அச்சடிக்கப்பட்ட ஆண்டு “2015“ என்று பின்புறத்தில் அச்சிடப்பட்ட, மகாத்மா காந்தி வரிசை – 2005 இல் 1000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளை, விரைவில் வெளியிடுகிறது.

தற்போது வெளியிடப்படவிருக்கும் நோட்டுகளின் வடிவமைப்பு எல்லாவிதத்திலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள மகாத்மா காந்தி வரிசை – 2005, 1000 வங்கி நோட்டுகளை ஒத்ததாக இருக்கும். நோட்டிலுள்ள இரண்டு வரிசை எண்களும் வடிவத்தில் இடப் பக்கத்திலிருந்து வலப்பக்கம் வரை ஏறுமுகமாக அமைக்கப்படிருக்கும். ஆனால், முன்னிணைப்பாக உள்ள முதல் மூன்று எண்-எழுத்துக்கள் நிலையான ஒரே வடிவத்தில் இருக்கும்.

இவ்வாறு வரிசை எண்கள் வடிவத்தில் ஏறுமுகமாக அமைக்கப்படிருக்கும் வகையில் உள்ள ரூபாய் நோட்டுகள் ₹100 மற்றும் ₹ 500 மதிப்பிலக்கங்களில் ஏற்கனவே புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ₹ 1000 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே.

சங்கீதா தாஸ்
இயக்குநர்

PRESS RELEASE: 2015-2016 / 466

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்