Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 வங்கியியல் சம்பந்தப்பட்டவைகள்
 ரூபாய் நோட்டு/நாணயம் சம்பந்தப்பட்டவை
 அந்நியச் செலாவணி
 அரசு பத்திர சந்தை
 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
 வழங்கீட்டு முறைகள்
முகப்பு >> அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - Display
Date: 17/06/2005

மின் அணு நிதி மாற்றம் (Eletronic Fund Transfer System)

மின் அணு நிதி மாற்றம்(Electronic Fund Transfer System)

1. ரிசர்வ் வங்கியின் மின் அணு நிதி மாற்றம் என்றாலென்ன?

ஒரு வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து பங்கேற்கும் எந்த வங்கி/கிளையிலுள்ள கணக்குக்குத் துரிதமாகவும் பாதுகாப்பாகவும் பணமாற்றம் செய்வதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் இது.

2. எவ்வளவு இடங்களில் இது செயல்படுகிறது.

27 பொதுத்துறை வங்கிகளின் அனைக்குக் கிளைகளும், அட்டவணியிலிட்ட 64 வணிக வங்கிகளுக்கும் 15 இடங்களில் (அகமதாபாத், பங்களூரூ, புவனேஸ்வர், கொல்கட்டா, சண்டிகார், சென்னை, குவகாத்தி, ஹைதராபாத், ஜெய்பூர், கான்பூர், மும்பை, நாகபுரி, புதுதில்லி, பாட்னா, திருவனந்தபுரம்) இம்முறையில் செயல்படுகின்றன.

3. பயன் பெறுவோருக்கு எத்தனை நாளில் பணம் கிடைக்கும்?

1 அல்லது 2 நாளில் கிடைக்கும்.

4. இந்திய ரிசர்வ் வங்கியின் மின்னணு நிதி மாற்றமுறை எவ்வாறு செயல்படுகிறது?

நிலை-1 பணம் அனுப்புபவர் மின்னணு நிதி மாற்றத்திற்கான விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து பயனாளியின் விவரங்களை (பெரு நகரம், வங்கி, கிளை, பயனாளியின் பெயர், கணக்கின் வகை மற்றும் கணக்கு எண்) எழுதி கிளைக்கு அதிகாரம் கொடுத்து ஒரு குறிப்பிட்ட தொகையை பயனாளிக்கு அனுப்பி அனுப்புபவரின் கணக்கில் பற்றும் வைக்கப்படுகிறது.

நிலை-2 அனுப்பும் கிளை கால அட்டவணையை தயாரித்து இ.எப்.டி (EFT) விண்ணப்ப படிவத்தின் நகளை, இ.எப்.டி தகவல் தயாரிப்பிற்காக சேவைக் கிளைக்கு அனுப்புகிறது. அக்கிளை கணினி மயமாக்கப்பட்டிருந்தால் தகவல் தயாரிப்பு குறிப்பிட்ட வடிவத்தில் கிளை மட்டத்திலேயே செய்யப்படும்.

நிலை-3 சேவைக்கிளை இ.எப்.டி தகவல் புள்ளி விவரக் கோப்பை இந்திய ரிசர்வ் வங்கி கொடுத்த மென்பொருள் கட்டு மூலம் தயாரித்து, அவ்வட்டாரத்தில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு (தேசிய பரிவர்த்தனை மையம்) அனுப்பி நண்பகல் 12 மணி பிற்பகல் 2 மணி மற்றும் 4 மணிக்கான பரிவர்த்தனைகளில் சேர்க்கப்படும்.

நிலை-4 அனைத்து வங்கிகளிடமிருந்தும் பெற்ற கோப்புகளை ரிசர்வ் வங்கி, அனுப்பும் மையத்தில் ஒருங்கிணைத்து, நகரவாரியாக பரிவர்த்தனைக்களை பிரித்து, அனுப்பும் வங்கிகளுக்கு பற்று வைக்க ஒன்றாம் நாளே பற்றுச் சீட்டு தயாரிக்கப்படுகிறது. நகர வாரியாக கோப்புகள் அந்தந்த சேரும் மையங்களில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்படுகிறது.

நிலை-5 சேரும் மையத்தில் உள்ள ரிசர்வ் வங்கி புறப்படும் மையங்களிலிருந்து கோப்புகளை பெற்று பிரிக்கின்றது. அதன்பிறகு வங்கி வாரியாக அனுப்பும் தகவல் கோப்புகள் வங்கிகாளுக்கு நாள் ஒன்றிலேயே அனுப்பப்படுகிறது. வங்கி வாரியான ரசீதுகளைத் தயாரித்து, பெறும் வங்கிகளின் கணக்கில் அன்றைய தினமோ அல்லது மறுநாளோ வரவு வைக்கப்படுகிறது.

நிலை-6 சேரும் மையங்களில் உள்ள பெறும் வங்கிகள் முதல் நாள் அல்லது அடுத்தநாள் காலையில் ரிசர்வ் வங்கி வங்கியில் அனுப்பப்பட்ட அனுப்புதல் கோப்புகளை பரிசீலித்து சேருமிடக் கிளைகளுக்கு கடன் அறிக்கைகளை பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

5. ஏற்கனவே உள்ள வசதிகளைவிட ரிசர்வ் வங்கியின்மின்னணு நிதி மாற்ற முறை எவ்வாறு உயர்ந்ததாகக் கருதப்படுகிறது?

தற்போது நிதிமாற்றத்திற்கான முக்கிய வழிகளாக கேட்பு வரைவோலை, அஞ்சல் வழி மாற்றம், தந்தி மூலம் மாற்றம் ஆகியவை உள்ளன. கேட்பு வரைவோலை வசதி காகித அடிப்படையிலானது. அனுப்புபவர், கேட்பு வரைவோலையை ஒரு வங்கி கிளையிலிருந்து வாங்கியபின், பயனாளிக்கு அஞ்சல் வழி / தனியார் சேவை மூலமாக அனுப்பலாம். பயனாளி அந்த வரைவோலையை வசூல் மற்றும் தீர்விற்காக அவருடைய வங்கியில் அளிக்கிறார். இத்தகைய நடைமுறை முடிவடைவதற்குத் தேவைப்படும் காலம் ஏறத்தால 10 நாட்களாகும். தந்தி மூலம் அனுப்புப் விஷயத்தில், நிதி பயனாளிக்கு அன்றைய தினமோ அல்லது அதற்கு அடுத்த தினமோ சென்றடைகிறது. ஆனால் அனுப்புபவர் மற்றும் பயனாளி ஆகிய இருவருமே அதே வங்கியின் கணக்குதாரர்களாக இருக்கவேண்டும். அவர்கள் வெவ்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்களாக இருகும் பட்சத்தில், அது சம்பந்தமான் பேப்பர்களை பரீசீலிப்பது அவசியமாகிறது. அதே நேரத்தில் ரிசர்வ் வங்கியின் மின்னணு நிதிமாற்ற முறை வங்கிகளுக்கிடையே தொடர்புள்ள ஒரு முறையாகும். அனுப்பும் வங்கி மற்றும் பெறும் வங்கி இவைகளுக்கிடையே ரிசர்வ் வங்கி; இடையீட்டாளராக செயல்பட்டு, வங்கிகளுக்கைடையே நிதிமாற்ற விளைவுகளை ஏற்படுத்தும். வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்களுக்குரிய கிளைகளிடம் பயனாளிகளுக்கு எத்தகைய வங்கி தொடர்பு இருந்தாலும் அவர்களுக்கு பணம் அனுப்பிட வேண்டுகோள் விடுக்கலாம்.

6. தனி பரிவர்த்தனைகளுக்கு ஏதேனும் தொகை உச்ச வரம்பு உண்டா?

தனி பரிவர்த்தனைகளுக்கு மதிப்பு உச்சவரம்பு இல்லை.

7. ஒப்புதல் அளிப்பதற்கு நடைமுறை என்ன? அனுப்பும் கிளை அனுப்பிய தொகை பயனாளிக்கு வரவு வைக்கப்பட்டது என்பது எப்படி தெரிய வரும்?

 

பயனாளியின் கணக்கில் வரவு வைத்த பிறகு பெறும் கிளை ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒப்புதல் அளிக்கிறது. மின்னணு நிதி மாற்ற பரிசீலனை சுழற்சியின் மூன்றாவது நாளில் அனுப்பும் வங்கிக்கு உள்முக செய்தியாக ஒப்புதல் விவரங்கள் போய்ச் சேரும். பயனாளியின் கணக்கில் எப்போது வரவு வைக்கப்பட்டது என்பதைப் பற்றிய சுருக்கமான தகவல் அனுப்பும் வங்கியிடம் இருக்கும்.

8. எல்லாக் கிளைகளிலும் கணினி முறை நிறுவப்படுவது தேவையா?

இல்லை. அனைத்து கிளைகளிலும் கணினி முறைகள் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. கிளைகள் தங்களது அனுப்புதல் விவரங்களை தங்களது சேவைக்கிளைகளுக்கு காகித வடிவில் அனுப்பலாம் (மின்னணு நிதி மாற்ற விண்ணப் படிவங்களின் நகல்கள் அனுப்புதல் செய்திச் சுருளோடு அனுப்பும் வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்) சேவை கிளை புள்ளிவிவரப் பதிவு செய்து நிதியை அனுப்பி விவரங்களை மின்னணு முறையில் வட்டார தேசிய பரிவர்த்தனை மையத்திற்கு (என்.சி.சி – N.C.C.) மாற்றம் செய்கிறது. ஆனால் ஒரு வங்கிக்கு கணினி வசதி இருக்குமேயானால், பணம் அனுப்புவதையும் விவரங்களை மாற்றுவதையும் அதனுடைய சேவைக்கிளைக்கு மின்னணு முறையில் குறுந்தகடு அல்லது அலைப்பின்னல் (net work) மூலமக அனுப்பலாம். இது சேவைக்கிளையில் புள்ளி விவரப் பதிவு வேலையை குறைத்திடும்.

 

9. வங்கிகளுக்கு கூடுதலான அமைப்புச் சார்ந்த கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டுமா?

ஒவ்வொரு பங்கேற்கும் வங்கியும் அந்தந்த மையத்தில், அனைத்து வெளிமுக செய்திகளை அனுப்புவதற்கும் மற்றும் அனைத்து உள்முக செய்திகளை வாங்குவதற்கும் இணைப்புப் புள்ளியாக செயல்பட ஒரு கிளையை அடையாளம் காணவேண்டும். காசோலைத் தீர்வு வேலையில் ஒருங்கிணைப்பாளராக செயல்படும் வங்கிகளின் சேவைக் கிளைகள் / முக்கியக் கிளைகள் இப்பணியை ஆற்றிட சிறந்த நிலைமையில் உள்ளன.

10. பரிசீலனைக் கட்டணங்கள் / சேவைக் கட்டணங்களைப் பற்றிய விவரம் என்ன?

மார்ச் 31, 2006 வரை ரிசர்வ் வங்கி பரிசீலனைக் கட்டணங்களை தள்ளு;படி செய்துவிட்டாலும், வங்கிகளால் விதிக்கப்படும் சேவைக்கட்டணங்கள் அந்தந்த வங்கிகளின் விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளது.

 

11. ரிசர்வ் வங்கியின் மின்னணு நிதி மாற்ற முறை எவ்வறு வங்கிகளுக்கு உதவுகிறது?

· வங்கிகளுக்கிடையே தந்தி மாற்ற சேவையை வங்கிகள் அளிக்கலாம்

· சமரசம் என்பது தன்னியக்கமானது

· வங்கிகள் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு மின்னணு நிதி மாற்ற கட்டமைப்பை உபயோகிப்பதன் மூலம் புதிய பணம் செலுத்தும் / பணநிர்வாகப் பொருட்களை அளித்திடலாம்.

வாடிக்கையாளர்களால் வழங்கப்படும் வெளியூர்க் காசோலைகளின் எண்ணிக்கை மற்றும் அதனால் வங்கிக்கு ஏற்படும் பணி பளுவும் ஒரு காலகாட்டத்திற்குப் பிறகு குறையலாம்.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்