Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 வங்கியியல் சம்பந்தப்பட்டவைகள்
 ரூபாய் நோட்டு/நாணயம் சம்பந்தப்பட்டவை
 அந்நியச் செலாவணி
 அரசு பத்திர சந்தை
 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
 வழங்கீட்டு முறைகள்
முகப்பு >> அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - Display
Date: 11/05/2000

உயர் பாதுகாப்பு நிதிகள் (Gilt Funds)

 

அரசுப் பத்திரங்கள் (Govt. Securities)

 

உயர் பாதுகாப்பு நிதிகள் (Gilt Funds)

சொத்துக்களை நிர்வகிக்கும் கம்பெனிகள், முழுக்க முழுக்க அரசுப் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யத் தக்க வகையில் துவக்கப்படும் பரஸ்பர நிதிகள் உயர் பாதுகாப்பு நிதிகள் என்று அழைக்கப்படுகின்றன. அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கென்றே துவங்கப்பட்ட பரஸ்பர நிதிகள் என்றும் அவை அழைக்கப்படுகின்றன. அரசுப் பத்திரங்கள் என்றால் தேதியிட்ட மத்திய அரசுப் பத்திரங்கள், மாநில அரசுப் பத்திரங்கள் மற்றும் கருவூல உறுதிமொழிச் சீட்டுகள் (Treasury Bills) ஆகியவை ஆகும். அரசுப் பத்திரங்களில் முதலீடு என்பதால், முதலீட்டாளர்களுக்கும் பாதுகாப்பு அரசுப் பத்திரங்களில் நேரிடையாக முதலீடு செய்வதைக் காட்டிலும் கூடுதலான பயன்களை முதலீட்டாளர்கள் இத்தகைய நிதிகளில் அடையமுடியும். பலவகைப் பயன்களை அளிக்கும் பலவகை அரசுப் பத்திரங்களில் இந்நிதிகள் முதலீடு செய்வதால் இத்தகைய கூடுதல் பயன்களை அடைய வாய்ப்பு உண்டு. கூடவே இடர்வரவுகளையும் இவை எதிர்நோக்கியே உள்ளன. இப்படிப்பட்ட உயர் பாதுகாப்பு நிதி முதன்முதலில் இந்தியாவில் டிசம்பர் 1998ல் துவக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கியிலிருந்து பெறும் வசதிகள்

எளிதில் பணம் வழங்கும் வசதியையும், பிற வசதிகளையும் ரிசர்வ் வங்கி அளிக்கிறது. ரிசர்வ் வங்கியில் நடப்புக் கணக்குகளையும், துணைப் பொது ஏட்டுக் கணக்குகளையும்(SGL) துவக்கும் வசதி, ரிசர்வ் வங்கியின் பணம் அனுப்பும் வசதித் திட்டத்தின்கீழ் பணமாற்றங்கள் செய்யும் வசதி, எளிதில் பணம் கோரும் சந்தையில் (Call Money Market) சேர்தல் ஆகிய வசதிகளை உயர் பாதுகாப்பு நிதிகளுக்கு அது அளிக்கிறது. அரசுப் பத்திரச் சந்தையின் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்காக இச்சலுகைகளை அரசுப் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யும் உயர் பாதுகாப்பு பரஸ்பர நிதிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்குகிறது. இத்தகைய நிதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள்:

  1. எளிதில் பணமாக மாற்றும் வசதி: குறைந்த கால நிதித்தேவைக்காக அரசுப் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யும் உயர் பாதுகாப்பு பரஸ்பர நிதிகளுக்கு இந்த வசதியை ரிசர்வ் வங்கி அளிக்கிறது. ரிசர்வ் வங்கி பத்திரங்களை மீண்டும் வாங்கிக்கொள்ளும் முறையை (Reverse Repurchase agreement – repos) அமல்படுத்தியிருப்பதன்மூலம் இந்நிதிகளுக்கு தேவைப்படும் பணம் எளிதில் கிடைக்கிறது. மத்திய அரசின் தேதியிட்ட பத்திரங்கள், கருவூல உறுதிச் சீட்டுகள் போன்றவை ‘மீண்டும் வாங்கிக் கொள்ளும் முறையில்’ அடங்கியவை. முந்தைய நாள் முடிவில் நிலுவையில் உள்ள மத்திய அரசின் தேதியிட்ட பத்திரங்கள், கருவூல உறுதிச் சீட்டுகள் ஆகிய இருவகைப் பத்திரங்கள் மொத்த மதிப்பில் 20%, அடுத்த நாள் ‘மீண்டும் வாங்கிக் கொள்ளும் முறையில்’ எளிதாக பணமாக்கிக் கொள்ளலாம்.

  2. துணைப் பொது ஏட்டுக்கணக்கு மற்றும் நடப்புக்கணக்குகள்: ஒரு துணைப் பொது ஏட்டுக்கணக்கும், ஒரு நடப்புக்கணக்கும் ஒவ்வொரு தங்க முலாம் பூசப்பட்ட நிதிக்கும், ரிசர்வ் வங்கியின் எல்லாக் கிளை அலுவலகங்களிலும் அந்நிதிகளின் விருப்பத்திற்கேற்ப துவக்கிக் கொள்ளலாம்.

  3. பணம் மாற்றும்/அனுப்பும் வசதி: ரிசர்வ் வங்கியின் பணம் அனுப்பும் வசதித் திட்டத்தின்கீழ் ரிசர்வ் வங்கியின் ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு இந்நிதிகள் பணத்தை மாற்றிக் கொள்ளலாம். அரசுப் பத்திர வணிக நடவடிக்கைகளால் கிடைக்கும் காசோலைகளையும் ரிசர்வ் வங்கியின் முகப்புகளில் மாற்றிக் கொள்ளும் வசதியும் அளிக்கப் படுகிறது.

  4. எளிதில் பணம் கோரும் சந்தைக்கு அனுமதி: எளிதில் பணம் கோரும் சந்தையில் நிதி அளிப்பவராக இந்நிதிகள் நுழைய அனுமதி வழங்கப்படுகிறது.

  5. முன்னோக்கிய தயார் நிலை (Ready forwards): உயர் பாதுகாப்பு நிதிகள் முன்னோக்கிய தயார் நடவடிக்கைகளை அரசுப் பத்திரச் சந்தைகளில் மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு இந்திய அரசை ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்கிறது.

 

எளிதில் பணமாக்கும் வசதி

அனைத்து உயர் பாதுகாப்பு நிதிகள் பொதுத் துறை தனியார் துறையாக இருந்தாலும் சரி, திறந்த அல்லது மூடப்பட்ட நிதித்திட்டமாக இருந்தாலும் சரி, அனைத்து நிதிகளும் இவ்வசதியை ரிசர்வ் வங்கியிலிருந்து பெறுவதற்கு அனுமதி உண்டு. ஆயினும் இந்நிதிகள் இந்தியப் பத்திரப் பங்குப் பரிவர்த்தனை குழுமத்தின் (SEBI) ஒப்புதலையும் பெற்றிருக்க வேண்டும். எனவே இத்தகைய நிதிகள் தங்களது வரைவு முக்கிய ஆவணத்தை பத்திரப்பங்கு பரிவர்த்தனை குழுமத்திற்குச் சமர்ப்பிக்கும்போதே, நகலை இந்திய ரிசர்வ் வங்கிக்கும் சமர்ப்பித்தால், நிதிகளால் ஏற்படுத்த இருக்கும் திட்டம் எளிதில் பணமாக்கும் வசதியை ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளத் தகுதியானதுதானா என்பதை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே கணித்து வைக்க ஏதுவாய் இருக்கும்.

நிபந்தனைகள்

பத்திரங்களை “மீண்டும் வாங்கிக் கொள்ளும்” முறை கீழே கண்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு, ரிசர்வ் வங்கியால், அரசுப் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யும் உயர் பாதுகாப்பு நிதிகளுக்கு அனுமதிக்கப்படுகிறது.

1. பத்திரங்களை “மீண்டும் வாங்கிக் கொள்ளும்” முறை தேதியிட்ட மத்திய அரசுப் பத்திரங்களுக்கும், எல்லாக கருவூல உறுதிச் சீட்டுகளுக்கும் மட்டுமே

2. பத்திரங்களை “மீண்டும் வாங்கிக் கொள்ளும்” முறையில் வாங்கும் விலையை ரிசர்வ் வங்கி தன் விருப்பம் போல் தான் தீர்மானிக்கும்

3. உயர் பாதுகாப்பு நிதிகளால் இம்முறையில் அளிக்கப்படும் பத்திரங்கள் ரூ.10 லட்சமும் அதன் மடங்காகவும் இருக்க வேண்டும்.

4. “மீண்டும் வாங்கிக் கொள்ளும்” முறையில் 14 நாட்கள் தான் அதிக பட்ச கால அவகாசமாக இருக்கும்

5. “மீண்டும் வாங்கிக் கொள்ளும்” முறையின் விகிதம், வங்கி வட்டி விகிதத்தை ஒத்தே இருக்கும்

6. மும்பையில் மட்டுமே எளிதில் பணமாக்கும் வசதி அளிக்கப் படுகிறது. ஆனால் நிதிகள், ரிசர்வ் வங்கியின் பணம் அனுப்பும் முறையின்கீழ் எக்கிளைக்கும் மாற்றம் செய்து கொள்ளலாம்.

7. “மீண்டும் வாங்கிக் கொள்ளும்” முறையில் பெற்ற தொகையினை நிதிகள், எளிதில் பணம் கோரும் சந்தையில் அளிக்கக்கூடாது.

8. காரணம் ஏதும் கூறாமலேயே “மீண்டும் வாங்கிக் கொள்ளும்” முறையில் வந்த விண்ணப்பங்களை பகுதியாக அல்லது முழுமையாக ரத்து செய்ய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உண்டு.

9. உயர் பாதுகாப்பு நிதிகளிடமிருந்து, அவர்களது செயல்பாட்டிற்கு அனைத்து விளக்கங்களையும் ரிசர்வ் வங்கி கேட்கவும், அப்படிக் கேட்கும்போது அவைகளைக் கொடுக்கவும் உரிமையும் கடமையும் பட்டவர்கள்

 

பணம் எடுத்தல்

ரிசர்வ் வங்கியிலிருந்து உயர் பாதுகாப்பு நிதிகள் பணம் பெறக் கீழேக்கண்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

1) தலைமைப் பொது மேலாளர், உள்ளகக் கடன் நிர்வகிக்கும் குழு, இந்திய ரிசர்வ் வங்கி, மைய அலுவலகம், மும்பை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

2) என்று பணம் வேண்டுமோ அன்று நண்பகலுக்கு முன்னர், உள்ளகக் கடன் நிர்வகிக்கும் குழுவிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.

3) ரிசர்வ் வங்கி அளிக்கும் ஏற்பு மற்றும் நடவடிக்கையை உறுதிப்படுத்தும் அறிவுரைக் கடிதத்தின் நகலில் முறையாகக் கையெழுத்திட்டு நிதிகள் தங்கள் ஒப்புதலைத் தெரிவித்து ரிசர்வ் வங்கி, மும்பை அலுவலகத்தின் பத்திரப் பிரிவில் துணைப் பொதுக் கணக்கு ஏட்டில் மாற்றம் செய்துக் கொள்ள வேண்டும்.

4) “மீண்டும் வாங்கிக் கொள்ளும்” முறையில் உள்ள அதிகபட்ச கால அவகாசத்திற்குப் பின்னர் தங்கள் கணக்குகளில் கழித்துக் கொள்ள ரிசர்வ் வங்கிக்கு ஒப்புதல் அதிகாரத்தை நிதிகள் அளிக்க வேண்டும்.

5) துணைப் பொதுக் கணக்கு ஏட்டில் பத்திரங்களை மீண்டும் வாங்கிக் கொள்ள மாற்றம் செய்ய, உரிய படிவத்தினை அளிக்க வேண்டும்.

6) நிதிகளுக்கு அளிக்கப்படும் எளிதாகப் பணமாக்கும் பொருட்டு தரப்படும் தொகையை, ரிசர்வ் வங்கி மும்பையிலுள்ள நடப்புக் கணக்கில் வரவு வைத்த அன்றே பெற்றுக் கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்