Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 வங்கியியல் சம்பந்தப்பட்டவைகள்
 ரூபாய் நோட்டு/நாணயம் சம்பந்தப்பட்டவை
 அந்நியச் செலாவணி
 அரசு பத்திர சந்தை
 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
 வழங்கீட்டு முறைகள்
முகப்பு >> அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - Display
Date: 16/06/2010

அந்நிய நாட்டவர் மற்றும் அந்நிய சுற்றுலாப் பயணிகள் ஆகியோரால் ஆரம்பிக்கப்படும் வங்கிக்கணக்குகள்

அந்நிய நாட்டவர் மற்றும் அந்நிய சுற்றுலாப் பயணிகள்
ஆகியோரால் ஆரம்பிக்கப்படும் வங்கிக்கணக்குகள்
அந்நியச் செலாவணித்துறை

அந்நிய நாட்டவர் மற்றும் அந்நிய சுற்றுலாப் பயணிகள் ஆகியோரால்
ஆரம்பிக்கப்படும் வங்கிக்கணக்குகள் பற் றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
(2010 ஜுன் 15 வரை புதுப்பிக்கப்பட்டது)

1. குறுகிய கால இடைவெளியில் இந்தியாவிற்கு வந்துபோகும் அந்நியச் சுற்றுலாப் பயணிகள் வங்கிக்கணக்கு தொடங்க முடியுமா?

முடியும். அந்நிய நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு தங்களது குறுகிய கால பயணத்தில் குடியிருப்போர் அல்லாத (சாதாரண) ரூபாய் (NRO) கணக்கை (நடப்பு சேமிப்பு) அந்நியச் செலாவணியை கையாளும் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் தொடங்கலாம். இத்தகைய கணக்குகளை அதிகபட்சமாக 6 மாத காலம் வரை தொடங்கலாம்.

2. இத்தகைய கணக்குகளைத் தொடங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

பாஸ்போர்ட் மற்றும் இதர மதிப்புள்ள அடையாளச் சான்றுகள் ஆகியவை கணக்குகள் திறக்க தேவைப்படுகின்றன.  அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் புதிய கணக்குகளைத் தொடங்கும்போது உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

3. அத்தகைய கணக்குகளில் எத்தகைய வரவுகள் வைக்கப்படவேண்டும்?

வங்கிகள் வாயிலாக இந்தியாவிற்கு வெளியிலிருந்து அனுப்பப்படும் நிதி அல்லது இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கொண்டுவரும் அந்நியச் செலாவணியை விற்றுவரும் தொகை ஆகியவை NRO கணக்கில் வரவு வைக்கப்படலாம்.

4. NRO கணக்கைக் கொண்டு, சுற்றுலா வந்த இடத்தில் செலவுகளுக்கு பணத்தை அளிக்கலாமா?

ஆம்.  சுற்றுலாப் பயணிகள் தாங்கள் வந்த இடத்தில் NRO கணக்கு மூலமாக செலவுகளுக்கான பணத்தை அளிக்கலாம். இந்திய ரூபாயில் 50,000க்கும் மேற்படும் அனைத்து பணம் செலுத்துதல்களையும் காசோலைகள்/ கொடுப்பாணைகள்/கேட்பு வரைவோலைகள் மூலமாக அளிக்கவேண்டும்.

5. சுற்றுலாப் பயணிகள் இந்தியாவை விட்டு கிளம்பும்பொழுது தங்களுடைய NRO கணக்கில் மீதமுள்ள பணத்தை தங்கள் நாட்டிற்கு அனுப்பமுடியுமா?

அங்கீகரிக்கப்பட்ட வணிகவங்கிகள் கணக்கு வைத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவை விட்டு கிளம்புவதற்குமுன் மீதமுள்ள பணத்தை அவர்கள் நாட்டு பணமாக மாற்றிச்செல்ல உதவுகின்றன.  ஆனால் அந்தக் கணக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.  மேலும் சுற்றுலாவிற்காக வந்த இடத்திலிருந்து எந்த நிதியும், வட்டி தவிர அந்தக் கணக்கில் சேர்ந்திருக்கக்கூடாது.

6. ஆறுமாதங்களுக்குமேல் பராமரிக்கப்படும் கணக்கிலிருந்து மீதமுள்ள தொகை எப்படி வெளிநாட்டிற்கு அனுப்புவது?

இம்மாதிரி சமயங்களில் கணக்கைப் பராமரித்து வரும் அங்கீகரிக்கப்பட்ட வணிகவங்கி, அந்தப் பகுதியில் உள்ள ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தின் அந்நியச் செலாவணித்துறைக்கு ஒரு வெற்றுத்தாளில் மீதமுள்ள பணத்தை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக விண்ணப்பம் செய்யவேண்டும்.

7. வெளிநாட்டவர் இந்தியாவில் குடியிருப்போராக இருக்கும்பொழுது குடியிருப்போர் கணக்கைத் தொடங்க முடியுமா?

ஆம்.  அறிவிக்கை எண்5/2000 RB 3-5-2000 தேதியிட்ட அதாவது அந்நியச் செலாவணி நிர்வாக(வைப்பு) ஒழுங்குமுறைகள் 2000 அவ்வப்போது திருத்தி அமைக்கப்படும் விதியின்படி இந்தியாவில் குடியிருப்போர் ரூபாய் கணக்கை வெளிநாட்டவர் இந்தியாவில் தொடங்கி பராமரிக்க முடியும்.

8. அங்கீகரிக்கப்பட்ட வணிகவங்கி வகை I அத்தகைய கணக்குகள் முடிவு பெறும்போது அதனை வெளிநாட்டிற்கு அனுப்பமுடியுமா?

ஆம். அங்கீகரிக்கப்பட்ட வணிகவங்கி வகை I கீழ்க்கண்டவற்றை உறுதி செய்து கொள்ளவேண்டும்.  இந்தியாவிற்கு வெளியே அனுப்பப்பட வேண்டிய நிதி வெளிநாட்டிலிருந்து பெறப்பட்டது அல்லது அவ்வப்போது திருத்தி அமைக்கப்படும் ரிசர்வ் வங்கி அறிவிக்கை எண் FEMA 13/2000 3-5-2000 தேதியிட்டதன்படி அனுப்புவதற்கு அனுமதிக்கப்பட்டதாகவோ அல்லது அனுப்பக்கூடிய தன்மை கொண்டதாகவோ இருக்கவேண்டும்.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்