Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 
 
 
 
 
 
முகப்பு >> தமிழ் - Urban Banks Department
 

நகர்ப்புற வங்கிகள் துறை

            தொடக்கநிலை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள், பிரபலமாக நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் என்றழைக்கப்படும் இத்தகு வங்கிகளை நெறிப்படுத்தி, மேற்பார்வையிடும் பொறுப்பு ரிசர்வ் வங்கியின் நகர்ப்புற வங்கிகள் துறையிடம் விடப்பட்டுள்ளது.  1926 தொடக்கநிலை நகர்ப்புற கூடுறவு வங்கிகளைக் கண்காணிக்கும் வேளையில், நகர்ப்புற வங்கிகள்துறை பின்வரும் மூன்று முக்கியப் பணிகளைச் செய்கிறது. 
(1) நெறிப்படுத்தும், (2) மேற்பார்வையிடும், (3) வளர்ச்சி சார்ந்த பணிகள்.  மேற்குறிப்பிட்ட மூன்றுவிதமான பணிகளைத் தனது 17 பிராந்திய அலுவலகங்கள் மூலமாக இத்துறை செய்கிறது.

 

(1) நெறிப்படுத்தும் பணிகள்

(அ)       புதிய தொடக்கநிலை நகர்ப்புற கூடுறவு வங்கிகளுக்கு உரிமம் வழங்குதல்.

            கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தும் வகையில், வங்கிகள் விதிமுறைச் சட்டம் 1949 (Banking Regulation Act, 1949) ன் சட்டப்பிரிவு எண் 22ல் கொடுக்கப்பட்டுள்ள கருத்தின்படி, வணிக வங்கியைப் போலவே, தொடக்கநிலை நகர்ப்புறக் கூட்டுறவு வங்கியும் தனது வங்கி வர்த்தகத்தைத் தொடங்கிட ரிசர்வ் வங்கியிடமிருந்து உரிமம் பெறுவது அவசியம்.

(ஆ)       நகர்ப்புற கூடுறவு வங்கிகளுக்கு பொருந்தக் கூடிய சில வங்கிகள் சார்ந்த சட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி வர்த்தகம் செய்து வந்த, மார்ச் 1, 1966ம் தேதியன்று நடைமுறையிலிருந்து வர்த்தகம் செய்த சில நகர்ப்புற கூடுறவு வங்கிகள் உரிமம் பெற்றிட வங்கிகள் விதிமுறைச் சட்டம் 1949 (BR Act 1949) சட்டப்பிரிவு எண் 22(2)ன் கீழ், கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருத்தமானவைகளின் கருத்துப்படி, ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பம் செய்திட வேண்டும்.  அத்தகு வங்கிகள் தமது வங்கி வர்த்தகச் செய்திட உரிமம் பெறுவதற்கு 3 மாதங்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது.  ஒரு தொடக்கநிலைக் கடன் சங்கம், தனது பங்கு மூலதனம் மற்றும் இருப்புத்தொகை சேர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டும் வேளையில் தொடக்க நிலைக் கூட்டுறவு வங்கியாக மாறுகிறது.  அவ்வாறு அது மாறும்போது ரூ.1 லட்சத்திதை தாண்டிய அந்த குறிப்பிட்ட நிலைகளில் உள்ள உரிமம் பெறாத வங்கிகள் ரிசர்வ் வங்கியால் உரிமம் மறுக்கப்படும் காலம்வரை தமது வங்கி வர்த்தகத்தைச் செய்யலாம்.

(இ)       கிளைக்கு உரிமம் பெறுதல்

வங்கிகள் விதிமுறைச் சட்டம் 1949 (BR Act 1949) (கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பொருந்துமளவில்) சட்டப்பிரிவு எண் 23ன்படி தொடக்கநிலை நகர்ப்புற கூடுறவு வங்கிகள் கிளைகள் திறப்பதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவேண்டும்.

(ஈ)       சட்டரீதியான பொறுப்புகள் குறித்த கருத்துக்கள்

வங்கிகள் விதிமுறைச் சட்டத்தின்படி (கூட்டுறவு சங்களுக்குப் பொருந்துமளவில்) கூறப்பட்டுள்ள கருத்துக்களைப் பின்பற்றுதலை கண்காணித்து நெறிப்படுத்தும் பொறுப்பு ரிசர்வ் வங்கியின் நகர்ப்புற வங்கித் துறைக்கு உண்டு.  அத்தகைய பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் பின்வருவன.

1.  முறைந்தபட்ச பங்கு முதலீடு

பங்கு முதலீடு மற்றும் இருப்புத்தொகையும் சேர்த்து உண்மையில் அல்லது மாற்றும் விதத்தில் ரூ.1 லட்சத்திற்கு கீழேயுள்ள எந்த ஒரு தொடக்கநிலை நகர்ப்புறக் கூடுறவு வங்கியும், வங்கிகள் விதிமுறைச் சட்டம் 1949 (BR Act 1949)ன் சட்டப்ப்ரிவு எண் 11ன்படி, (கூட்டுறவு சங்களுக்குப் பொருந்துமளவில்) வங்கி வர்த்தகத்தை ஆரம்பிக்கவோ நடத்தவோ முடியாது.

2.  ரொக்க இருப்பு விதிதம் (CRR) மற்றும் சட்டபூர்வமான எளிதில் பணமாக மாற்றக்கூடிய சொத்துக்கள் விதிதம் (SLR)  - கடைப்பிடித்தல்

            வணிக வங்கிகள் போலவே, தொடக்கநிலை நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பண இருப்பாகவும், எளிதில் பணமாக்கும் சொத்தாகவும் வைத்திருத்தல் அவசியம், ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934ன் சட்டப்பிரிவு எண் 42ன்படி, பட்டியலிடப்பட்ட தொடக்கநிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் சராசரியாகத் தனது தினசரி இருப்பாக தனது நிகர் இந்தியாவிலுள்ள கேட்பு மற்றும் காலவரைக்குட்பட்ட பொறுப்புகளில் 5%ஐ ரிசர்வ் வங்கியின் வசம் வைத்திருக்க வேண்டும்.  வங்கிகள் விதிமுறைச் சட்டம் 1949ன் (BR Act, 1949) சட்டப்பிரிவு எண் 18ன்படி (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துமளவில்) பட்டியலிடப்படாத நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் தமது மொத்த “கேட்பு மற்றும் கால வரையறைக்குட்பட்ட” பொறுப்புகளில் 3%ஐ தினசரி ரிசர்வ் வங்கியின் வசம் இருப்பில் வைக்க வேண்டும்.  பட்டியலிடப்பட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு CRR ரிசர்வ் வங்கியிடம் கணக்கிலேயே இருப்பாக வைத்திருக்க வேண்டும்.  ஆயின் பட்டியலிடப்படாத கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை, CRRஐ பணமாகத் தங்கள் கையிருப்பாகவோ அல்லது நடப்புக் கணக்காக ரிசர்வ் வங்கியிடமோ குறிப்பிட்ட மாநிலத்தின் மாநிலக் கூட்டுறவு வங்கியிடமோ பொதுத்துறை வங்கியிடமோ நிகர நடப்புக் கணக்கு இருப்பாக் வைத்திருக்கலாம்.  வங்கிகள் விதிமுறைச் சட்டம் 1949 (BR Act, 1949) சட்டப்பிரிவு எண் 24ன்படி (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துமளவில்)  பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நகர்ப்புறத் தொடக்க நிலை கூட்டுறவு வங்கிகள் ஒவ்வொன்றும் தமது பணக் கையிருப்போடு கூடவே பணமாக எளிதில் மாற்றத்தக்க தங்கம், பணம் மற்றும் வில்லங்கம் இல்லாத அனுமதிக்கப்பட்ட பத்திரங்கள் வடிவில் மொத்த “கேட்பு மற்றும் கால வறையறைக்குட்பட்ட” பொறுப்புகளில் 25% அளவிலாவது வைத்திருக்க வேண்டும்.  வகுத்துத் தரப்பட்ட குறிப்பிட்ட SLR அளவிற்கு நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் ஒரு குறிப்பிட்ட தொகையளவிற்கு கீழ்க் கண்ட வகையான பத்திரங்களில் வைத்திருக்கலாம்.

தொடர் எண்

வங்கியின் வகை

குறைந்தபட்ச SLR அரசு மற்றும் இதரவகை சார்ந்த அனுமதிக்கப்பட்ட பத்திரங்கள் – நிகர கேட்பு மற்றும் கால வரையறைக்குட்பட்ட (NDTL) பொறுப்புகளின்” சதவிகிதமாக

1.

பட்டியலிடப்பட்ட வங்கிகள்

25%

2.

பட்டியலிடப்படாத வங்கிகள்

 

 

(a)  NDTL ரூ.25 கோடி மற்றும் அதற்கு மேல்

15%

 

(b)  NDTL ரூ.25 கோடிக்கு கீழ்

10%

 

2.  மேற்பார்வைப் பணிகள்

            நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் தமது பணிகளை வாடிக்கையாளர் மற்றும் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் நலன் கருதி செயல்பட்டு ரிசர்வ் வங்கி விதிக்கும் வழிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றனவா என்பதை உறுதிசெய்யும்பொருட்டு நகர்ப்புற வங்கித் துறை 2 ஆண்டுக்கு அல்லது ஒராண்டுக்கு ஒரு முறை அல்லது அதற்கு மேல் வங்கியின் நிதி நிலை, படி நிலை இவர்றைப் பொறுத்து அவ்வங்கியிடங்களிலேயே ஆய்வுகள் மேற்கொள்ளலாம்.  நடப்பிலுள்ள விதிமுறைக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், வங்கியின் செயல்பாடுகளால் வாடிக்கையாளருக்கு பாதகங்கள் ஏற்படுமா?  வங்கியின் கடன் தீர்க்கும் ஆற்றல் அதன் கடன் பொறுப்புகளைக் கவனத்தில் கொண்டு எந்த அளவிலுள்ளது என்பனவற்றையெல்லாம் உறுதி செய்யும் பொருட்டே இந்த வங்கிகளின் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.  காலாண்டு, மற்றும் ஓராண்டு அறிக்கைகளின் அடிப்படையில் 100 கோடிக்கும் மேற்பட்ட வைப்புத்தொகையுடைய பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத வங்கிகளைக் கவனமாக மேற்பார்வையிடும் பணிகளை அவ் வங்கிகளின் அலுவலகங்களுக்குச் செல்லாமலே கூட மேற்கொள்ளலாம்.

3.  வளர்ச்சி சார்ந்த பணிகள்

ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 (RBI Act 1934) சட்டப்பிரிவு எண் 17ன் கருத்துப்படி ரிசர்வ் வங்கியானது அமைப்பு சார்ந்த கடன் உதவியை சிறிய மற்றும் குடிசைத்தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்கும் நோக்கில் நகர்புறக் கூட்டுறவு வங்கிகளுக்கு மறுநிதியுதவி அளிக்கிறது.  அத்தகைய மறுநிதியுதவி வங்கி வட்டி விகிதத்தில் அளிக்கப்படுகிறது.  புனேயிலுள்ள வேளாண் வங்கிக் கல்லூரியின் மூலம் நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளின் தலைமை மற்றும் மத்திய தள மேலாண்மை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

4.  நகர்ப்புற வங்கிகள் துறை:

துறைகள் / பிரிவுகள்

  1. நிர்வாகம்

அத்துறையின் பணியாளர்கள் சார்ந்த விஷயங்களை இப்பிரிவு கையாள்கிறது.

 

  1. புதிய வங்கி மற்றும் வங்கிக்கிளைகளுக்கு உரிமம் வழங்கல்

வங்கி உரிமம் வழங்குவதற்கான திட்டக்கொள்கையை இப்பிரிவு வகுத்திருக்கிறது. மேலும் கிளைகள் திறப்பதற்கான மையங்களையும் ஒதுக்கீடு செய்து அதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள பிராந்திய அலுவலகங்களுக்கு அதிகாரம் வழங்கிடும் கூட்டுறவுச் சங்கங்களை நகர்ப்புற வங்கிகளாக மாற்றுவது குறித்தும் இது செயற்பாடுகளை மேற்கொள்ளும்.

 

  1. தகவல் அறிக்கைகள்

 

ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934ன் சட்டப்பிரிவு எண்.42ன்படி பட்டியலிடப்பட்ட நகர்ப்புற வங்கிகள் விதிமுறைச் சட்டத்தின் (BR ACT 1949) (கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்துமளவில்) கருத்துப்படியும் சட்டரீதியாக தரவேண்டிய தகவல் அறிக்கைகள் அளித்துள்ளனவா என்பதனை ஒவ்வொரு பிராந்திய அலுவலகத்திலுள்ள  அறிக்கைப்பிரிவு மேற்பார்வை செய்திடும்.

மேற்குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளை நகர்ப்புறவங்கிகள் பின்பற்றி உள்ளனவா என்பதனையும் இல்லாவிடில் அந்த நகர்ப்புற கூட்டுறவு வங்கிமீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதனையும் இப்பிரிவு தீர்மானிக்கும்

 

  1. வங்கிகள் மேற்பார்வை

ஆய்வறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகள் மற்றும் ஒழுங்கீனங்களைச் சரி செய்ய நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்கின்றன என்பதனை ஆய்வு செய்யவும் மேற்பார்வையிடவும் இத்துறை ஏற்பாடு செய்கிறது.  நிதியளவில் வலிமையற்ற நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மறுகட்டமைப்பு செய்யும் பணியில் அந்தந்த மாநிலத்தின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரோடு இணைந்து இப்பிரிவு செயலாற்றும்.

 

  1. வங்கிக்கொள்கை

இப்பிரிவு விவேகமான முறைமைகள் மற்றும் முதலீடு ஆகியவைகளுக்கு கொள்கைகளை வகுக்கிறது.  பிரதான துறை இலக்குகள், மறுநிதியளிப்பு, வட்டிவிகிதங்களுக்கு சி.ஆர்.ஆர்., எஸ்.எல்.ஆர். இவைகளுக்கு உத்தரவுகள் அளித்தல் பகுதியளவு வங்கி நடவடிக்கைகளான வணிக வங்கிச்சேவை, தவணையில் வாங்கும் முறை, குத்தகைமுறை, காப்பீடு வர்த்தகம் ஆகியவைகளை இப்பிரிவு வகுக்கிறது.

இது தவிர இப்பிரிவு, வட்டாரக்குழுமம், மத்தியக்குழுமம், நிதி சார்ந்தவைகளுக்கான மேற்பார்வைக்குழுமம் ஆகியவற்றிடமிருந்து வரும் ஆணைகளை நிறைவேற்றுகிறது. அதோடு வங்கியின் வெளியீடுகளான ஆண்டு அறிக்கை, இந்தியாவில் வங்கித்துறையின் போக்கும் முன்னேற்றமும் என்பதைப்பற்றிய அறிக்கை, பணம், நிதி மற்றும் பலவற்றிற்கு தேவையான விவரங்களை அளிக்கிறது.

 

மேலும் இப்பிரிவு, வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் 1949 (AACS) ஷரத்துகளுக்கு விளக்கம் அளிக்கிறது.  அவற்றிற்கு திருத்தங்கள் கொண்டு வருவதும் அரசாங்கத்தோடு ஓன்றிணைந்து செயல்படுதலையும் செய்கிறது.  பல்வேறு மாநில அரசுகளோடு தொடர்பு கொண்டு மாநில கூட்டுறவு சங்கங்களின் சட்டங்களில் திருத்தங்களை தெரிவிப்பது, திவாலாகும் வங்கிகள் சம்பந்தமான விஷயங்களில் டி.ஐ.சி.ஜி.சி(DICGC)யுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது, நகர கூட்டுறவு வங்கிகளின் பட்டியலை பராமரித்து புதுப்பித்து, ஒரு லட்சத்திற்கும் மேலாக மூலதன முதலீடு உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களை மேற்பார்வை செய்வது,    வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் 9,29 & 31 பிரிவுகளை கடைபிடிப்பதை கண்காணிப்பது, வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கண்காணிப்பிலிருந்து வெளியே செல்லும் கூட்டுறவு வங்கிகளை கவனிப்பது ஆகியவைகளை செய்கிறது.

 

 
மேலே செல்ல 
 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்