Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (259.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 08/09/2017
இந்தியன் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கி லிமிடெட், லக்னௌ, உத்தரப்பிரதேசத்திற்கு வழிகாட்டுதல் உத்தரவுகளின் காலம் நீட்டிப்பு

செப்டம்பர் 08, 2017

இந்தியன் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கி லிமிடெட், லக்னௌ,
உத்தரப்பிரதேசத்திற்கு வழிகாட்டுதல் உத்தரவுகளின் காலம் நீட்டிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியன் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கி, லக்னௌ, உத்தரப்பிரதேசம் வங்கிக்கு, செப்டம்பர் 12, 2017 முதல் மார்ச் 11, 2018 வரை மேலும் 6 மாதங்களுக்கு மறுஆய்வுக்கு உட்பட்டு வழிகாட்டுதல் உத்தரவுகளின் காலத்தை நீட்டித்துள்ளது. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 35A உப பிரிவு 1-ன் கீழ், ஜுன் 04, 2014 தேதியில் அளித்த உத்தரவின்படி ஜுன் 12, 2014 முதல் கட்டுப்பாடுகளை விதித்தது.

ஜூலை 30, 2014, டிசம்பர் 08, 2014, ஜுன் 02, 2015, செப்டம்பர் 07, 2015, அக்டோபர் 19, 2015, டிசம்பர் 07, 2015, மார்ச் 04, 2016, செப்டம்பர் 02, 2016, நவம்பரி 25, 2016 மற்றும் மார்ச் 09, 2017 ஆகிய தேதியிட்ட உத்தரவுகளின் மூலம் உத்தரப்பிரதேசம், லக்னௌவில் உள்ள மேற்படி வங்கிக்கு விதித்த கட்டுப்பாடுகளில் மாற்றங்கள் /கால நீட்டிப்பை இந்திய ரிசர்வ் வங்கி கொண்டுவந்தது.. மேற்கூறியபடி வெளியிடப்பட்ட உத்தரவுகள் செப்டம்பர் 11, 2017-ல் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு, செப்டம்பர் 12, 2017 முதல் மார்ச் 11, 2018 வரை, செப்டம்பர் 01, 2017 தேதியிட்ட உத்தரவின்படி மறு ஆய்வுக்கு உட்பட்டு நீட்டிக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் செப்டம்பர் 01, 2017ல் வெளியிடப்பட்ட உத்தரவுகளின் பிரதி, வங்கியின் வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படும்.

இவ்வாறு, இந்திய ரிசர்வ் வங்கி மாற்றங்கள் பிறப்பித்ததை மட்டுமே கருத்தில்கொண்டு வங்கியின் நிதிநிலை மேம்பட்டதாகவோ அல்லது மோசமடைந்து விட்டதாகவோ கருதக்கூடாது. சூழ்நிலைகளைப் பொறுத்து இந்திய ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளை மாற்றியமைக்கலாம்.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிகை வெளியீடு – 2017-2018/683

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்