Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (283.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 02/08/2017
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் – தி போபால் நகரிக் சஹகாரி வங்கி லிமிடெட், போபால் – காலம் நீட்டிப்பு

ஆகஸ்டு 02, 2017

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும்
பொருந்தும்)-ன் பகுதி 35A-ன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகள் –
தி போபால் நகரிக் சஹகாரி வங்கி லிமிடெட், போபால் – காலம் நீட்டிப்பு

பொதுமக்கள் தகவலுக்காக தெரிவிப்பது என்னவென்றால், இந்திய ரிசர்வ் வங்கி, பொதுமக்கள் நலன்பொருட்டு, இது அவசியம் என்று கருதி தி போபால் நகரிக் சஹகாரி வங்கி லிமிடெட், போபால், வங்கிக்கு, வெளியிட்ட அக்டோபர் 29,2012 தேதியிட்டது (ஜனவரி 25,2017 தேதியிட்டதுடன் சேர்த்துப்படிக்க) உத்தரவின் காலத்தை ஜுலை 31, 2017வரை நீட்டித்தது.அதன்படி வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும், சட்டப்பிரிவு எண் 35 A (1) மற்றும் பிரிவு 56 உடன் இணைந்த கருத்தின்படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தி போபால் நகரிக் சஹகாரி வங்கி லிமிடெட், போபால், வங்கிக்கு, வெளியிட்ட அக்டோபர் 29,2012 தேதியிட்ட கட்டுப்பாடு உத்தரவுகளின் காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு கடைசியாக ஜுலை17,2017வரை நீட்டிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் ஜுலை 25 ,2017 தேதியிட்ட உத்தரவுகளின் மூலம் ஆகஸ்டு 1, 2017 முதல் ஜனவரி 31,2018 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு மறு ஆய்வுக்கு உட்பட்டு நீட்டிக்கப்படுகிறது. பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் வெளியிடப்பட்ட உத்தரவுகளின் பிரதி, வங்கி வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படும்.

இந்திய ரிசர்வ் வங்கி இவ்வாறு, உத்தரவுகள் பிறப்பித்ததை மட்டுமே கருத்தில்கொண்டு வங்கியின் உரிமம் ரத்துசெய்யப்பட்டதாகக் கருதக்கூடாது. மறு ஆய்வு செய்யப்படும் வரை இவ்வங்கி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, வங்கி வர்த்தகத்தை மேற்கொள்ளலாம். சூழ்நிலைக்கேற்றவாறு ரிசர்வ் வங்கி உத்தரவுகளில் மாற்றங்களைக் கொண்டுவரக் கருதிடும்.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிகை வெளியீடு – 2017-18/318

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்