Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (211.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 19/12/2016
உட்பொதிந்த “L” எழுத்துடன், நோட்டின் வரிசை எண்கள் அளவில் ஏறுமுகமாக, தடவிப் பார்த்து உணரும் வகையில் அச்சு இல்லாமல் 50 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு

டிசம்பர் 19, 2016

உட்பொதிந்த “L” எழுத்துடன், நோட்டின் வரிசை எண்கள் அளவில் ஏறுமுகமாக,
தடவிப் பார்த்து உணரும் வகையில் அச்சு இல்லாமல் 50 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் வெளியீடு

இந்திய ரிசர்வ் வங்கி, 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வரிசை வங்கி நோட்டுகளில் ஆளுநர் Dr. உர்ஜித் R.படேல் அவர்கள் கையெழுத்துடன், நோட்டின் இரு பக்க வரிசை எண்களிலும் உட்பொதிந்த “L” எழுத்துடன், பின்புறத்தில் நோட்டு அச்சிடும் ஆண்டு “2016“ என்பது அச்சடிக்கப்பட்ட 50 மதிப்பிலக்க ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது.

தற்போது வெளியிடப்படவிருக்கும் நோட்டுகளில் இருபக்கமும் வரிசை எண்கள் அளவில் ஏறுமுகமாக உள்ளன. ஏற்கனவே பத்திரிக்கை வெளியீட்டு எண் 2016-2017/1403, டிசம்பர், 04, 2016 மற்றும் எண் 2016-2017/751, செப்டம்பர் 23, 2016 மூலம் வெளியிடப்பட்டுள்ள மகாத்மா காந்தி வரிசை –2005, 50 வங்கி நோட்டுகளை ஒத்ததாக இவை இருக்கும்.

இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து 50 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு - 2016-2017/1578

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்