Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (139.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 13/11/2016
ரூ.500 மற்றும் ரூ.1000 மதிப்பிலக்கநோட்டுகள் சட்டப்படி
செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது –
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு

நவம்பர் 12, 2016

ரூ.500 மற்றும் ரூ.1000 மதிப்பிலக்கநோட்டுகள் சட்டப்படி
செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது –
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு

முன்னர் புழக்கத்திலிருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக் கொண்ட திட்டமானது, வங்கி முறைமைக்கு மிகப்பெரிய பொறுப்பை உருவாக்கியுள்ளது. மிக விரைவாக அதே சமயம் சிக்கல்களின்றி, இந்தக் குறிப்பிட்ட நோட்டுகளை புழக்கத்திலிருந்து விலக்கி, அவற்றைப் பெற்றுக்கொண்டு, அவற்றிற்கு மாற்றாக சட்டப்படி செல்லுபடியாகும் மற்ற மதிப்பிலக்க நோட்டுகளை வழங்க வேண்டியுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திற்குள், அனைத்து தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்களிலிருந்து (ATMs) மிக விரைவாக இந்த மதிப்பிலக்க நோட்டுகள் எடுக்கப்பட்டு, இதர மதிப்பிலக்கநோட்டுகள் நிரப்பப்பட்டு, ATM-களின் கணிப்புக் கூறுகள் மாற்றப்பட்டு, நாடெங்கிலும் உள்ள அனைத்து வங்கிகளும் இரண்டு நாட்களுக்குள், செயல்பட்டு, பொதுமக்களுக்கு அவற்றை அறிவிப்பு வெளியான ஒரு நாளுக்குப் பின் வழங்கத் தயார்நிலையில் வைக்கப்படும் நிலை நேரிட்டது. பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களைக் குறைக்க அனைத்து வங்கிக் கிளைகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் சாதாரண வேலை நேரத்திற்கும் அதிகமாகவே செயல்பட்டு, கூடுதல் முகப்புகளை அமைத்துப் பெருமளவில் திரண்ட பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து வருகின்றன. நவம்பர் 10, 2016 அன்று சுமார் 10 கோடி மாற்றுப் பரிவர்த்தனகள் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலைமையைச் சீராக்கவும்., பொதுமக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் அனைத்து வங்கிக்கிளைகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகங்களின் முகப்புகள் சனி மற்றும் ஞாயிறு அன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

சட்டப்படி செல்லுபடியாகும் இதர மதிப்பிலக்க நோட்டுகளின் (ரூ. 2000 நோட்டுகள் உட்பட) தேவையை உணர்ந்து நாடெங்கிலும் உள்ள 4000-ற்கும் மேற்பட்ட கருவூல வங்கிக்கிளைகளில் போதுமான அளவிற்கு நோட்டுகள் இருப்பில் வைக்கப்படுகின்றன. வங்கிக்கிளைகள் அவற்றிடமிருந்து உரிய தேவைகளைக் கேட்டுப்பெறவும், வழிவகை செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேவைகளைச் சமாளிக்க நோட்டடிக்கும் அச்சகங்களும் முழுவீச்சில் செயல்பட்டு நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, போதுமான அளவில் நோட்டுகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுவருகிறது.

இவ்வாறு விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வேளையில் பொதுமக்கள் பணம் செலுத்த ரூ பே கார்டு (Rupay card), ப்ரீ-பெய்டு கார்டு (Pre-paid card), கடன்/பற்று அட்டை (credit / debit card) மொபைல் பேங்கிங் (mobile banking) இணையதளம் (internet banking) போன்ற இதர வழிகளைப் பின்பற்றலாம். ஜன் தன் யோஜனா கணக்குகள் மற்றும் அதன் அட்டைகளை வைத்திருப்போர் அவற்றைப் பயன்படுத்தலாம். இவ்வாறு செயல்படுவதால், ரொக்கப் பணத்திற்கான அதிகப்படியான தேவையைக் குறைக்கலாம். கணினிமயமான உலகில் வாழ்வதற்கான உங்கள் அனுபவத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட மதிப்பிலக்க ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மற்ற மதிப்பிலக்க நோட்டுகளைப் பெறும் திட்டம் நாடெங்கிலும் டிசம்பர் 30, 2016 வரை அமலில் இருக்கும். அதற்குப் பிறகும், சில குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் இந்தவசதி உண்டு. ஆகவே போதுமான கால அவகாசம் உள்ளதால், பொதுமக்கள் நோட்டுகளை மாற்றுவதற்கு அவசர அவசரமாக செயல்பட்டு, வங்கிக்கிளைகள் மீது நெருக்கடி கொடுப்பதைத் தவிர்க்கலாம்.

(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்

Press Release: 2016-2017/1190

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்