Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (148.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 04/07/2016
திரு. N. S. விஸ்வநாதன், இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனராக பதவியேற்றார்

ஜூலை 04, 2016

திரு. N. S. விஸ்வநாதன், இந்திய ரிசர்வ் வங்கியின்
துணை ஆளுனராக பதவியேற்றார்

திரு. N. S. விஸ்வநாதன், இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனராக இன்று பதவியேற்றார். இந்திய அரசு, ஜூலை 29, 2016 அன்று அவரை இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனராக நியமித்தது. பதவியேற்றுக்கொண்ட, அல்லது ஜூலை 4, 2016-க்கு பிறகு மூன்று ஆண்டுகள் வரை, அல்லது வேறு ஆணைகள் வரும்வரை, இவற்றில் எது முன்னதோ அதுவரை இப்பதவியை வகிக்கலாம்.

திரு. N. S. விஸ்வநாதன் அவர்கள், துணை ஆளுனராக பதவி உயர்த்தப்படுவதற்கு முன், இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குராக இருந்தார். துணை ஆளுனராக திரு. விஸ்வநாதன் வங்கி ஒழுங்குமுறைத் துறையையும் (Department of Banking Regulation – DBR), கூட்டுறவு வங்கி ஒழுங்குமுறைத் துறையையும் (Department of Co-operative Banking Regulation – DCBR), வங்கிசாரா நிதிநிறுவன ஒழுங்குமுறைத் துறையையும் (Department of Non-Banking Regulation – DNBR), வைப்புக் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகம் (Department of Insurance and Credit Guarantee Corporation – DICGC), நிதியியல் ஸ்திரத்தன்மை பிரிவு (Financial Stability Unit – FSU), ஆய்வுத்துறை (Inspection Department – ID), இடர் வரவு கண்காணிப்புத் துறை (Risk Management Department – RMD) மற்றும் செயலாளரின் துறை (Secretary Department– SD) ஆகியவற்றை கவனித்துக்கொள்வார்.

திரு. விஸ்வநாதன் அவர்கள், ஒரு தொழில்முறை மைய வங்கியியலாளர். இவர் 1981-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியில் பணியில் சேர்ந்தார். வங்கிகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேற்பார்வையிடல், வங்கிசாரா நிதிநிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள், பணத்தாள் மேலாண்மை, அன்னியச் செலாவணி மற்றும் மனிதவள மேலாண்மை ஆகியவை சார்ந்ததுறைகளில் திறம்படப் பணியாற்றியுள்ளார். மொரீஷியஸ் நாட்டின் மைய வங்கியான, பேங்க் ஆப் மொரீஷியஸில் மேற்பார்வைத் துறைக்கான இயக்குனராக இருந்தார். ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பிலும் இருந்தார்.

பல்வேறு கால கட்டங்களில், மூன்று பொதுத்துறை வங்கிகளின் இயக்குனர்கள் குழுமத்தில் திரு. விஸ்வநாதன் ரிசர்வ் வங்கியின் நியமன உறுப்பினராக இருந்தார். ஐஎஃப்சிஐ (IFCI)-யின் கண்காணிப்பு அதிகாரியாகவும் உள்ளக தணிக்கையின் தலைவராகவும் இருந்தவர். பல்வேறு கமிட்டிகள், குழுக்கள், செயல் அமைப்புகள் ஆகியவற்றோடு தொடர்புடையவர். பல்வேறு சர்வதேச கமிட்டிகளில் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதியாக இருந்தவர். அவையாவன – கொள்கை மேம்பாட்டுக்குழு உறுப்பினர், பிஐஎஸ் (BIS), பேசல் (Basel), பிஐஎஸ் மற்றும் பேசல், ஆகியவற்றின் மேக்ரோ புருடென்ஷியல் கொள்கை குழுவின் உறுப்பினர் மற்றும் சர்வதேச கடன் ஒருங்கிணைப்பு ஒழுங்குபடுத்துவோரின் தொடர்பு அமைப்பில் ஒரு அங்கத்தினர்.

ஜுன் 27, 1958 அன்று பிறந்த திரு. விஸ்வநாதன், பெங்களூர் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.

(அல்பனா கில்லவாலா)
முதன்மை ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2016–17/23

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்