Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (80.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 02/06/2016
10 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள் உட்பொதிந்த “V” எழுத்துடன் வெளியீடு

ஜூன் 02, 2016

10 மதிப்பிலக்க வங்கி நோட்டுகள்
உட்பொதிந்த “V” எழுத்துடன் வெளியீடு

இந்திய ரிசர்வ் வங்கி, மகாத்மா காந்தி வரிசை- 2005, வங்கி நோட்டுகளை ஆளுநர் டாக்டர் ரகுராம் G. ராஜன் அவர்கள் கையெழுத்துடன், நோட்டின் முன்புறம் எண்களுக்கான இரு பகுதிகளிலும் “V” என்ற உட்பொதிந்த எழுத்துடன், 10 மதிப்பிலக்கத்தில் விரைவில் வெளியிடுகிறது. நோட்டுகள் அச்சிடப்பட்ட ஆண்டு “2016“ என்று நோட்டின் பின்புறத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.,

தற்போது வெளியிடப்படவிருக்கும் நோட்டுகளின் வடிவமைப்பு எல்லாவிதத்திலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள மகாத்மா காந்தி வரிசை – 2005, 10 வங்கி நோட்டுகளை ஒத்ததாக இருக்கும்.

இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து 10 மதிப்பிலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு - 2015-2016/2802

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்