Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (159.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 22/10/2015
இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் 2015 ஐ அமல்படுத்தும்பொருட்டு இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலை வழங்குகிறது

அக்டோபர் 22, 2015

இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் 2015 ஐ அமல்படுத்தும்பொருட்டு இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலை வழங்குகிறது.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தை அமல்படுத்தும் பொருட்டு, இந்திய ரிசர்வ் வங்கி இன்று அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுக்கும் (ஊரக வங்கிகள் நீங்கலாக) வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

திட்டம்

இத்திட்டம் நடப்பிலுள்ள தங்கவைப்புத் திட்டம் 1999-க்குப் பதிலாக அமலாக்கம் செய்யப்படுகிறது. இருப்பினும், ஏற்கனவே பழைய திட்டத்தின் கீழ் நிலுவையிலுள்ள வைப்புகளை வைப்புதாரர்கள் முதிர்வுக்கு முன்னதாக எடுத்தாலன்றி, அவை தொடர்ந்திடும்.

இந்தியாவில் வாழும் தனிநபர்கள், இந்து கூட்டுக்குடும்ப அமைப்புகள், அறக்கட்டளை நிறுவனங்கள் மற்றும் SEBI-யின் சகாய பரஸ்பர நிதி நெறிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட பரஸ்பர சகாயநிதி / செலாவணி மாற்று நிறுவன நிதி அமைப்புகள் இத்திட்டத்தின் கீழ் வைப்புகளைப் போடமுடியும்.

இத்திட்டத்தின் கீழ் ஒருமுறை, ஒரு நேரத்தில் குறைந்தபட்சம் 30 கிராம் உலோகத் தங்கம் (கட்டிகள், நாணயங்கள், ஆபரணங்கள் {கல், இதர உலோகம் நீங்கலாக}) டெபாசிட்டாக அளிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் தங்க டெபாசிட்டுகளுக்கு உச்சவரம்பு ஏதுமில்லை. இந்த திட்டத்தின் நோக்கத்திற்காக சேகரித்துத் தூய்மை பரிசோதனை செய்யும் மையங்களாக, ப்யூரோ ஆப் இந்தியன் ஸ்டேன்டர்ட்ஸ் (BIS)ஆல் சான்றுரைக்கப்பட்டு, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மையங்களில் (CPTC). தங்கம் டெபாசிட் செய்யும் பொருட்டு அளிக்கப்படும். இதற்கு 995 தூய்மை நிலையில் உரிய வைப்புச்சான்றிதழ் வங்கிகளால் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் வைப்பின் அசல் மற்றும் வட்டி தங்கத்திலே குறிக்கப்படும்.

தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்ட வங்கியில் இருப்பாக தங்கத்தை 1- முதல் 3 ஆண்டுகள் வைத்துப் பராமரிக்கும் குறுகிய காலக் கணக்கு. 5 முதல் 7 ஆண்டுகள் வைத்திருக்கும் நடுத்தரகாலக் கணக்கு. 12 முதல் 15 ஆண்டுகள் வைத்திருக்கும் கணக்கு நீண்டகால வைப்புக் கணக்கு என்ற வகையில்அமைந்திடும். இவற்றில் முதல்வகைக் கணக்கு வங்கி இருப்பாகவும் அடுத்தவகைகள் இந்திய அரசின் சார்பில் கணக்கில் வைத்திருக்கப்படும்.

வங்கிகள் தாமே நிர்ணயிக்கும் குறைந்தபட்ச முடக்கப்பட்ட காலம், அபராதம் ஆகிய கட்டளைகளுக்கு உட்பட்டு, , தங்க டெபாசிட்டை முதலீட்டாளர்கள் முதிர்வுக்கு முன்னரே எடுத்துக்கொள்ள வசதி உண்டு.

சுத்திகரிப்பு மற்றும் தர அளவீடு சோதனைச் சாலைகளில் தங்கத்தின் தூய்மை பரிசோதிக்கப்பட்டு, அது வர்த்தகத்திற்குரிய தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்ட நாள், அல்லது சோதனை சாலைகளில் வைப்புத் தங்கம் பெறப்பட்டதிலிந்து 30 நாட்கள் கழித்து, அல்லது வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் தங்கம் பெறப்பட்ட நாள் இந்த மூன்றில் எது முந்தியதோ, அந்தக் குறிப்பிட்ட நாளிலிருந்து தங்க வைப்பின் மீதான வட்டி கணக்கிடப்படும்.

பரிசோதனைச் சாலை CPTC / குறிப்பிடப்பட்ட வங்கிக் கிளை ஆகியவற்றில் தங்கம் அளிக்கப்பட்ட நாளிலிருந்து, மேற்கூறியபடி வட்டி கணக்கிட ஆரம்பிக்கப்படும் நாள் வரையுள்ள இடைப்பட்ட காலத்தில் வைப்பிற்காக கொடுக்கப்பட்ட தங்கம், அந்த வங்கியிடம் பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டதாகக் கருதப்படும்.

CRR, SLR இருப்புத் தேவைகள்

இத்திட்டத்தின் கீழ் வங்கியில் உள்ள குறுகிய காலக் கணக்கு, CRR, SLR கணக்கீட்டிற்கு வங்கியின் பொறுப்புகளில் அடங்கியதாகக் கருதப்படும். ஆயினும், புத்தகக்கணக்கில் இருப்பாக உள்ள தங்கம் இந்திய ரிசர்வ் வங்கியின் CRR, SLR தேவைகளைப் பூர்த்தி செய்ய கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் .

KYC விதிமுறைகள் பொருந்தும்

எல்லாவகையான டெபாசிட்டுகளில் உள்ள விதிமுறைகள் போலவே தங்க டெபாசிட் திட்டத்திற்கும் ‘வாடிக்கையாளர் அடையாள சான்றாவணங்கள்’ குறித்த விதிமுறைகள் (KYC) அமைந்திடும்.

தங்க டெபாசிட் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட தங்கத்தின் பயன்பாடு

தங்கத்தைப் பணமாக்கும் திட்டத்தின் கீழ், வங்கிகள் (STBD) (குறுகியகால நிதி) வைப்பின் கீழ் பெறப்பட்ட தங்கத்தை, இந்திய அரசின் தங்க நாணயங்களை அச்சடிக்க, MMTC/ தங்க ஆபரண வியாபாரிகள்/ தங்க டெபாசிட் திட்டத்தில் பங்கேற்கும் மற்ற வங்கிகள் ஆகியோருக்கு விற்கலாம் அல்லது கடனாக அளிக்கலாம். MLTGD-யின் கீழ் டெபாசிட்டாக பெறப்பட்ட தங்கம் MMTC அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு முகமை மூலம் ஏலம் விடப்படலாம். இந்த தங்க ஏலத்தில் RBI, MMTC, வங்கிகள் மற்றும் மத்திய அரசு இது தொடர்பாக அறிவிக்கும் இதர அமைப்புகள் பங்கேற்கலாம். குறிப்பிடப்பட்ட வங்கிகள் இந்த ஏலத்தில் பங்கேற்று வாங்கிய தங்கத்தை மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு நோக்கத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நேரிடர் மேலாண்மை

குறிப்பிடப்ட்ட வங்கிகள், தமது நிகர தங்க வர்த்தக மதிப்பை கவனத்தில் கொண்டு, தங்கத்தின் விலை மாற்றங்களால் ஏற்படும் நேரிடரை மேலாண்மை செய்திட, ஒரு முறைமையை வகுத்திடலாம். இதற்காக குறிப்பிட்ட வரம்புகளையும் அவை நிர்ணயம் செய்துகொள்ளலாம்.குறிப்பிடப்பட்ட வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள வழிகாட்டுதல்களுகுட்பட்டு, சர்வதேச சந்தைகள், லண்டன் தங்க சந்தை வர்த்தகத் தொடர்புகள் அல்லது OTC ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி, தங்கவிலை மாற்றங்களால் விளையும் நஷ்டத்திற்கு எதிராக காப்புவேலி அமைத்துக் கொள்ளலாம்.

புகார்த்தீர்வு

ரசீது அளித்தல், டெபாசிட் சான்றாவணம் அளித்தல், தங்க டெபாசிட்டுகளைத் திருப்பித்தருதல், வட்டி அளித்தல் போன்றவற்றில் குறைபாடுகள் தொடர்பாக குறிப்பிட்ட வங்கிகள் மீது புகார்கள் எழுமானால், அவை முதலில் வங்கியின் புகார் தீர்வு மையத்தால் தீர்க்கப்படும். இல்லையேல், அது இந்திய ரிசர்வ் வங்கியின் வங்கிக் குறைதீர்ப்பாளரால் கையாளப்படும்.

மத்திய அரசு தங்கத்தைப் பணமாக்கும் திட்டம்“ குறித்து செப்டம்பர் 15, 2015 தேதியிட்ட F. No. 20/6/2015-FT “அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் நோக்கம் வீடுகளிலும், நிறுவனங்களிலும் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை வெளிக் கொணர்ந்து, ஆக்கப்பூர்வமாக அதைப் பயன்படுத்தி, நாளடைவில் தங்கத்தின் இறக்குமதியைக் குறைத்தல். வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு எண் 35 (A)-ன்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு இது தொடர்பான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.

CPTC-க்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களின் பெயர்ப் பட்டியல் முடிவாகும் நிலையில் உள்ளது. மத்திய அரசு அதை விரைவில் வெளியிடும். இத் திட்டத்தின் கீழ் ஆவணத் தேவைகள் மற்றும் வங்கிகள், சுத்திகரிப்பு நிலையங்கள் CPTC-க்களுக்கு இடையேயான முத்தரப்பு ஒப்பந்தம் குறித்தவற்றை இந்திய வங்கிகள் சங்கம் முடிவு செய்துவருகிறது. வங்கிகளும் இத் திட்டத்தை அமல்படுத்தத் தேவையான செயல்பாடுகள் மற்றும் முறைமைகளை சீராக்கி வருகின்றன. இன்னம் ஒரு சில நாட்களில் இத் திட்டம் அமலாக்கம் செய்யப்படும் தேதி இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்படும்.

அல்பனா கில்லவாலா
முதன்மைத் தலைமைப் பொதுமேலாளர்

பத்திரிக்கை வெளியீடு :2015-2016/974

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்