Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (132.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 25/08/2015
இந்திய ரிசர்வ் வங்கி, லத்தூர் நகர கூட்டுறவு வங்கி, லத்தூர் மீது பண அபராதத்தை விதிக்கிறது

ஆகஸ்ட் 24, 2015

இந்திய ரிசர்வ் வங்கி, லத்தூர் நகர கூட்டுறவு வங்கி,
லத்தூர் மீது பண அபராதத்தை விதிக்கிறது

“உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்” (KYC) / விதிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களை மீறியதற்காக, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது) பிரிவு 47 A(1)(b) & பிரிவு 46 (4) ஷரத்துகளின் கீழ் அளிக்கப்பட்ட அதிகாரங்களின்படி, இந்திய ரிசர்வ் வங்கி, லத்தூர் நகர கூட்டுறவு வங்கி, லத்தூர் மீது ரூ.5.00 லட்சம் (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) பண அபராதத்தை விதித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கோரும் அறிவிப்பை, அந்த வங்கியிடம் வெளியிட்டது. அதற்காக அந்த வங்கி, தனது பதிலை எழுத்து மூலமாக அளித்தது. இந்த விஷயத்தில் உண்மைகளைப் பரிசீலித்த பிறகும் மற்றும் இது தொடர்பாக வங்கி அளித்த பதிலை ஆராய்ந்த பின்னரும், மீறல்கள் தண்டனைக்குரியவையே என்று இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்து அபராதத்தை விதித்துள்ளது.

சங்கீதா தாஸ்
இயக்குநர்

PRESS RELEASE: 2015-2016 / 490

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்