Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Date: 15/07/2002

மூலச் சுற்றறிக்கை – இந்தியாக்கு வெளியே பயணம் செய்ய அந்நியச் செலாவணி அளிப்பு

இந்தியாக்கு வெளியே பயணம் செய்ய

அந்நியச் செலாவணி அளிப்பு

2002, ஜூலை 1ஆம் தேதி அன்று

 

இந்திய ரிசர்வ் வங்கி

அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுத் துறை

மத்திய அலுவலகம்

மும்பை

ECD.CO.PCD.No.3/15.02.76/2002-03                                                                           ஜூலை 15, 2002

 

அந்நியச் செலாவணியில் அங்கீகரிக்கப்பட்ட

அனைத்து வணிகர்களுக்கும்

அன்புடையீர்,

மூலச் சுற்றறிக்கைஇந்தியாக்கு வெளியே பயணம்

செய்ய அந்நியச் செலாவணி அளிப்பு

 

2000 ஜூன் 1 முதல் அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம் 1999 அமலுக்கு வந்தது நீங்கள் அறிவீர்கள்.  நடப்புக் கணக்கு நடவடிக்கையாக, எந்த ஒரு நபரும், அச்சட்டத்தின் 5ஆவது பிரிவின்படி, அங்கீகரிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து அந்நியச் செலாவணியை வாங்கவோ, விற்கவோ முடியும்.  பொது நலன் கருதி, மத்திய அரசு சில நிபந்தனைகளை ரிசர்வ வங்கியைக் கலந்து கொண்டு நடப்புக் கணக்கு நடவடிக்கைகளில் அந்நியச் செலாவணி பயன்படுத்தப்படுவதற்குச் சில நிபந்தனைகளை விதிக்கலாம்.  2001 மார்ச் 30 தேதியிட்ட மத்திய அரசின் அறிவிப்பு எண் 50301(E) மற்றும் 2003 மே 3 தேதியிட்ட அறிவிப்பு எண் GSR 381(E)ஐப் பார்க்கவும்.  2001 மார்ச் 30 தேதி வரை திருத்தப்பட்ட அறிவிப்பு இணைக்கப்பட்டுள்ளது.

2.                இந்தியாவுக்கு வெளியே பயணத்திற்கு அந்நியச் செலாவணி அளிப்பது பற்றி அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களுக்கு ரிசர்வ வங்கி தனது பல்வேறு சுற்றறிக்கைகள் வாயிலாக ஆணைகள் வழங்கியுள்ளது.

3.                அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களும், முழுநிலை பணம் மாற்றுபவர்களும்இந்தியாவுக்கு வெளியே பயணம் செய்ய அந்நியச் செலாவணி அளிப்புபற்றிய அனைத்துச் சுற்றறிக்கைகளையும் ஒரே இடத்தில் ஒரே சமயம் பார்ப்பதற்கு வசதியாக, 2002, ஜூலை 1ஆம் தேதி முடிய வெளியிட்ட அனைத்துச் சுற்றறிக்கைகளையும் உள்ளடக்கி, 2001 ஆகஸ்ட் 13 ஆம் தேதியிட்ட ECD.CO.PCD.No.17/15.02.76/2001-02 கடிதத்துடன் ஒரு மூலச் சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த மூலச் சுற்றறிக்கை கீழே கண்ட சுற்றறிக்கைகளை உள்ளடக்கியது.

1.  AR(DIR Series) Circular No.1 AP (FL Series/Circular No.1                       ஜூன் 1, 2000

2. AR(DIR Series) Circular No.19                                                                     அக்டோபர் 30, 2000

3. AR(DIR Series) Circular No.20 AP (FL Series/Circular No.2                       நவம்பர் 16, 2000

4. AR(DIR Series) Circular No.11 AP (FL Series/Circular No.1                       நவம்பர் 13, 2001 

6. AR(DIR Series) Circular No.12 AP (FL Series/Circular No.2                       நவம்பர் 23, 2001  

 

உண்மையுள்ள

 

கிரேஸ் கோஷி

தலைமைப் பொது மேலாளர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தியாவுக்கு வெளியே பயணம் மேற்கொள்ள

அந்நியச் செலாவணி அளிப்பு சம்பந்தமான மூலச் சுற்றறிக்கை

பகுதி I      அந்நியச் செலாவணி நிர்வாகம் (நடப்பு கணக்கு நடவடிக்கை விதிகள்)    2000

பகுதி  II     அங்கீகரிப்பப்பட்ட வணிகர்கள் பயணத்திற்கு வழங்கும் அந்நியச் செலாவணி

பகுதி  III    முழுநிலை பணம் மாற்றுபவர்கள் பயணத்திற்கு வழங்கும் அந்நியச் செலாவணி

பகுதி I

 

புதுதில்லி, மே 3, 2000

(2001 மார்ச் 30 தேதி வரை, அறிவிப்பு S.O.301(E) இன்படி திருத்தப்பட்டது)

GSR 38(E) ….. அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம், 1999 பிரிவு 5 துணைப் பிரிவு (1) பகுதி (a) பிரிவு 46 துணைப்பிரிவு (2)இல் சொல்லப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ், ரிசர்வ வங்கியைக் கலந்து ஆலோசித்து, பொது நலன் கருதி, மத்திய அரசு இந்த விதிகளை அறிவிக்கிறது.

 

1.  சிறிய தலைப்பும் துவக்கமும்: (1) அந்நியச் செலாவணி நிர்வாகம் (நடப்பு கணக்கு நடவடிக்கை விதிகள்) 2000 (2) 2000 ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

2.  விளக்கம்: விதிகளின் பொருளடக்கம் வேறுவகைகளில் தேவைப்படாத வரை

() சட்டம்: என்பது அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம், 1999 (1999இல் 42) ஐக் குறிக்கும்.

() அளிப்பு: என்பது அங்கீகரிக்கப்பட்ட நபரிடமிருந்து அந்நியச் செலாவணி பெறுதல்.

இது கடன் சான்று, பன்னாட்டு கடன் / பற்று அட்டை, தானியங்கி பணம் ஏற்பு / வழங்கு வங்கி அட்டை போன்ற அந்நியச் செலாவணி பொறுப்பை ஏற்படுத்தும் உபகரணங்களையும் உள்ளடக்கும்.

() அட்டவணை: இவ்விதிகளுக்கு இணைக்கப்பட்ட அட்டவணையைக் குறிக்கும்.

()  இவ்விதிகளைல் பயன்படுத்தப்படாத வார்த்தைகளும் சொற்றொடர்களும், சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தால் அதே அர்த்தத்தைக் குறிக்கும்.

3.  அந்நியச் செலாவணி அளிப்பதற்கான தடை: கீழே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களுக்காக, அந்நியச் செலாவணி அளிப்பு எந்த நபருக்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.

()  அட்டவணை 1இல் சொல்லப்பட்டிருக்கும் நடவடிக்கைகள்

()  நேபால் / பூட்டானுக்குப் பயணம்

()  நேபால் / பூட்டானில் குடியிருப்போருக்கான நடவடிக்கை தனிப்பட்ட அல்லது பொது உத்தரவு மூலம் ()க்கு ரிசர்வ வங்கி சில நிபந்தனைகளுடன் விலக்கு அளிக்கலாம்.

4.  மத்திய அரசின் முன்அனுமதி: அட்டவணை IIஇல் சொல்லப்படுள்ள நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் முன் அனுமதியின்றி யாருக்கும் அந்நியச் செலாவணி அளிப்பு வழங்கப்படக் கூடாது.  ஆனால் குடியிருப்போரின் அந்நிய நாணயக் கணக்கிலிருந்து (RFC) கொடுக்கப் படுபவைகளுக்கு இது பொருந்தாது.

5.  ரிசர்வ வங்கியின் முன் அனுமதி அட்டவணை IIIஇல் சொல்லப்படுள்ள நடவடிக்கைகளுக்கு ரிசர்வ வங்கியின் முன் அனுமதியின்றி யாருக்கும் அந்நியச் செலாவணி அளிப்பு வழங்கப்படக் கூடாது.  ஆனால் குடியிருப்போரின் அந்நிய நாணயக் கணக்கிலிருந்து (RFC) கொடுக்கப் படுபவைகளுக்கு இது பொருந்தாது.

 

6.  (1) விதி 4/5இல் சொல்லப்பட்டது எதுவும் அந்நியச் செலாவணி ஈட்டுவோர் கணக்கிலிருந்து (EEFC) அளிப்பதற்குப் பொருந்தாது.  துணைவிதி (1) இல் சொல்லப்பட்டிருந்தாலும், விதி 4/5இல் சொல்லப்படுள்ள நிபந்தனைகள், அட்டவனை IIஇல் வரிசை எண்கள், 10, 11 அல்லது அட்டவணை IIIஇல் வரிசை எண்கள் 4, 11, 16, 17 களில் சொல்லப் பட்டவைகளுக்கு தொடர்ந்து பொருந்தும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அட்டவணை I

(விதி 3ஐப் பார்க்கவும்)

 

(1) பரிசுச் சீட்டு (லாட்டரி) வெற்றிப்பணத்திலிருந்து அனுப்புதல்

(2) கார் ஓட்டம் / குதிரை ஏற்றம் போன்ற பழக்கத்தினால் கிடைக்கும் வருவாயிலிருந்து வாங்க பணம் அனுப்புதல்

(3)  பரிசுச் சீட்டுகள், தடைசெய்யப்பட்ட பத்திரிகைகள் வாங்க அனுப்புதல் / விளையாட்டு சார்ந்த சூதாட்டங்களில் பங்கேற்க வாங்க பணம் அனுப்புதல்

(4)  இந்தியக் கம்பெனிகளின் அந்நிய நாட்டிலுள்ள கூட்டமைப்புகள், முழுவதும் சொந்தமான துணை நிறுவனங்களில் செய்யப்பட்ட பங்கு முதலீட்டுக்குத் தரகு அனுப்புவது.

(5)  டிவிடென்ட் சமன்பாடு தேவைப்படும் கம்பெனியிலிருந்து டிவிடென்ட் அனுப்புவது.

(6)  நாட்டின் ரூபாய் கடன் வழியில் செய்யப்பட்ட ஏற்றுமதிக்கு தரகு சொல்வது.

(7)  தொலைபேசியில் `மீண்டும் அழைப்புவகையில் பணமளிப்பது.

(8)  குடியிருப்போரல்லாதவர்களின் சிறப்பு ரூபாய் (கணக்கு) திட்டத்தின் கீழ் உள்ள நிதியின் மீது ஈட்டிய வட்டியை அனுப்புதல். 

 

 

அட்டவணை II

(விதி 4ஐப் பார்க்கவும்)

 

 

அனுப்புதலின் நோக்கம்

ஒப்புதல் அளிப்பதற்குரிய மத்திய அரசின் அமைச்சரவை / துறை

 1.

காலாச்சார சுற்றுலா

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (கல்வி மற்றும் கலாச்சாரத் துறை)               

 2.

ஒரு மாநில அரசு அல்லது அதன் பொதுத்துறை நிறுவனம், 10000 அமரிக்க டாலருக்கு மிகாமல், சுற்றுலா, அந்நிய நாட்டில் முதலீடு, சர்வதேச ஏலம் இவைகள் நீங்கலாக, அந்நிய நாட்டுப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய

நிதி அமைச்சகம் (பொருளாதாரத் துறை)

 3.

பொதுத்துறை நிறுவனம் ஏற்பாடு செய்த கப்பலுக்கான கட்டண அனுப்பீடு.

நீர்மேல்பரப்பு போக்குவரத்து அமைச்சகம் (தனி ஏற்பாடுத் துறை)

4.

c.i.f. அடிப்படையில் (f.o.b. மற்றும் f.a.s. அடிப்படை அல்லாமல்) அரசுத் துறை அல்லது பொதுத் துறை இறக்குமதிக்குரிய பணம் செலுத்துவது.

நீர்மேல்பரப்பு போக்குவரத்து அமைச்சகம் (தனி ஏற்பாடுத் துறை)

5.

பலவகை போக்குவரத்து உரிமையாளர்கள், வெளிநாட்டில் உள்ள தங்களது முகவர்களுக்குப் பணம் அனுப்புதல்

கப்பல் போக்குவரத்தின் பொது இயக்குநரிடமிருந்து பதிவுச் சான்றிதழ்

6.

டிரான்ஸ்பான்டர்ஸ் வாடகைக் கட்டணங்கள் அனுப்புதல்

நிதி அமைச்சகம் (பொருளாதாரத் துறை)

7.

கப்பலை கூடுதலாக நிறுத்தி வைத்ததன் காரணமாக கப்பல் போக்குவரத்தின் பொது இயக்குநர் விதித்த கட்டணங்களை விடக்கூடுதலான கட்டணங்கள் அனுப்பீடு  

நீர் பரப்பு போக்குவரத்து அமைச்சகம் (கப்பல் போக்குவரத்து பொது இயக்குநர்)

8.

2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமான மொத்த தொகை, உள்ளூர் விற்பனையில் 5% அதிகமான தொகை, ஏற்றுமதியில் 8% அதிகமான தொகை, தொழில் நுட்ப கூட்டு நடவடிக்கைகளுக்காக உரியம் (ராயல்டி) அனுப்புதல்

தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம்

 

 

7. அயல் நாட்டில் வாழும் நெருங்கிய உறவினர்களின் வாழ்க்கைச் செலவுக்கு பணம் அனுப்புதல்:

1. பாகிஸ்தானியைத் தவிர வேறு எந்த வெளிநாட்டவரும் இந்தியாவில் குடியிருந்து கொண்டு, ஆனால் நிரந்தரமாக இந்தியாவில் குடியில்லாமல் இருப்பாரேயானால் அவரது நிகரச் சம்பளம் (வரி, வருங்கால வைப்புநிதி போன்ற இதர பிடித்தங்கள் போக)

2. மற்றவர்களுக்கு, ஒரு பெறுநருக்கு ஆண்டு ஒன்றுக்கு அமெரிக்க டாலர் 5000க்கு அதிகமாக வழங்குதல்

விளக்கம்;  இந்தியாவில் குறிப்பிட்ட கால அளவுக்கு வேளையில் இருப்பவர் (அது எவ்வளவு கால அளவாக இருந்தாலும் சரி அல்லது குறிப்பிட்ட ஒரு வேலைக்கு, திட்டத்திற்கு 3 ஆண்டுகளுக்கு மிகாமல் இந்தியாவில் இருப்பவர், இங்கு குடியிருப்பவர் ஆனால் நிரந்தரமாகக் குடியிருப்பவரல்லாதவர் என்று இந்த இடத்தில் பொருள் கொள்ளவும்).

8. ஒரு நபருக்கு அமெரிக்க டாலர் 25000 க்கு அதிகமாக அந்நிய செலாவணி வழங்குதல் (எவ்வளவு காலம் வெளிநாட்டில் தங்க வேண்டியிருந்தாலும் சரி) கீழே கண்டுள்ள காரணங்களுக்காக: வியாபாரப் பயணம், மாநாட்டில் கலந்து கொள்ளுதல், சிறப்பு பயிற்சிக்காகச் செலவு, மருத்துவ செலவுக்கு/ மருத்துவப் பரிசோதனைக்கு செய்பவருக்கு ஆகும் செலவுகளை ஏற்றல், நோயாளியுடன் துணைக்குச் செல்பவருக்கான செலவு.

9. வெளிநாட்டில் மருத்துவச் செலவு, இந்திய அல்லது வெளிநாட்டு மருத்துவர்கள்/ மருத்துவமனைகளின் திட்ட மதிப்பீடுகளுக்கு அதிகமாகும் போது அந்நிய செலாவணி வழங்குதல்

 

10. வெளிநாட்டுக் கல்வி நிறுவனம் வழங்கிய திட்டமதிப்பீட்டுக்கு அதிகமாக கல்விச் செலவுகள் ஆகும்போது அல்லது ஒரு கல்வி ஆண்டிற்கு அமெரிக்க டாலர் 30000 இரண்டில் எது அதிகமோ அது அதற்குரிய அந்நிய செலாவணி வழங்குதல்

 

11. இந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்பு/வணிக மனைகள் விற்றதற்காக வந்த பணத்தில் 5% அதிகமாக வெளிநாட்டிலுள்ள முகவர்களுக்குத் தரகு வழங்குதல்

12. இந்தியக் கம்பெனிகளின் வெளிநாட்டிலுள்ள அலுவலகங்களுக்கு குறுகிய காலக் கடன் வழங்குதல்

13. கடந்த இரு ஆண்டுகளிலும் ஓரு லடசத்திற்கும் குறைவாக ஏற்றுமதி வருமானம் பெற்ற ஏற்றுமதியாளர், வெளிநாட்டுத் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வதற்காகப் பணம் அனுப்புதல்.

14. ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்படாத தொழில் நுட்பக்கூட்டு உடன்படிக்கையின் கீழ், ‘ராயல்டிஅனுப்புதல் மற்றும் ஒரு குறிப்பிட்ட மொத்தத் தொகையைக் கட்டணமாகச் செலுத்துதல்.

15. இந்தியாவுக்கு வெளியே செயல்படும் ஆலோசணை மையத்தின் சேவைகளுக்கு, ஒரு திட்டத்திற்கு அமெரிக்க டாலர் 10000க்கு  அதிகமாக பணம் அனுப்புதல்

 

16. இந்தியாவில் அடையாளச் சின்னத்தை/கிளை அலுவலகத்தை வாங்கியது அல்லது பயன்படுத்தியது சம்பந்தமாகப் பணம் அனுப்புதல்

 

17. இந்தியாவில் இருக்கும் ஒரு நிறுவனம், பதிவு செய்யவதற்கு முன் ஆகிய செலவுகளுக்குத் திரும்ப பணம் வழங்குவதற்காக அமெரிக்க டாலர் 1 லட்சத்திற்கும் அதிகமாக வழங்குதல்

 

பகுதி II

 

அங்கீரிக்கப்பட்ட வணிகர்கள் அந்நியச் செலாவணி வழங்குதல்

 

A.I. பொது:  1999 அந்நிய செலாவணி நிர்வாகச் சட்டம் பரிவு 5இன்கீழ் மத்திய அரசு வெளியிட்ட விதிகள், அங்கீரிக்கப்பட்ட வணிகர்கள், இந்தியாவில் குடியிருப்போரின் வெளிநாட்டுப் பயணத்திற்காக அந்நிய செலாவணி வழங்குவது பற்றி, அவர்களை வழிநடத்திச் செல்லும்.  அரசு அறிவிப்பு 381(E), 2000 மே 3 ஆம் தேதியிட்டது; விதி 3 (b) இன்படி, நேபால் பூட்டான் பயணத்திற்கு அந்நிய செலாவணி வழங்கப்படக்கூடாது.  அறிவிப்பின் அட்டவணை IIIஇல் கூறப்பட்டுள்ள சில நிகழ்வுகளுக்காக, குறிப்பிட்ட அளவைக்காட்டிலும் கூடுதலாக அந்நிய செலாவணி வழங்க நேரிடும்போது, ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியினைப் பெற்றிருத்தல் வேண்டும்.  அரசு அறிவிப்பின் அட்டவணை IIIஇல் சொல்லப்பட்ட அளவைக்காட்டிலும் கூடுதலாக அந்நியச் செலாவணி வழங்க அனுமதி கோரும் விண்ணப்பங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட ரிசர்வ் வங்கி அலுவலகத்தின் அந்நிய செலாவணி கட்டுப்பாட்டுத்துறைக்கு அனுப்பப்பட வேண்டும்.

(b) அரசு அறிவிப்பு GSR 381(E), 2000 மே 3 ஆம் தேதியிட்டது விதி 2 (b) இன்படிவழங்கல்என்பது சர்வதேச கடன்/பற்று அட்டைகளைப் பயன்படுத்தியமையையும் குறிக்கும்.  இத்தகைய உபகரணங்களைப் பயன்படுத்துவதும், இந்த அறிவிப்பில் சொல்லப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று இதனால் தெளிவுறுத்தப்படுகிறது.  மேலும் பிரிவு 2 (b) இன்படிபண நாணயம்என்பது மற்றவைகளிடையே பன்னாட்டுக்கடன் அட்டைகளையும் குறிக்கும்.  ரிசர்வ் வங்கியும் தனது அறிவிப்பில் (எண். FEMA 15/2000 RB, 2000  மே  3,  தேதியிட்டது) தானியங்கிப் பணம் வழங்கு/ ஏற்பு இயந்திர அட்டை, பற்று அட்டைகளைபண நாணயம்என்று அறிவுறுத்தி உள்ளது.  எனவே கடன்/பற்று இயந்திர அட்டைகள் மூலமாக பணம் செலுத்தியது என்பது வெவ்வேறு வகைகளில் பணம் செலுத்தியதையே குறிக்கும் என்று இதன்மூலம் தெளிவுறுத்தப்படுகிறது.  எனவே இச்சட்டத்தின் அனைத்துப் பிரிவுகளும், விதிகளும், ஒழுங்குமுறைகளும், ஆணைகளும் கடன்/பற்று இயந்திர அட்டை பயன்பாட்டிற்கும் சாலப் பொருந்தும் என்று அறிவுறுத்துகிறோம்.

 

A2 - அந்நிய செலாவணி விற்றல்:

()  ரிசர்வ வங்கி / மத்திய அரசின் அனுமதி / ஒப்புதலில் சொல்லப்பட்ட காலவரம்பிற்கு அந்நிய செலாவணியை விற்று அனுமதி / ஒப்புதல் சீட்டின் பின்புறம் அந்நிய செலாவணி விற்கப்பட்ட விபரத்தை எழுத வேண்டும்.

 

()  சுற்றுலா மற்றும் தனிப்பட்ட சொந்தக் கவனத்திற்காக அயல்நாடு செல்லுகையில், நடப்பு ஆண்டில் வெளிநாடு பயணத்திற்காக அவர் வாங்கிய அந்நிய செலாவணி பற்றி அவரே கொடுக்கும் ஒப்புதல் சுய அறிக்கையின் அடிப்படையில் அந்நிய செலாவணியை வழங்குதல்.

()  வெளிநாட்டுப் பயணத்திற்காக வழங்கப்பட்ட அந்நிய செலாவணி, பயணியின் கடவுச்சீட்டில் (பாஸ்போர்ட்) குறிப்பிடப்பட வேண்டும்.   ஆனால் பயணி விரும்புவாரேயானால், அளிக்கப்பட்ட அந்நிய செலாவணி விபரங்களை தங்கள் கையெழுத்து, முத்திரை, தேதியுடன் குறிப்பிடலாம்.

()  பயணிகளுக்கான காசோலைகள் வழங்கப்படுகையில், அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் முன் பயணி காசோலைகளில் கையெழுத்திட வேண்டும். பயணிகள் காசோலை கிடைத்தமைக்கு அவை வாங்கியவரின் ஒப்புதலைப் பெற்று முறையே பாதுகாக்கப்பட வேண்டும்.

()  பயணிக்கு விற்கப்பட்ட மொத்த அந்நிய செலாவணியில், கீழே கண்ட வரையறைக்குள் அந்நிய நோட்டுகளும் நாணயங்களும் மாற்று வசதிக்காக வழங்கப்படலாம்.

(i)  ஈராக், லிபியா, இஸ்லாமியக் குடியரசான ஈரான், ரஷ்யக் கூட்டமைப்பு, காமன்வெல்த் குடியரசின் கீழ் சுதந்திரமான நாடுகளைத் தவிர மற்ற நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு

அமெரிக்க டாலர் 2000 அல்லது அதற்கு ஈடான தொகைக்கு மிகாமல்

(ii)  ஈராக், லிபியாவுக்குச் செல்லும் பயணிகளுக்கு              

அமெரிக்க டாலர் 5000 அல்லது அதற்கு ஈடான தொகைக்கு மிகாமல்

(iii) இஸ்லாமியக் குடியரசான ஈரான், ரஷ்யக் கூட்டமைப்பு, காமன்வெல்த் குடியரசின் கீழ் சுதந்திரமான நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கும்.

முழு அந்நிய செலாவணி வழங்கலாம்.

 

 

()  வெளிநாட்டுப் பயணத்திற்காக அந்நிய செலாவணி வழங்கப்பட்ட விபர அறிக்கையான படிவம், அங்கீகரிக்கப்பட்ட நபர்களால் ஒரு வருடத்திற்குப் பாதுகாக்கப்பட வேண்டும்.  அதனுடன் சேர்ந்த மற்ற ஆவணங்களையும், அவர்களது உள்ளக கணக்காய்வார்கள் சரி பார்ப்பதற்காகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

A-3 மருத்துவ வசதிகள்; வெளிநாட்டுக்குச் சென்ற நபர் அங்கு உடல்நலன் குன்றினால் அதற்காகும் மருத்துவச் செலவுக்குக் கூட அந்நிய செலாவணி வழங்கப்படலாம்.  அரசின் அறிவிப்பு எண் GSR 381(E) 2000 மே 3 தேதியிட்டது விதி 5 இன் கீழ் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

A-4 கலாச்சாரச் சுற்றுலா:  நடனக்குழுக்கள், கலைஞர்கள் கலாச்சாரக் காரணங்களுக்காக வெளிநாடு செல்வதற்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு (கல்வி மற்றும் கலாச்சாரத் துறை) மனுச் செய்ய வேண்டும்.  அமைச்சகத்தின் ஆணைக்கேற்ப, அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், ஆணையிலுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு அந்நிய செலாவணி வழங்கலாம்.

A-5  தனிப்பட்ட பயணம்:  எந்தக் காரணத்திற்காகவும், இந்தியாவுக்கு வெளியே பயணம் தனிப்பட்ட சொந்தப் பயணம் மேற்கொள்ள அந்நிய செலாவணி வழங்கலாம்.

A-6  சில நிகழ்வுகளில் அந்நிய செலாவணி பயன்படுத்தியதை தொடர்ந்து கண்காணித்தல்:  வெளிநாட்டில் மருத்துவப் பரிசோதனை / சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட திட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் அந்நிய செலாவணி வழங்கப்பட்டிருந்தால் அதன் பயன்பாட்டை உரிய முறையில் கண்காணிக்க வேண்டும்.  அந்நிய செலாவணி வழங்கிய வங்கிக் கிளைக்கு அவர் செலவு செய்த விபரங்களை தாயகம் திரும்பிய 2 வாரகாலத்திற்குள்  தெரியப்படுத்த வேண்டும்.  அப்படித் தெரியப்படுத்தவில்லையெனில் சம்பந்தப்பட்ட ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு அறிவிக்க வேண்டும்.

 

A-7 அந்நிய செலாவணி திருப்பி அளிக்க கால அவகாசம்:  வழங்கப்பட்ட அந்நிய செலாவணி பயன்படுத்தப்படவில்லையெனில் அல்லது ஒரு பகுதி பயன்படுத்தப்படாமல் இருந்தால் அதை வழங்கப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்பட்ட வணிகரிடம் திருப்பி அளிக்கப்பட வேண்டும் (அறிவிப்பு எண் FEMA9/2000-RB, 2000 மே 3 தேதியிட்டது)

குறிப்பு: 60 நாட்களுக்குப் பின்னர் திரும்பச் செலுத்த ஒருவர் வந்தால், வணிகர் மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும்.  60 நாட்கள் காலம் முடிந்துவிட்டது என்ற காரணம் கூறாமல் வாங்கிக் கொள்ள வேண்டும்.

A-8 செலவு செய்யப்படாத அந்நிய செலாவணி: செலவழிக்காத அந்நிய செலாவணி அயல்நாட்டு நோட்டுகளாக இருந்தால், திருப்பி வந்ததிலிருந்து 90 நாட்களுக்குள் அதை அவரிடம் திருப்பி அளிக்க வேண்டும்.  பயணிகள் காசோலையாக இருப்பின் திரும்பி வந்ததிலிருந்து 180 நாட்களுக்குள் திருப்பி அளிக்கப்பட வேண்டும்.  இப்படிக் கொண்டு வரப்பட்ட அந்நிய செலாவணி, மேலே சொன்ன கால அவகாசத்திற்குள் அவர் மீண்டும் வெளிநாடு செல்ல நேரிட்டால், அதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  அமெரிக்க டாலர் 2000 வரை திரும்பி அப்பயணி நோட்டுகளை தன்னகத்தே வைத்துக் கொள்ளலாம்.  அயல் நாட்டு நாணயங்களைப் பொறுத்த வரை எந்த வரையறை இன்றியும் வைத்துக் கொள்ளலாம். (குறிப்பு FEMA 11/2000 RD, 2000 மே 3 தேதியிட்டது).  இப்படி தன்னகத்தே வைத்துக் கொண்ட அந்நிய செலாவணியை பயணி தனது அடுத்த பயணங்களின் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு: 180 நாட்களுக்குப் பின்னர் திரும்பச் செலுத்த ஒருவர் வந்தால், வணிகர் மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும்.  180 நாட்கள் காலம் முடிந்துவிட்டது என்ற காரணம் கூறாமல் வாங்கிக் கொள்ள வேண்டும்.

A-9 பயணங்களுக்கான அனுப்பீடு:

(i) விதிகள் ஒழுங்குமுறைகள் ஆணைகளுக்குட்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நபரிடமிருந்து (தனிப்பட்ட சொந்த பயணத்திற்காக வழங்கப்பட்ட அந்நிய செலாவணியையும் சேர்த்து) பெறப்பட்ட அந்நிய செலாவணி ... அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் ஒரு நியாயமான வரம்பிற்குட்பட்டு பயணியின் வேண்டுகோளுக்கிணங்க, பயண ஏற்பாடுகள், விடுதிச் செலவுகள் ஆகியவைகளுக்கு வழங்கலாம்.

(ii)  இந்தியப் பயணிகளுக்கு வெளிநாட்டில் சுற்றுலா ஏற்பாடு தங்கும் விடுதி வசதி போன்றவைகளுக்கு அதற்கான உரிய தொடர்புடைய இந்தியாவில் உள்ள முகவர்களுக்கு அவர்களது வேண்டுகோளுக்கிணங்க அந்நிய செலாவணி, அனுப்பலாம்.  சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு வழங்கப்பட்ட அந்நிய செலாவணியிலிருந்துதான் இவை அனுப்பப்படுகிறது என்பதை அந்நிய செலாவணி வணிகர்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

(iii)  வெளிநாட்டு விடுதிகள் / முகவர்களுடன் தொடர்புடைய இந்திய முகவர்கள் பெயரில் அந்நிய செலாவணி அயல்நாட்டுப் பண நாணயக் கணக்கினைத் துவக்கலாம்.  இந்தியப் பயணிகளுக்கான தங்கும் விடுதி / சுற்றுலாக்களுக்கு, கீழே கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு இது உதவும்.

() அக்கணக்கில் வரவு வைக்க டெப்பாசிட் செய்யப்பட வேண்டியது

    (i)  பயணிகளிடமிருந்து அந்நிய செலாவணியாகப் பெறப்பட்டது

 

    (ii) பயணச்சீட்டுகள் / சுற்றுலா ஏற்பாடுகளை ரத்து செய்யும் போது, இந்தியாவுக்கு வெளியே திரும்ப வழங்கப்படும் தொகைகள்

()  அக்கணக்கில் பற்று என்பது விடுதிகளுக்காகும் செலவு அளித்தல், சுற்றுலாக் கட்டணங்கள் அளித்தல் என்பன போன்ற (ii)இல் சொல்லப்பட்டவாறு.

 

A-10 ரூபாயில் செலுத்துதல்: தனிப்பட்ட பயணம் (எந்தக் காரணத்திற்காகவும்) வெளிநாட்டில் மேற்கொள்ள அந்நிய செலாவணி ரூ 50000 வரை, ரொக்கமாக, அந்நிய செலாவணி வழங்குவதற்காக ஏற்றுக் கொள்ளலாம்.  எங்கெல்லாம் அந்நிய செலாவணி விற்பதென்பது ரூ 50000க்கு மேல் போகிறதோ அங்கெல்லாம் இந்தியப் பணம் (i) மனுதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து கோடிடப்பட்ட காசோலையாக அல்லது     (ii) மனுதாரரை நியமிக்கும் கம்பெனியின் கோடிட்ட காசோலை அல்லது    (iii) வங்கியின் காசோலை / பணம் வழங்காணை / கேட்போலை என்று தான் பெறப்பட வேண்டும். 

 

A-11 முன் அனுப்பீடு: அமெரிக்க டாலர் 25000 அல்லது அதற்கொப்பான பணத்திற்கு மிகாமல் அந்நிய செலாவணி அனுமதிக்கப்பட்ட நடப்புக் கணக்கு நடவடிக்கைகளுக்காக முன்பணமாக வழங்கலாம்.  அமெரிக்க டாலர் 25000 அல்லது அதற்கொப்பான பணத்திற்கு அதிகமாக முன்பணம் அனுப்ப நேரிட்டால், சர்வதேசத் தரமுடைய வெளிநாட்டு வங்கி அல்லது இந்தியாவிலுள்ள அந்நிய செலாவணி வணிகரிடமிருந்து பொறுப்பு உறுதியினை வெளிநாட்டிலுள்ள பயன்பெறுபவர் அளிக்க வேண்டும்.  அயல் நாட்டிலுள்ள பயன் பெறுவோர், இந்தியாவிலிருந்து பணம் அனுப்பியவருடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, தனது கடமைகளையும் பொறுப்புகளையும் செய்வதை அந்நிய செலாவணி உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பகுதி III

 

முழுமையான பணம் மாற்றாளர்கள் (FFMCs) வழங்கும் அந்நிய செலாவணி

 

A-1 பொது: 2000 மே 16ஆம் தேதியிட்ட எங்கள் சுற்றறிக்கை எண் ADMA 11 பத்தி 4 முழுமையான பணம் மாற்றாளர்கள் கவனிக்கவும்.  இதில் சொல்லப்பட்ட ஆணைகள் அனைத்தும் அப்படி அப்படியே பணமாற்றாளர்களுக்கும் பொருந்தும்.  FLM/RLM விவரங்கள் அவர்களையும் வழி நடத்திச் செல்லும்.  அந்நிய செலாவணி நிர்வாகச் சட்டம் 1999 (அவ்வப்போது செய்யப்பட்ட திருத்தங்களுடன்) இன் கீழ் நடைமுறையில் இருக்கும் ஒழுங்கு முறைகள், கீழே கண்டவாறு மாற்றி அமைக்கப் பட்டுள்ளன.

 A-2  ஒப்புதல் அளிக்கப்பட்ட நோக்கங்களுக்காக அளிக்கப்படும் அந்நிய செலாவணியின் அளவு:

()  FLM பத்தி 10இன்படி BTQவின் கீழ் தற்போது அளிக்கப்படும் அந்நிய செலாவணிக்குப் பதிலாக, நேபால்/பூட்டான் தவிர வேறு எந்த நாட்டுக்கும் ஓர் ஆண்டில், ஒன்று அல்லது பல முறை, தனிப்பட்டச் சொந்தப் பயணம் மேற்கொள்ள அமெரிக்க டாலர் 5000க்கு மிகாமல் அந்நிய செலாவணி வழங்குதல்.

()  FLM பத்தி 11இன்படி தற்போதுள்ள பலதரப்பட்ட அந்நிய செலாவணி அளவீடுகளுக்குப் பதிலாக, வணிகப் பயணம் சம்பந்தமாக எவ்வளவு நாள் வெளிநாட்டில் தங்க நேரிட்டாலும் ஒரு நபருக்கு அமெரிக்க டாலர் 25000கு மிகாமல் வழங்குதல்.

A-3 ஆவணங்கள்: அந்நிய செலாவணி வழங்கும்போது, பணமாற்றாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை, ரிசர்வ வங்கி இனிமேல் குறிப்பிடாது.  இந்த விஷயத்தில், 1999 அந்நிய செலாவணி நிர்வாகச் சட்டம் பிரிவு 10 துணைப்பிரிவு 5 (1999இல் 42) பணமாற்றாளர்கள் படிக்கவும்.  இது, ஏதேனும் ஒரு நபருக்காக அந்நிய செலாவணி நடவடிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட நபர் ஈடுபடுகையில் அந்த நபரிடமிருந்து, அங்கீகரிக்கப்பட்ட நபர் பெற வேண்டிய சுய அறிக்கையைப் பற்றியதாகும்.  அங்கீகரிக்கப்பட்ட நபருக்குத் திருப்தி ஏற்படும் வகையில், அந்த நபர் தனது சுய அறிக்கையை அளிக்க வேண்டும்.  சட்டம், விதி, ஒழுங்கு முறை, அறிவிப்பு, ஆணை போன்றவைகளில் சொல்லப்பட்டவைக்கு எதிராகவோ, முரணாகவோ தான் ஈடுபடும் அந்நிய செலாவணி நடவடிக்கை இல்லை என்பதனை அந்த நபர் அங்கீகரிக்கப்பட்ட நபருக்கு உறுதி செய்து உத்தரவாதம் அளித்து சுய அறிக்கை அளிக்கவேண்டும்.  அந்தக் குறிப்பிட்ட அந்நிய செலாவணி நடவடிக்கை எந்தத்தகவல் / ஆவணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பதன் விபரங்களைப் பத்திரமாக வைத்திருந்து ரிசர்வ வங்கி சரி பார்க்கப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.  மேலும் மனுதாரர் அப்படிச் சுய அறிக்கை அளிக்க மறுத்தால், அல்லது அவர் அளித்த அறிக்கை அங்கீகரிக்கப்பட்ட நபருக்குத் திருப்தி இல்லையெனில், அங்கீகரிக்கப்பட்ட நபர் எழுத்து மூலம் அந்த நபருக்கு அப்படிப்பட்ட அந்நிய செலாவணி நடவடிக்கையை மேற்கொள்ள இயலாதென்பதைத் தெரியப்படுத்தலாம்.  ரிசர்வ வங்கிக்கும் அதனைத் தெரியப்படுத்தலாம்.

A-4 கடவுச் சீட்டில் பதிவு:  வெளிநாட்டுப் பயணத்திற்கு விற்கப்பட்ட அந்நிய செலாவணி விபரங்களை கடவுச் சீட்டில் (பாஸ்போர்ட்) அங்கீகரிக்கப்பட்ட நபர் தனது கையெழுத்து, முத்திரை, தேதி ஆகிய விபரங்களுடன் பதிவு செய்யலாம்.

A-5 FLM பகுதிகள்: முழு அளவிலான பணமாற்றாளர்கள் தொடர்ந்து FLM பகுதிகளால் வழிநடத்திச் செல்லப்படுகிறார்கள்.

 

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்