RBI/2004/136
DCM (RMMT)No.1181/11.37.01/2003-04 ஏப்ரல்
05, 2004
தலைவர் & நிர்வாக
இயக்குநர்
பொது /தனித்
துரை
வங்கிகள்
அன்புடையீர்,
நாணயங்கள் ஏற்றுக் கொள்ளுதல்
2003 அக்டோபர்
09 தேதியிட்ட
DCM (RMMT)No.404/11.37.01/ 2003-04 இன்படி,
எந்தவிதக்
கட்டுப்பாடோ
நிபந்தனையோ
இன்றி
பொதுமக்களிடமிருந்து
நாணயங்களை
அனைத்து
வங்கிக்
கிளைகளும்
ஏற்றுக்
கொள்ள
வேண்டும்
என்று
அறிவுறுத்தியிருந்தோம்.
நேரடியாகவும்
மறைமுகமாகவும்
இன்னமும் பல
வங்கிக்
கிளைகள்
அப்படி
நாணயங்களை
மக்களிடமிருந்து
வாங்க
மறுப்பதாக பல
புகார்கள்
வருகின்றன.
வங்கிகளே
இப்படிவாங்க
மறுப்பது
வணிகர்களையும்
கடைகாரர்களையும்
மக்களிடமிருந்து
நாணயங்களை
வாங்க மறுக்க
வைக்கிறது . இதனால்
பொதுமக்கள்
பல
இனனல்களுக்கு
ஆளாகின்றனர்.
சில்லறை
நாணயங்களை
வாங்க
மறுக்கும்போதோ
அல்லது
கொடுக்கும்போதோ
வியாபாரிகளுக்கும்
பொதுமக்களுக்கும்
தகராறு
ஏற்படுகிறது.
எனவே
மீண்டும் ஒரு
முறை உங்கள்
கிளைகள்
அனைத்திற்கும்
நாணயங்களை
மக்களிடமிருந்து
பெற்றுக்
கொள்ளுமாறு
அறிவுறுத்துங்கள்.
2. ஏற்கனவே
சொல்லியுள்ளபடி
நாணயங்களைக்
குறிப்பாக
சில்லறை
நாணயங்களை
எடை பார்த்து
ஏற்றுக்
கொள்ள
வேண்டும். வாடிக்கையாளனுக்கும்
காசாளனுக்கும்
100 ஒரே
மதிப்புடைய
நாணயங்கள்
கொண்ட
பிளாஸ்டிக்
பைகளாக
வாங்குவது
வசதியாக
இருக்கும். பிளாஸ்டிக்
பைகள்
முகப்புகளில்
வாடிக்கையாளர்
வசதிக்காக
வைத்திருத்தல்
வேண்டும். இத்தகைய
வசதி
கிளையில்
இருப்பது
பற்றிய
அறிவிப்பும்
வங்கியின்
அறிவிப்பும்
பலகையிலே
எழுதலாம். வாடிக்கையாளரை
நூறு நூறு
நாணயங்களாகவும்
(மதிப்பிலும்
உலோகத்திலும்
) பிரித்து
பிளாஸ்டிக்
பைகளில்
போட்டு தரச்
சொல்லலாம். ஆனால்
வற்புறுத்தக்கூடாது.
நடப்பில்
உள்ள 25, 50 பைசாவுக்கும்,
1, 2, 5 ரூபாய்களுக்கும்
இதுபோல்
செய்யலாம்.
மிகப்பெரிய
அளவில்
எடையில்
வேறுபாடு
இருந்தால்
நாணயங்களை
எண்ணும்
இயந்திரங்களைப்
பயன்படுத்தலாம் .
10 பைசா
நாணயங்களையும்
பழைய 25, 50 பைசா
1ரூபாய்
நாணயங்களையும்
நாணயங்கள்
அச்சிடும் ‘மிண்ட்’
டுக்கு
அனுப்பலாம். எவர்சில்வர்
25 பைசா 50 பைசா
1ரூபாய்
நிக்கல்
உலோகத்தாலான
ரூபாய் 2,5 நாணயங்களை
மீண்டும்
புழக்கத்தில்
விட வேண்டும்.
கொள்
அளவுக்கு
அதிகமாக
இத்தகைய
நாணயங்கள்
சேர்ந்து
விட்டால்
அருகில் உள்ள
ரிச்ர்வ்
வங்கிக்
கிளையை
அணுகலாம்.
3. வட்டார/பகுதி
மேலாளர்கள்
முன்னறிவிப்பின்றி
தீடிரென்று
கிளைகளுக்குச்
சென்று, நாணயங்கள்
ஏற்றுக்
கொள்வது
சம்பந்தமாக
அவர்கள்
கொடுக்கும்
செயலாக்க
அறிக்கையின்
உண்மைத்தனத்தைக்
கண்டறிந்து
தலைமை
அலுவலகத்திற்கு
அறிவிக்க
வேண்டும். இவர்கள்
அளிக்கும்
அறிக்கையைத்
தலைமை
அலுவலகம்
பரிசிலித்து
தேவையான தக்க
முடிவுகள்
மேற்கொள்ள
வேண்டும்.
4. இவ்வறிவுரையை
ஏற்றுச்
செயல்படுத்தாமலிருத்தல்
என்பது
ரிச்ர்வ்
வங்கியின்
கட்டளைகளை
மீறிய
செயலாகக்
கருதப்படும்
என்று
அறிவுறுத்துகிறோம்.
கிடைத்தமைக்கு
ஒப்புதல்
அளித்து , செயலாக்கத்திற்கு
தகவல்
அனுப்புமாறு
கேட்டுக்
கொள்கிறோம்.
உங்கள்
நம்பிக்கையுள்ள
P.K.பிஸ்வாஸ்
செயல்
இயக்குநர் |