Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (58.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 17/04/2004

FEMA 1999 - நடப்புக்கணக்கு நடவடிக்கைகள் அயல்நாட்டிலுள்ள நெருங்கிய உறவினருக்கான பராமரிப்புக்கு பண அனுப்புதல் அயல்நாட்டு குழுமங்களிலிருந்து பிரதிநிதியாக இந்தியாவிற

RBI/2004/153

A.P.(DIR Series) சுற்றறிக்கை எண் 86

அங்கீகரிக்கப்பட்ட அந்நியச் செலாவணி வர்த்தகர் அனைவருக்கும்

அன்புடையீர்,

FEMA 1999 - நடப்புக்கணக்கு நடவடிக்கைகள் அயல்நாட்டிலுள்ள நெருங்கிய உறவினருக்கான பராமரிப்புக்கு பண அனுப்புதல் அயல்நாட்டு குழுமங்களிலிருந்து பிரதிநிதியாக இந்தியாவிற்கு வேண்டுகோளின்பேரில் அனுப்பப்படும் இந்தியர்

இந்திய அரசின் அறிவிப்பு எண். GSR 381 (E), மே 3, 2000 தேதியிடப்பட்டதன் அட்டவணை IIIல் உள்ள பிரிவு எண் 7ல் கண்டவை, பின் அறிவிப்பு எண். S.O.301(E) மார்ச் 30, 2001 தேதியிடப்பட்டு திருத்தியமைக்கப்பட்டதன் கருத்தினை அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் கவனிக்க:

நிரந்தரமல்லாத இந்திய குடியிருப்பாளரான அயல் நாட்டவர் (பாகிஸ்தானியரல்லாத) ஒருவர் தனது வரி மற்றும் வருங்கால வைப்புநிதிக் கழிவுகள்போக நிகர சம்பளத்தைத் தனது அயல் நாட்டிலிருக்கும் நெருங்கிய உறவினரின் பராமரிப்புக்கு அனுப்பி வைக்கலாம். இதே போன்று அயல் நாட்டிலிருக்கும் இந்தியர் பணிநிமித்தம் அயல்நாட்டுக் குழுமத்தின் பிரதிநிதியாக இந்தியாவிற்கு வரும்போது சம்பளத்தைத் அனுப்பிட எழுப்பும் வேண்டுகோள்கள் குறித்து ரிசர்வ் வங்கியை நாடி அறிவுரை பெற வேண்டும்.

2. மறு ஆய்வின்பேரில் மேற்குறிப்பிட்ட இந்திய குடியிருப்பாளரான அயல் நாட்டவருக்கு (பாகிஸ்தானியரல்லாதவர்) அளிக்கப்படும் பணம் அனுப்பும் வசதி அயல் நாட்டிலிருந்து பணிநிமித்தம் வரும் இந்தியக்குடிமகனுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அயல்நாட்டு நிறுவனத்தின் இந்திய அலுவலகம், கிளை அலுவலகம் இந்தியாவில் செயலாக்கும் ஒருங்கிணைந்த திட்டத்திற்காகப் பணிநிமித்தம் இந்தியா வரும் இந்தியக்குடிமகன் வெளிநாட்டில் உள்ள தனது அயல் நாட்டிலிருக்கும் நெருங்கிய உறவினருக்கு நிகர சம்பளத்தை(வரி மற்றும் வருங்கால வைப்புநிதிக் கழிவுகள்போக) பராமரிப்பிற்காக அனுப்பிட அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் இனி அனுமதி அளிக்கலாம். இது சம்பந்தமாக வெளியிடப்பட்ட இந்திய அரசின் அறிவிப்பு எண் GSR 397 (E), மே 1, 2003 தேதியிடப்பட்டதன் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

3. அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் இந்த சுற்றறிக்கையில் கருத்துக்களை தத்தம் குழு சார்ந்த முகவர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்வாராக.

4. இந்தச் சுற்றறிக்கையில் அடங்கியுள்ள கட்டளைகள் யாவும் FEMA 1999 (42 of 1999) ன் சட்டப்பிரிவு எண் 10(4) மற்றும் சட்டப்பிரிவு எண் 11(1) ன் கீழ் வெளியிடப்படுகிறது.

தங்கள் உண்மையுள்ள

கிரேஸ் கோஷி

தலைமைப் பொது மேலாளர்

 

 

நிதி அமைச்சகம் மற்றும் குழுமம்சார்ந்த (கம்பெனி) நடவடிக்கைகள்

பொருளாதார நடவடிக்கைகள் துறை

 

அறிவிப்பு

புதுதில்லி

மே 1, 2003

அந்நியச் செலாவணி கண்காணிப்புச்சட்டத்தின் FEMA 1999 (42 of 1999)ன் சட்டப்பிரிவு எண் 5 மற்றும் சட்டப்பிரிவு எண் 46 உட்பிரிவு எண் (1) மற்றும் 2ன் விதிக்கூறு (a)ன்படி அளிக்கப்பெற்ற அதிகாரத்தை செலுத்துமுகமாகவும், ரிசர்வ் வங்கி பரிந்துரையின்பேரிலும் பொதுநலனை கருத்தில் கொண்டு அந்நியச் செலாவணி கண்காணிப்பு (நடப்புக் கணக்கு நடவடிக்கைகள்) விதிகள் 2000ல் கீழ்க்குறிக்கப்படும் திருத்தங்களை இந்திய அரசு கொண்டு வருகிறது.

1. குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்

a. இந்த விதிமுறைகள் இனி “அந்நியச் செலாவணி கண்காணிப்பு (நடப்புக் கணக்கு நடவடிக்கைகள் (இரண்டாவது திருத்தம்) விதிகள் 2003 என்று அழைக்கப்படும்).

b. இவை அரசாணை அறிவிப்பு இதழில் பிரசுரிக்கப்பட்டதிலிருந்து இவை அமலுக்கு வரும்.

2. அந்நியச் செலாவணி கண்காணிப்பு (நடப்புக் கணக்கு நடவடிக்கைகள்) விதிகள் 2000ல்

(i) அட்டவணை 1ல் குறிப்பு 6 பின்வருமாறு மாற்றம் செய்யப்படும்.

“(6) Rupee State Credit Route ன்கீழ் தரப்படும் தரகுத்தொகை (விலைப்பட்டியில் கண்ட மதிப்புடைய தேநீர் மற்றும் புகையில் ஏற்றுமதியில் தரகு 10% தவிர)

(ii) அட்டவணை IIIல் குறிப்பு 7ல்

A. சட்டவிதிக்கூறு (i) க்கு பதிலாக பின்வரும் கூறு மாற்றி இடம்பெறும்

B.

(i) குடியிருப்பாளர் ஆனால் நிரந்தரமல்லாத இந்திய குடியிருப்பாளரின் நிகர சம்பளத்தைத் (வரி மற்றும் வருங்கால வைப்புநிதிக் கழிவுகள்போக) விட அதிகமாக இருக்கும்போது

a. அவர் அயல்நாட்டுக் குடிமகன்( பாகிஸ்தானியரல்லாத)

b. அயல்நாட்டுக் குழுமத்தின் கிளை, இந்திய அலுவலகம், அல்லது ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் பணிநிமித்தம் இந்தியாவிற்கு வரும் இந்தியக்குடிமகன்

c. விளக்கத்தில் “வேலைக்காக” என்பதில் “வேலைக்காக அல்லது பணிநிமித்தப் பிரதிநிதியாக” என்ற வார்த்தை மாற்றியமைக்கப்படும்.

 

f.no.1/5/EC/2000 Vol. II

G.S. தத்
இணைச்செயலர்

அடிக்குறிப்பு;

முக்கிய விதிகள் அரசாணை இதழ் எண்.G.S.R.381(E) மே 3, 2000, பகுதி II, பிரிவு 3, உட்பிரிவு (i) பின்னர் திருத்தியமைக்கப்பட்டது. S.O. 301 (E) தேதி 30 மார்ச் 2001.

 

 

 

 

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்