Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (54.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 21/06/2004

உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் (KYC) முறைமைகளுக்கான வழிகாட்டு நெறிகள் – இப்போதுள்ள கணக்குகள்

RBI/2004/259
DBOD.AML.BC.NO.101/14.01.001/2003-04

ஜூன் 21, 2004

அனைத்து வணிக வங்கிகளின்
தலைமை அதிகாரிகளுக்கும்
(பிராந்தீய கிராம வங்கி நீங்கலாக)

அன்புடையீர்

உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் (KYC) முறைமைகளுக்கான வழிகாட்டு நெறிகள் – இப்போதுள்ள கணக்குகள்

மேற்கண்ட தலைப்பில் DBOD.NO.AML.BC.18/14.01.001/2002-03, 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதியிட்ட எங்களது சுற்றறிக்கையை தயவு செய்து பார்க்கவும். மேற்கண்ட சுற்றறிக்கையில் பத்தி 3ல் அறிவுறுத்தப்படுவது என்னவென்றால், ஏற்கனவே இருக்கும் கணக்குகளில் ஏதேனும் விடப்பட்டிருநதால் கே.வாய்.சி.முறைமைகளை முதலில் முடித்து விடவேண்டும். மேலும், DBOD.AML.NO.47/14.01.001/2003-04 மற்றும் 129/14.01.001/2003-04 (முறையே நவம்பர் 24 மற்றும் டிசம்பர் 16, 2003 தேதியிட்ட சுற்றறிக்கைகளின்படி, வங்கிகள் கே.வொ.சி. முறைமையை, ஏற்கனவே இருக்கும் கணக்குகளுக்கு அதற்கென கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் முடித்துவிட வேண்டும்.

2. இது தொடர்பாக 2004-05ம் ஆண்டிற்கான ஆண்டு கொள்கை அறிக்கையின் பத்தி எண் 126ஐ பார்க்கவும். இது ஆளுனரின் கடிதத்தோடு எண் MPD.BC.249/07.01.279/2003-04, 2004ம் ஆண்டின் மே 18 தேதியிட்டது (பத்தியின் பிரதி இணக்கப்பட்டுள்ளது) அனுப்பப்பட்டுள்ளது.

3. உங்கள் குழுமத்தின் ஆலோசனையின்படி நீங்கள் ஏற்கனே ஒரு கே.வொ.சி. கொள்கையை வகுத்திருப்பீர்கள் என நம்புகிறோம். அதை அனைத்துப் புதுக் கணக்குகள் தொடங்கும்போதும் கடைப்பிடித்திட வேண்டும். எனினும், ஏற்கனவே உள்ள சிறிய கணக்குதாரர்கள் பாதிப்பிற்கு உள்ளாகாதவகையில் KYC முறைமைகள், காலத்தோடு மிடிக்கப்பட வேண்டும். ஏற்கன்வே உள்ள கணக்குகளுக்கு, மார்ச் 31, 2003 முடிவடைந்த நிதியாண்டிற்கான மொத்த வரவு மற்றும் பற்று இவற்றின் கூட்டுத்தொகை ரூ10 லட்சத்திற்கு மேற்பட்டாலோ அல்லது சந்தேகப்படும்படியான வித்தியாசமான் பரிவர்த்தனைகள் இருந்தாலோ அவைகளுக்கு மட்டும் கே.வொய்.சி. முறைமைகளை வங்கிகள் பிரயோகிக்கலாம் என்பதும் தீர்மானிக்கப்பட்டது. இந்த ஏற்பாடு 2004, டிசம்பர் 31க்குள் முடிக்கப்படவேண்டும்.

4. தரும் சொத்துக்கள், நிறுவனங்கள்/ தொழிற்சாலைகள், மத/பொதுத்தொண்டு ஸ்தாபனங்கள் போன்ற ஏற்கனவே உள்ள அனைத்து கணக்குகளுக்கும் மற்றும் இதர அமைப்புக்களுக்கும் அல்லது சட்ட உரிமைக்கட்டளை மூலமாவோ அல்லது பகர ஆள் செயலுரிமைப் பத்திரம் மூலமாகவோ உள்ள கணக்குகளுக்கும் தே.வொய்.சி.முறைமைகளை பிரயோகம் செய்யப்படுவதை வங்கிகள் உறுதி செய்யவேண்டும். கே.வொய்.சி. முறைமைகள் வட்டார நிலைமைகளுக்குப் பொருந்துமாறு சோரா முயற்சியுடன் பிரயோகிக்கப்பட்டு, 2004 டிசம்பர் 31க்குள் அனைத்தும் நிறைவடையும்படி செயய வேண்டும்.

உங்கள் நம்பிக்கைகுரிய

 பிரஷாந்த் சரன்
தலைமை பொது மேலாளர

 

2004-05ம் ஆண்டிற்கான, ஆண்டுக்கொள்கை
அறிவிப்பிலிருந்து எடுக்கப்பட்ட பகுதி

 (1) கெ.பொய்.சியும் பாடிக்கையாளர் உறவின்

அந்தராங்கத்தன்மையும்

126. சமீப வருடங்களில், கருப்புப் பணதை வெள்ளையாக்குவதைத் தடுப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது தொடர்பில், உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் (KYC=கே.வொ.சி.) கொள்கை வங்கிகளால் கடைபிடிக்கப்படுவது, கருப்புப்பணம் வெள்ளையாக்கப்படுவதையும் பயங்கரவாதத்திற்கு நிதி செல்லுதளையும் தடுக்கின்றது. ஆகஸ்ட் 2002ல் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது என்னவென்றால், தகுந்த ஆவணங்களின் வாயிலாக அடையாளம் நிரூபிக்கப்படுவதற்கு தேவையான கே.வொ.சி. முறைமைகள் பொதுமக்களுக்கான வங்கிச் சேவைகளை மறுப்பதற்கு வழிகாட்டி விடக்கூடாது. மேலும் டிசம்பர் 2002ல் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது என்னவென்றால், 2002 ஆகஸ்ட்டிற்கு முன்பு தொடங்கப்பட்ட கணக்குகளுக்கு கே.வொ.சி. முறைமைகள் கடைபிடிக்கப்க்பட்டனவா என்பதனை மறு ஆய்வு செய்தும் டிசம்பர் 2004ற்குள் படிப்படியாக எல்லா கணக்குகளுக்கும் அவ்வேலை முடிக்கப்படவும் வேண்டும். இது தொடர்பாக, அறிவுறுத்துவது என்னவென்றால்

 

புது கணக்குகள் தொடங்கும்போது, வங்கிகள் தங்கள் குழுமத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கே.வொய்.சி. முறைமைகளை முற்றிலும் பின்பற்றவேண்டும். வரவு மற்றும் பற்று இவற்றின் கூட்டுத்தொகை ரூ10 லட்சத்திற்கு மேற்பட்டாலோ அல்லது சந்தேகப்படும்படியான வித்தியாசமான பரிவர்த்தனைகள் இருந்தாலோ அவைகளுக்கு மட்டும் கே.வொய்.சி. முறைமைகளை வங்கிகள் பிரயோகிக்கலாம்.

தரும சொத்துக்கலள, இடை நிறுவனங்கள் அல்லது சட்ட உரிமைக் கட்டளை மூலமாகவோ அல்லது பகர ஆள் செயலுரிமைப் பத்திரம் மூலமாகவோ உள்ள கணக்குகளுக்கும், வங்கிகள் கே.வொ.சி. முறைமைகளை நடத்தவேண்டும். கே.வொ.சி முறைமைகள் வட்டார நிலைமைகளுக்குப் பொருந்துமாறு சோரா முயற்சியுடன் பிரயோகிக்கப்பட்டு, 2004 டிசம்பருக்குள் நிறைவடையச் செய்ய வேண்டும்.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்