Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (32.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 27/07/2001

லாட்டரி முதலியவற்றில் பங்கேற்க பண அனுப்பீடுகள்

பாரத ரிசர்வ் வங்கி
அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுத்துறை
மைய அலுவலகம்
மும்பை 400 023
 

ஜூலை 27, 2001

A.P. (DIR Series) சுற்றறிக்கை எண் 2

அங்கீகரிக்கப்பட்ட அந்நியச் செலாவணி வணிகர்கள் அனைவருக்கும்

அன்புடையீர்,

 லாட்டரி முதலியவற்றில் பங்கேற்க பண அனுப்பீடுகள்

சில அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலுள்ள தனிநபர்கள் சிலர் பரிசுகளை வென்றதாகவும் லாட்டரியில் ஜெயித்ததாகவும் கூறி அதற்கான கட்டணத்தை அமெரிக்க டாலர் மதிப்பில் கட்டவேண்டும் என்று செய்தி அனுப்புவது ரிசர்வ் வங்கியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

2. இந்த விஷயங்குறித்து இந்திய அரசு அறிவிப்பு எண் G.S.R.381 (E) 3.5.2000 தேதியிடப்பட்டதில் அட்டவணை 2ல், குறிப்பு எண் 3ல் கூறியுள்ளபடி மற்றவற்றுக்கிடையில், லாட்டரி டிக்கெட் வாங்குவதற்காக பண அனுப்புதல் தடை செய்யப்பட்டுள்ள விவரத்தை அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் கவனிப்பாராக : FEMA 1999ன் கீழ், லாட்டரி வகையான எவற்றிற்கும் எந்த வகையில் அயல்நாட்டுக்கு பணம் அனுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களுக்குத் தெரிவிக்குமாறு அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இதே உத்தரவு லாட்டரி சார்ந்த பணச்சுற்று, பரிசுவகைகள் எதற்காகவும் வெளிநாட்டு பணம் அனுப்புதற்கும் பொருந்தும்.

3. இந்த சுற்றறிக்கையில் அடங்கியுள்ள கட்டளைகள் யாவும் FEMA 1999 (42 of 1999) ன் சட்டப்பிரிவு எண் 10(4) மற்றும் சட்டப்பிரிவு எண் 11(1)ன் கீழ் வெளியிடப்படுகிறது. இந்த கட்டளைகளுக்கு புறம்பாகவோ, அனுசரிக்காமலோ நடப்பது ஒருவரை அந்த சட்டத்திள் குறிப்பிட்டுள்ள தண்டனைத் தொகை செலுத்தும் நிலைக்கு ஆளாக்கும்.

தங்கள் உண்மையுள்ள

 K.J. உதேஷி
தலைமைப் பொது மேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்