Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (39.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 12/05/2001

வங்கிகள் கடன் அட்டை வழங்குதல்

FSC.BC.120/24.01.011/2000-01 

மே 12, 2001

அட்டவணையிலுள்ள அனைத்து வணிக வங்கிகள்
(பிராந்தியக் கிராம வங்கிகள் நீங்கலாக)

அன்புடையீர்,

வங்கிகள் கடன் அட்டை வழங்குதல்

வங்கிகள் கடன் அட்டைகள் வழங்குவது சம்பந்தமாக வங்கிகள் பின்பற்றும் வழிமுறைகள், கடன் அட்டைகள் மேல் வங்கிகளுக்குள்ள மேற்பார்வைத் திறன், வசூலிக்கும் அளவு தன்மை முறை ஆகியவை பற்றி ஒரு சிறப்புப் பரிசீலனை செய்தோம். பரிசீலனையின் அறிக்கையை, வங்கிகளுக்கு அவர்களது கருத்துக்களுக்காகவும், விமர்சனங்களுக்காகவும் அனுப்பி யிருந்தோம். அவர்களிடமிருந்து வந்த கருத்துக்களின் அடிப்படையில் கீழே தரப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடன் அட்டைகள் வழங்குவது என்பது நல்ல ஆரோக்கியமான லாபம் ஈட்டுகின்ற வகையில் அமைய வங்கிகள் கடைபிடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

(i) கொடுபடாமல் நீண்ட நாள் பற்றில் இருப்பதை வசூல் செய்வது

 கடன் அட்டை மீதான கடன் என்பது அடமானமோ பிடிமானமோ இல்லாத ஒரு கடனாகும். கடன் அட்டை வைத்திருப்போரின் திருப்பிச் செலுத்தும் தன்மையைப் பொறுத்தே கடன் அட்டைகள் மீதான பற்று இருக்கிறது. கடன் அட்டை வழங்குவதில் உள்ள போட்டிகளின் வாயிலாகவும் நிலுவையில் உள்ள செலுத்தப்படவேண்டிய தொகையில் குறைந்த அளவே மாதாமாதம் கட்ட வேண்டியிருப்பதாலும் ஒன்றுக்கு மேற்பட்ட பல கடன் அட்டைகளை ஒருவர் வைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக ஒரு வாடிக்கையாளர் தனது திருப்பிச் செலுத்தும் திறனுக்கு அதிகமாக பல கடன் அட்டைகளில் கடன்பட்டு தனது முழு கடனையும் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகிறார். வங்கிகளின் ஒட்டு மொத்தமான கடன் அளவின் கடன் அட்டைகளால் ஏற்படும் கடன் என்பது கடன்கள் பொதுவாக ஏற்படுத்தக்கூடிய இடர்பாடுகள் அல்லது அபாயத்துக்கு மிக நெருக்கமானவை என்பது வங்கிகளுக்கு தெரியும். காலதாமதமாக வாராக் கடன்களை தீர்த்து எழுதும் முறை, கணக்கு வழக்குகளைச் சரிவர நடைமுறைப்படுத்தாமை ஆகியன ஏற்கனவே இருக்கும் கடன் அபாயங்களை மேலும் அதிகரிக்கும். வாராக்கடன்களையும் வருமானம் ஈட்டா செயலற்ற சொத்துக்களையும் அதிகரிக்கும். எனவே திருப்பிச் செலுத்தாமையுள் அளவைக் குறைப்புது என்பது வங்கிகளின் தலையாய கடமையாகும், தேவையுமாகும். இதற்காகத் திருப்பிச் செலுத்துதலை முறையாகக் கண்காணித்து, மேற்பார்வையிட்டுச் சீரமைப்புகளை அவ்வப்போது வங்கிகள் செய்ய வேண்டும். இயக்குநர் குழுவின் ஒப்புதலோடு தேவையான் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். கடன் அட்டைகள் மீதான கடன்களை வசூலிக்கத் தரகர்களை நியமிக்கும்போது இந்திய வங்கிகளின் சங்கத்தால் வெளியிடப் பட்டுள்ள நெறிமுறைகளை வழிமுறைகளாகப் பின்பற்ற வேண்டும்.

(ii) கடன் அட்டை வைத்திருப்போர் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல்:

புதிதாக செயலற்ற சொத்துகள் (வருமான்ம் (வட்டி) ஈட்டா சொத்துகள்) ஏதேனும் ஏற்படாமல் தடுக்கவும் கடன் வழங்குதலில் உள்ள அபாயத்தைக் குறைக்கவும், கடன் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் அமைப்புகள் பல தற்போது ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இத்தகைய அமைப்புகளில் சேர்வது உதவும். ஏற்கனவே எதிர்மறையாக வாராக் கடன்களாக இருக்கும் நிறுவனங்கள்/நபர்கள் பற்றிய தகவல்கள் இருந்தால், கடன் அட்டைகள் வழங்குவதிலும் அப்படிப்பட்ட வாராக் கடன்கள் ஏற்படாமல் தாக்கமுடியும்.

(iii) மோசடிகளைத் தடுத்தல்:

கடன் அட்டைகள் வழங்குவதில், மோசடி வழிமுறைகள் கீழே கண்டவாறு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

  • விண்ணப்பங்களிலேயே மோசடி

  • தொலைந்த/திட்டப்பட்ட அட்டைகளைப் பயன்படுத்துவது உண்மையான விண்ணப்பதாரர்களுக்குக் கிடைக்காமல் இருப்பது

  • போலி அல்லது மாற்றப்பட்ட அட்டைகள்

  • அட்டைகள் வைத்திருப்போருடன் வியாபார நிறுவனங்கள் கூட்டுசேர்ந்து

 (iv)பரிசீலனை

 கடன் அட்டை நிர்வாகம் என்பது திறமையான பின் அலுவலகத்தைச் சார்ந்து உள்ளது. துல்லியமான கணக்குகள், சரியான பில்கள், வரவுகளை முறையாகப் பதிவு செய்தல், சரியான தீர்வை அளித்தல் போன்ற பலதுறைகளில் பின் அலுவலகம் திறமையான வழிமுறைகளைச் சரிவர, உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். இத்துறைகளில் ஏற்கனவே உள்ள வளர்ச்சியை வங்கிகள் நன்கு பயன்படுத்திக் கொண்டு முழு இயக்கக் கட்டுபாட்டையும் திறமையான மேற்கொள்ள வேண்டும்.

(v) கடன் அட்டைகளுக்கான கட்டணம்:

கடன் அட்டைகள் வழங்கிச் செயல்படுதலில் பல கட்டணங்களை வங்கிகள் வசூலிக்கின்றன. உறுப்பினர் கட்டணம், நுழைவுக் கட்டணம், புதுப்பித்தல்/ஆண்டுக் கட்டணம், சேவை கட்டணம், சுழலும் கடன் வசதிக்கானக் கட்டணம், கட்டவேண்டிய பணத்தைக் காலதாமதமாகக் கட்டும் போது விதிக்கப்படும். அபராதக் கட்டணம் என்று பல வகை உண்டு. அட்டைகள் வழங்கும் வங்கிக்கும், அட்டை வைத்திருப்போருக்கும் அபராதக் கட்டணம் வசூலிப்பதில் தான் பெரும்பாலும் தகராறுகள் எழுகின்றன. இதுவரை தெரியப்படுத்தாமலோ சொல்லாமலோ இருந்தால் வங்கிகள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடும் நிலையிலேயே பல்வேறு கட்டணங்களையும் விண்ணப்பதாரருக்கு தெளிவுற அறிவுறுத்த வேண்டும். உறுப்பினர் சந்தா, புதுப்பித்தலுக்கான் கட்டணங்களுடன், தாமதமாக அல்லது செலுத்தாமல் இருக்கும் தொகைக்கான அபராதக் கட்டணத்தையும் அட்டை வைத்திருப்போருக்கு அறிவுறுத்த வேண்டும்.

2. தயவு செய்து பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

தங்களின் நம்பிக்கையுள்ள

(K.சீதாராமு)
தலைமை பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்