இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத்திட்டம் (IGNOAPS) பயனாளிகளுக்காக கணக்கு தொடங்கி இயக்குதல்
RBI/2010-2011/253 RPCD.CO.FID.BC.No. /12.01.012/2010-11
நவம்பர் 1, 2010
அனைத்து பட்டியலிடப்பட்ட வங்கிகளின்(ஊரக வங்கிகள் உட்பட) தலைமை மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி
அன்புடையீர்,
முதியோருக்கான தேசியக் கொள்கை கமிட்டியின் 4வது பரிசீலனைக் கூட்டத்தில் முதியோருக்கு நேயமிக்க ஒரு கொள்கை தேவை என்பதை கமிட்டி வலியுறுத்திப் பேசியது எனவும் அத்துடன் மக்களில் இந்தப் பிரிவினருக்காக போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்ய உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது எனவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத்திட்டத்தின் பயனாளிகளுடைய வங்கிக்கணக்கில் பணம் நேரடியாக வரவு வைக்கப்படவேண்டுமென்பது கமிட்டியின் முடிவுகளில் ஒன்றாகும்.
2. அதன்படி இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத்திட்டத்தின் பயனாளிகள் வங்கிக்கணக்குகளைத் தொடங்கிடும்படி உங்களின் கிளைகளுக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டுகிறோம். இதனால் பயனாளிகள் கணக்கில் இந்திய அரசு பணத்தை நேரடியாக வரவு வைத்திட இது ஏதுவாகும்.
தங்கள் உண்மையுள்ள
(டாக். தீபாலி பண்ட் ஜோஷி தலைமைப்பொது மேலாளர் பொறுப்பு
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்