RBI/2010-11/182
RPCD.CO.FID.BC.No.2433/12.01.012/2010-11
ஆகஸ்ட் 26, 2010
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்/
முதன்மை நிர்வாக அதிகாரி
அனைத்துப் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
அன்புடையீர்,
அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற வசதியாக
மாணவர்கள் அடிப்படை சேமிப்புக் கணக்கைத் தொடங்குதல்
இந்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் செயலர் எங்களின் கவனத்திற்குக் கொண்டுவந்த தகவலின்படி மத்திய மாநில அரசுகளின் நலச்சலுகைகளைப் பெற விரும்பும் சிறுபான்மையினர் பிரிவைச் சார்ந்த மாணவர்கள் பெயரில் அடிப்படை சேமிப்புக் கணக்கைத் தொடங்க வங்கிகள் முன்வருவதில்லை என்பதை அறிகிறோம். இது அரசு சலுகைத் திட்டத்தின் விண்ணப்பதாரர்களுக்கு இடையூறு விளைவிப்பதோடு கண்டனத்திற்கு உள்ளாகிறது.
2. இது தொடர்பாக பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் அடிப்படை சேமிப்புக் கணக்கைத் தொடங்குவது குறித்து நவம்பர் 11,2005 தேதியிட்ட சுற்றறிக்கை DBOD. Leg. BC.44/09.07.005/2005-06ஐ கவனிக்க வேண்டுகிறோம். மேலும், சிறுபான்மையினருக்கு முன்னுரிமைப் பிரிவில் கடன் வழங்குதல் குறித்த ஜூலை 1, 2010 தேதியிட்ட தொகுப்புச்சுற்றறிக்கை RPCD.SP.BC.No.4/ 09.10.01/2010-11ஐப் பார்வையிடவும். அரசு நிதிச்சலுகையுடன் கூடிய சிறப்புத் திட்டங்களால் கிடைக்கும் பலன்கள் நியாயமாகவும் சரியான அளவிலும் சிறுபான்மையினர் சமூகத்திற்கு கிடைப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. நிதிச்சலுகைகள் அல்லது வேறுவிதமான அரசு சார்ந்த திட்டங்களின் பலன்களைப் பெறும்பொருட்டு, சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அல்லது வேறுவிதமான பிற்படுத்தப்பட்ட பிரிவினர் அடிப்படை சேமிப்புக் கணக்கு அல்லது வேறு கணக்குகள் தொடங்கமுற்பட்டு வங்கியை அணுகும்போது, நீங்கள் அந்த கணக்குகள் தொடங்குவதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள். இருப்பினும் கணக்கைத் தொடங்கும்போது இந்த நோக்கத்திற்காக எந்த அளவிற்கு பொருத்தமானதோ அந்த அளவிற்கு உங்கள் வாடிக்கையாளரை அறிதலுக்கான (KYC) நடைமுறைகளைப் பின்பற்றலாம்.
தங்கள் உண்மையுள்ள
(சுஷ்மா விஜி)
துணைப்பொது மேலாளர்
|