Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (43.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 19/04/2001

வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்கள்

இந்திய ரிசர்வ் வங்கி
மைய அலுவலகம்
வங்கிகள் செயல்பாடு மற்றும் வளர்ச்சித்துறை
மையம்-1
உலக வர்த்தக மையம்
கஃபே பரேடு, கொலாபா, மும்பை-400 005

 

DBOD.NO.DIR.BC.104/13.03.00/2000-01                ஏப்ரல் 19, 2001

வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்கள்

வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949ன் பிரிவுகள் 35A மற்றும் 21 அளிக்கும் அதிகாரங்களின்படியும் 2000ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதியிட்ட சுற்றறிக்கை பகுதியளவு மாற்றியமைக்கப்பட்டதன்படியும், பொதுநல நோக்கின் அவசியத்திலும் கீழ்க்கண்டவாறு கட்டளைகள் பிறப்பிக்கிறது.

(i) மேற்கண்ட உத்தரவுக்கு இணைப்பு I இருந்தது திருத்தியமைக்கப்பட்ட இணைப்பாக மாற்றப்படுகிறது.

(ii) மேற்கண்ட உத்தரவில் பத்தி 22ல் பகுதி (C) கீழ்க்கண்டவைகளால் மாற்றப்படுகிறது.

“(C) வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களில், வேறுபாடு காண்பது, ஒரு வைப்புத்தொகைக்கும் மற்றொன்றிற்குமோ அதே நாளில் பெறப்பட்டவைகளுக்கோ, ஒரே நாளில் முதிர்வடைபவைகளுக்கோ, அதே அலுவலகத்தில் பெறப்பட்டவைகளுக்கோ அல்லது அவ்வங்கியின் பல்வேறு அலுவலங்களில் பெறப்பட்டவைகளுக்கோ பின்வரும் விதிவிலக்குகளுக்கு உட்பட்டதாகும். மூத்த குடிமக்களுக்கான நிரந்த்ர வைப்புத்திட்டதிற்கு உயர்ந்த மற்றும் நிரந்தர வட்டி விகிதங்கள் சாதாரண வைப்புத்தொகைகளுக்கு அளிக்கப்ப்டுவதைவிட அதிகமாகவும் ரூ15 லட்சமும் அதற்கு மேற்பட்ட தொகையை உடைய தனிப்பட்ட வைப்புத்தொகைகளுக்கு மாறுபட்ட வட்டி விகிதங்கள் வழங்கப்படும்.”

 (i) ரூ15 லட்சமும் அதற்கு மேற்பட்ட தனிப்பட்ட நிரந்தர வைப்புத்தொகைகளுக்கு மாறுபட்ட வட்டி விகிதங்கள் அளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆகவே வங்கிகள், ரூ15 லட்சமும் அதற்கு மேற்பட்ட வைப்புத்தொகைகளுக்கு ஒரே வட்டி விகிதத்தையோ அல்லது மாறுபட்ட வட்டி விகிதத்தையோ அளிக்கலாம். ரூ15 லட்சத்திற்கு கீழ்பட்ட வைப்புத்தொகைகளுக்கு ஒரே வட்டி விகிதம் பொருந்தும்.

(ii) வேறுபட்ட வட்டி விகிதங்கள் அளிக்கப்படும் வைப்புத் தொகைகள் உட்பட, வைப்புத்தொகைகளுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதங்களின் அட்டவணையை வங்கிகள் முன்கூட்டியே தெரிவித்திடல் வேண்டும். வங்கிகளால் அளிக்கப்படும் வட்டி விகிதங்கள் அட்டவணைக்குட்பட்டதாக அமைய வேண்டுமே தவிர, வங்கிக்கும் வைப்புதாரருக்குமிடையே நடக்கும் பேரமாக ஆகிவிடக்கூடாது.

(iii) மேலே சொன்ன உத்தரவில் பத்தி 9ல் பகுதி (i) கீழ்க்கண்டவாறு மாற்றியமைக்கப் படுகிறது.

(i) வைப்புத் தொகை போடும் நேரத்தில் ஒப்புக்கொண்டபடி, அத்தொகை முதிர்வடைவதற்கு முன்பாகவே, வாடிக்கையாளர் வேண்டுகோள் விடுத்தால், வங்கி, அத்தொகையை திரும்ப பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். கால இலக்கு கொண்ட வைப்புத்தொகைகள் குறைகாலத்தில் திரும்பப் பெறப்படும்போது, தண்டனை வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதில் வங்கிகளுக்கு சுதந்திரம் உண்டு. வைப்புதாரர்கள், வட்டி விகிதத்தோடு அதற்குண்டான வட்டி விகிதத்தையும் அறிந்திருக்க வேண்டும் என்பதை வங்கி உருதி செய்துகொள்ள வேண்டும். தனிப்பட்டவர்கள் மற்றும் இந்து கூட்டுக்குடும்பங்கள் தவிர வேறு ஸ்தாபனங்கள் பெரும் வைப்புத்தொகையை குறைகாலத்தில் திரும்பப் பெறும்போது வங்கிகள் தங்கள் விருப்பதிதிற்கேற்ப, அதற்கு அனுமதி மறுக்கலாம். எனினும் வங்கிகள், அத்தகைய வைப்புத் தொகைகளை பெற்றுக்கொள்ளும் நேரத்தில், குறைகாலத்தில் முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதிக்க இயலாது என்னும் கொள்கையை வைப்புதாரர்களுக்கு அறிவித்திட வேண்டும்.

(iv) பத்தி IIல் பகுதி (i) கீழ்க்கண்டவாறு மாற்றப்படுகிறது.

(i) குறித்த காலம் தாண்டிய வைப்புத்தொகையையோ அல்லது அதன் ஒரு பகுதி தொகையையோ புதுப்பிப்பதோ வங்கியின் விருப்பத்திற்குட்பட்டதாகும். இது எப்போது என்றால் கெடுதாண்டிய காலம் முதிர்வடையும் தேதியிருந்து (இரண்டு தேதிகளையும் உள்ளடக்கிய) புதுப்பிக்கும் தேதிவரை 14 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதோடு அவ்வறு புதுப்பிக்கப்பட்ட வைப்புத்தொகைக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம், முதிர்வடையும் நேரத்தில் நிலவிய வட்டிவிகிதத்தையே புதுப்பிக்கப்பட்ட காலத்திற்கும் அளிக்கலாம். குறித்த கெடு தாண்டிய வைப்புத்தொகைகளுக்கு, குறித்தகெடுகாலம் 14 நாட்களுக்கு மேற்பட்டால், அதோடு வைப்புத்தொகைதாரர் கெடு தாண்டிய வைப்பின் மொத்தத்தொகையையோ அல்லது ஒரு பகுதியையோ புதிய கால வைப்பாக தரும்போது, புதிய வைப்பு என்று அழைக்கப்படுபவைகளுக்கு, கெடு தாண்டிய காலத்திற்கு வங்கி தனது சொந்த வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும்.

2. 2000ம் ஆண்டு நதம்பர் 4 தேதியிட்ட DBOD.NO.DIR.BC.46/13.03.00/2000-2001 உத்தரவின் மற்ற ஷரத்துக்கள் மாற்றப்படவில்லை.

கே.எல். கேடர்பால்

செயல் இயக்குநர்

 

இணைப்பு

 

உள்நாட்டு/சாதாரண குடியிருப்போர் அல்லாத /

குடியிருப்போர் அல்லாத சிறப்பு ரூபாய் கணக்குகளில்

உள்ள வைப்புகளுக்கான வட்டி விகிதங்கள்

கணக்குகளின் வகை

நூற்றுக்கு சதவீதம்

(i) நடைமுறையில் உள்ள

ஒன்றுமில்லை

(ii) சேமிப்பு

4.0

(iii) கால வைப்பு

 

(a) ரூ15 லட்சத்திற்கும் கீழ் 15 நாட்களுக்கும் அதற்கு மேலும்

இலவசம்

(b) ரூ15 லட்சத்திற்கும் கீழ் 7 நாட்களுக்கும் அதற்கு மேலும்

இலவசம்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்