இந்திய
ரிசர்வ் வங்கி
அந்நியச்
செலாவணி
கட்டுப்பாட்டுத்துறை
மைய
அலுவலகம்
மும்பை 400 001
மார்ச் 31, 2005
RBI/2004-05/402
A.P.(DIR Series)
சுற்றறிக்கை
எண் 38
அங்கீகரிக்கப்பட்ட
அந்நியச்
செலாவணி
வர்த்தகர்
அனைவருக்கும்
அன்புடையீர்,
குடியிருப்பு
தனிநபருக்கான
அமெரிக்க
டாலர் 25000 க்கான
தாராளமயமாக்கப்பட்ட
பண அனுப்பீடு
அங்கீகரிக்கப்பட்ட
வணிகர்கள்
வங்கிகள்
கவனத்திற்கு
A.P.(DIR Series)
சுற்றறிக்கை
எண்.64, பெப்ரவரி
4, 2004ன் பாரா 3-4 (iii)ல்
கண்டுள்ள
குறிப்பின்படி
மேற்தலைப்பிட்ட
திட்டத்தின்
கீழ்
நேரடியாகவோ
அல்லது
மறைமுகமாகவோ
பின்குறிப்பிடப்படும்
பண அனுப்பீடு
அனுமதிக்கப்படமாட்டாது.
அதாவது “நிதிசார்
நடவடிக்கைகளுக்கான
சிறப்புக்
கடமைப்படை”
ஒத்துழைப்பளிக்காத
நாடுகள்
மற்றும்
பிரதேசங்கள்
என்று
குறிப்பிட்டுக்
காட்டிய (உதாரணமாக)
குக்தீவுகள்,
எகிப்து,
இந்தோனேஷியா,
மயன்மார்,
நவுரு,
நைஜீரியா,
பிலிப்பைன்ஸ்,
உக்ரேன்
போன்றவற்றிற்கு
பணம்
அனுப்புதல்
அனுமதிக்கப்படமாட்டாது.
2. இவ்வாறு
தாராளமயமாக்கப்பட்ட
பண அனுப்புத்
திட்டத்தின்
கீழ் உள்ள
நடவடிக்கைகளை
மேற்கொள்ளும்
வங்கிகள்
இவ்வாறு “நிதிசார்
நடவடிக்கைகளுக்கான
சிறப்புக்
கடமைப்படை”
ஒத்துழைப்பளிக்காத
நாடுகள்
மற்றும்
பிரதேசங்களின்
பெயர்களைப்
பதிவு செய்து
வைத்து அதில்
அவ்வப்போது
செய்யப்படும்
மாற்றங்களையும்
பதிவு செய்து
தங்கள்
கிளைகளின்
செயல்பாட்டிற்காகவும்
அனுப்பிவைக்குமாறு
இது தொடர்பாக
அறிவுறுத்தப்
படுகிறார்கள்.
இந்த
நோக்கத்திற்காக
“நிதிசார்
நடவடிக்கைகளுக்கான
சிறப்புக்
கடமைப்படை”
அவ்வப்போது
அறிவிக்கும்
இத்தகு
ஒத்துழையா
நாடுகளின்
பெயர்களை
உடனுக்குடன்
அறிந்து
கொள்ள
வங்கிகள் www.fatf.gafi.org
ல் இணைய
தளத்தைத்
தொடர்பு
கொள்ளவும்.
3.
அங்கீகரிக்கப்பட்ட
வணிகர்கள்
இந்த
சுற்றறிக்கையின்
கருத்துக்களை
தத்தம் குழு
முகவர்கள்
நுகர்வோர்கள்
கவனத்திற்குக்
கொண்டு
செல்வாராக.
4. இந்தச்
சுற்றறிக்கையில்
அடங்கியுள்ள
கட்டளைகள்
யாவும் FEMA 1999 (42 of 1999) ன்
சட்டப்பிரிவு
எண் 10(4) மற்றும்
சட்டப்பிரிவு
எண் 11(1) ன் கீழ்
வெளியிடப்படுகிறது.
வேறெந்த
சட்டத்தின்
கீழ்
வழங்கப்படும்
அனுமதிகள் /
ஏற்புகள்
இவற்றிற்கு
தீங்கிழைக்கா-வண்ணம்
இவை
வெளியிடப்படுன்றன.
தங்கள்
உண்மையுள்ள
F.R. ஜோசப்
தலைமைப்
பொது மேலாளர் |