RBI/2009-10/474
A.P. (DIR.Series)Circular No.54
மே 26, 2010
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிகள் – (வகை 1)
அன்புடையீர்,
லாட்டரி, பண சுழற்சி திட்டங்கள், சுலபமான பணத்திற்கான
போலியான அறிவிப்பு ... ஆகியவற்றில் பங்கேற்ப பணம் அனுப்புதல்
சுற்றறிக்கை எண்.22, A.P. (DIR.வரிசை) தேதி டிசம்பர் 7, 2000, A.P. (DIR. வரிசை) சுற்றறிக்கை எண்.02, தேதி ஜூலை 27, 2001, A.P. (DIR.வரிசை) சுற்றறிக்கை எண்.49 தேதி ஜுன் 4, 2002 ஆகியவற்றை பார்க்கும்படி அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிகள் வகை (1) ஐ கேட்டுக்கொள்கிறோம். அந்நியச் செலாவணி நிர்வாகச்சட்டம் 1999ன்கீழ் லாட்டரி விளையாட்டுத் திட்டத்தில் பங்கேற்கும்பொருட்டு எந்தவொரு வடிவிலும் பணம் அனுப்புதல் தடைசெய்யப்படுகிறது. இத்தகு தடைகள் லாட்டரி போன்ற வெவ்வேறு பெயர்களில் அதாவது பணசுழற்சித் திட்டங்கள், பரிசுத்திட்டங்கள், விருதுகள் போன்ற எவற்றிலும் பங்கேற்கும் பணம் அனுப்புதல்களுக்கும் பொருந்தும்.
2.சமீபகாலத்தில் மோசடி பேர்வழிகளிடமிருந்து சுலபமான பணத்திற்கான போலியான திட்டங்கள்/அறிவிப்புகள் குறித்து கடிதங்கள், மின்னஞ்சல், கைபேசிகள், குறுஞ்செய்திகள் மூலம் தகவல்கள் அதிக அளவில் வருவது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கடிதப்படிவம் போன்ற போலியான கடிதங்களில் உயர் அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் கையொப்பமிட்டது போல தோற்றமளிக்கும்படி, சில தகவல்கள் சிலரை இலக்காக்கி அனுப்பப்படுகின்றன. பல இந்தியக் குடிமக்கள் இத்தகு போலியான அறிவிப்புகளுக்கு பலியாகி, இதில் அதிகப்பணத்தை இழந்துள்ளனர். இத்தகு போலியான திட்டங்கள்/தேர்வுகள் குறித்து பத்திரிகை மற்றும் மின்னணு ஊடகம் மூலம் இந்திய ரிசர்வ் வங்கி பல நேரங்களில் பொதுமக்களை எச்சரித்துள்ளது. இது குறித்து அறிவூட்டும் விழிப்புணர்வு முகாம்களுக்கும் திட்டமிடப் பட்டுள்ளது.
3.மோசடிப் பேர்வழிகள் வெவ்வேறு பெயர்களில் அதாவது பரிசீலனைக்கட்டணம், வரித்தீர்வுக் கட்டணம், மாற்றுக்கட்டணம், தீர்வுக்கட்டணம் என்று எளிதில் ஏமாறுபவர்களிடமிருந்து பணம் கறப்பது இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மோசடிகளில் பலியாகிறவர்கள் இந்தியாவிலுள்ள வங்கிக் கணக்குகளில் இவ்வாறு பணத்தை போடச்சொல்லி தூண்டப்படுகிறார்கள். இந்தப்பணம் கணக்கிலிருந்து உடனடியாக எடுக்கப்படுகிறது. தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பெயர்களில் பல்வேறு கணக்குகள் பல்வேறு வங்கிக் கிளைகளில் ஆரம்பிக்கப்பட்டு, பரிவர்த்தனைக் கட்டணங்கள் போன்றவை வசூலிக்கப்படுவது தெரியவந்துள்ளது. ஆகவே அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிகள் (வகை 1) இத்தகு கணக்குகளை ஆரம்பிக்கும்போது அவற்றில் நடக்கும் பரிவர்த்தனைகளின்போதும் கூடுதல் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றன. இந்தியாவில் வசிக்கும் ஒருவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவ்வாறான விதத்தில் பணத்தை வசூலித்தல் மற்றும் இந்தியாவிற்கு வெளியே பணம் அனுப்புதல் போன்ற காரியங்களில் ஈடுபட்டால் அவர்மீது அந்நியச் செலாவணி நிர்வாகச்சட்டம் 1999ஐ மீறியதற்காக நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, உங்கள் வாடிக்கையாளரை அறிக(KYC)/கறுப்பு பண ஒழிப்புத் தர அளவைகள் (AML) குறித்த விதிமுறைகளை மீறியதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
4.அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிகள் (வகை 1) இந்த சுற்றறிக்கையின் கருத்துக்களை தனது அங்கத்தினர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கவும். மேலே குறிப்பிடப்பட்ட A.P. (DIR.வரிசை) சுற்றறிக்கையிலுள்ள அறிவுறுத்தல்கள் குறித்து அதிக அளவில் விளம்பரம் செய்யவும். மேலும் டிசம்பர் 7, 2007, ஜூலை 30,2009 வெளியிடப்பட்ட போலியான அறிவிப்பு/சூதாட்ட வெற்றிகள்/ சுலப பண அறிவிப்புகள் குறித்த பத்திரிகை வெளியீட்டிற்கும் அதிக விளம்பரம் அளிக்கலாம்.
5.அந்நியச் செலாவணி நிர்வாகச்சட்டம் 1999ன் சட்டப்பிரிவு 10(4), 11(1) மற்றும் 42ன்கீழ் உள்ள கருத்துக்களின்படி இந்த சுற்றறிக்கையிலுள்ள வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகின்றன.
தங்கள் உண்மையுள்ள
(சலீம் கங்காதரன்)
தலைமைப்பொது மேலாளர் பொறுப்பு
|