Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (63.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 09/06/2005

இறந்த வைப்புதாரர்களின் வாரிசுகளின் கேட்பு மீது தீர்வு - எளிதாக்கப்பட்ட நடைமுறைகள்

RBI /2004-05/490
DBOD. Leg. No. BC. 95/09.07.005/2004-05

ஜுன் 9, 2005

அனைத்து அட்டவணைக்குட்பட்ட வணிக வங்கிகளின்
தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளுக்கும்
(பிராந்திய கிராம வங்கிகள் நீங்கலாக)

அன்புடையீர்,

 இறந்த வைப்புதாரர்களின் வாரிசுகளின் கேட்பு மீது தீர்வு - எளிதாக்கப்பட்ட நடைமுறைகள்

2003 நவம்பர் 3ஆம் தேதி ஆண்டுக் கொள்கை அறிவிப்பின் இடைக்கால சீராய்வில் கூறியபடி சாதாரணக் குடிமகனுக்கு கிடைக்க வேண்டிய பொதுச்சேவைகளை வங்கிகள் மேம்படுத்தும்பொருட்டு “பொதுச்சேவை மற்றும் நடைமுறைகள் மீதான ஆய்வை” மேற்கொள்ள அமைத்தது. இக்குழு தனது அறிக்கை எண் 3இல் வங்கிச் செயல்பாடுகள்: ‘வணிகம் அல்லாத தனிநபர்களுக்கான சேமிப்புக்கணக்குகள் மற்றும் இதர வசதிகள்’ என்ற தலைப்பில், தொல்லை கொடுக்கும் நடைமுறைகள் குறிப்பாக இறந்த வைப்புதாரர்களின் குடும்பத்தார் மிகவும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். 2000 மார்ச் 14 மற்றும் 2000 டிசம்பர் 6 தேதியிட்ட எங்கள் சுற்றறிக்கைகள் DBOD.BC.148/09.07.007/1999-2000 மற்றும் BC.56/09.07.007/2000-01 இறந்த போன வைப்புதாரர்களின் வாரிசுகளின் கேட்பு மீது தீர்வு காண்பது சம்பந்தமாக அறிவுரைகள் வழங்கியிருந்தாலும், மேற்கூறிய குழுவின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, இதற்கு முன்னர் அளிக்கப்பட்ட அறிவுரைகளை அகற்றி கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. துரிதமான தொல்லைகள் இல்லாத தீர்வாக வாரிசுகளின் கேட்புகள் முடிக்கப்படவேண்டும்.

 

2. வைப்பில் உள்ள நிலுவைத்தொகையை அடைதல் 

(A) இருப்போர்/வாரிசு நியமனம் உள்ளடக்கிய வைப்புகள்

2.1. வைப்புதாரர், வைப்புகளுக்கு இருக்கும் வாரிசு நியமன வசதியைப் பயன்படுத்தி, வாரிசை நியமித்தாலோ அல்லது ‘உயிருடன் இருப்பவர்” என்ற வார்த்தையை வைப்புதாரர் பயன்படுத்தியிருந்தாலோ (யாராவது ஒருவர் அல்லது உயிருடன் இருப்பவர், இருவரில் ஒருவர் அல்லது உயிருடன் இருப்பவர், முன்னவர்/பின்னவர் அல்லது உயிருடன் இருப்பவர்) அப்படிப்பட்ட வைப்புகள் முதல் ஒரு வைப்புதாரர் இறந்த உயிருடன் இருக்கும் மற்ற வைப்புதாரர் கேட்டாலோ அல்லது நியமனம் செய்யப்பட்ட வாரிசு கேட்டாலோ கீழே சொல்லப்பட்டவைகளை உறுதி செய்து கொண்டு கொடுக்கப்படலாம்.

a. உயிருடன் இருக்கும் வைப்புதாரர்/நியமிக்கப்பட்ட வாரிசின் அடையாளம் மற்றும் வைப்புதாரரின் இறப்புக்கும் தகுந்த

 b. நீதிமன்றத் தடை ஏதேனும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்

c. உயிருடன் இருப்பவருக்கோ அல்லது வாரிசுக்கோ கொடுக்கப்படுவது இறந்து போனவரின் வாரிசுகள் அனைவருக்கும் அவரைப் பிரதிநிதி (ஏஜென்டாக)யாகக் கருதித்தான் என்பதை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதாவது அவருக்குக் கொடுப்பது என்பது மற்ற எவருடைய உரிமையையும் பாதிக்காது.

2.2. உயிருடன் இருப்பவருக்கோ அல்லது வாரிசுக்கோ மேற்கூறிய நிபந்தனைகளுக்குட்பட்டு அளிக்கப்படும் தொகை, வங்கியின் பொறுப்புகளிலிருந்து முழுமையாக வங்கியை விடுவிப்பதால், சட்ட ரீதியான ஆவணங்களைச் சமர்பிக்கச் சொல்வது தேவைக்கதிகமாக இருக்கிறது. தவிர்க்கக்கூடிய தொல்லைகளையே அளிக்கும். எனவே மரபுரிமைச் சான்றிதழ், ஆட்சி உரிமை ஆவணம், விருப்புறுதிச் சான்றிதழ், ஈட்டுறுதிப்பிணை முறிகடிதம் போன்ற சட்ட ஆவணங்களைக் கொடுக்கும்படி வற்புறுத்தத் தேவையில்லை, வைப்புத்தொகை எவ்வளவு இருந்தாலும் இது பொருந்தும்.

B. உயிருடன் இருப்போர்/வாரிசு நியமனம் இல்லாத வைப்புகள்

 இறந்து போன வைப்புதாரர், வாரிசுகள் நியமனம் செய்யாமலிருந்தாலோ அல்லது வைப்புகளில் ‘உயிருடன் இருப்பவர்’ என்ற வார்த்தை இல்லாமலிருந்தாலோ அவைகள் மீதான கேட்புக்கு எளிதான நடைமுறைக் கொள்கைகளை உருவாக்கிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை நிர்ணயம் செய்து கொண்டு அதற்குள் வரும் வைப்புக்ள் மீதான கேட்புக்கு மேலே சொல்லப்பட்ட ஆவணங்களில் ஈட்டுறுதிப் பிணைமுறிக் கடிதத்தை மட்டும் பெற்றுக் கொண்டு தீர்வு காணலாம்.

3. முதிர்வுத் தேதிக்கு முன்னரே வைப்புத்தொகை வழங்குதல்

 கணக்குத் துவக்கும் படிவத்திலேயே, வைப்புதாரர் வைப்பு முதிர்வுறும் காலத்திற்குள்ளாகவே இறக்க நேரிட்டால், வைப்பு முதிர்வு நிலை அடையுமுன்னரே உரிய தொகை வழங்க அனுமதிக்கலாம். முதிர்வு நிலை அடையுமுன்னரே முடித்துக் கொள்ளப்படும் வைப்புகளுக்குரிய நிபந்தணைகளையும் கட்டுப்பாடுகளையும் கூட அப்படிவத்திலேயே தெளிவுறுத்த வேண்டும். இதுபோன்ற முதிர்வு நிலைக்கு முன்னர் கோரப்படும் வைப்புகளுக்கு அபராதத் தொகை ஏதும் விதிக்கக்கூடாது.

4. இறந்தவர் பெயரில் வரும் வரவுகள்

 உயிருடன் இருக்கும் வைப்புதாரர்/வாரிசுகளுக்கு இன்னல் ஏதும் கொடுக்காவண்ணம் அவர்களிடம் ஒப்பந்தம் அல்லது ஒப்புதல் கடிதம் மூலம் இறந்தவர் பெயருக்கு வரும் வரவுகளை கீழே கண்டவைகளின் ஏதேனும் ஒன்றைச் செயல்படுத்திட வேண்டும்.

  •  உயிருடன் இருப்பவர்/வாரிசு இறந்தவர் பெயரில் ‘அன்னாரின் உடைமை’ என்று ஒரு கணக்குத் துவங்கி அவர் பெயருக்கு வரும் வரவுகளை அக்கணக்கில் வரவு வைக்க வங்கிக்கு அதிகாரம் அளித்தல், ஆனால் இக்கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாது.

  • இறந்தவர் பெயருக்கு வரும் வரவுகளை அனுப்பித்தவருக்கே வைப்புதாரர் இறந்துவிட்டதைத் தெரியப்படுத்தி வங்கி திருப்பி அனுப்புவதோடு மட்டுமல்லாமல் உயிருடன் இருப்போர்/ வாரிசுகளுக்கும் அதனைத் தெரியப்படுத்த வேண்டும். பின்னர் அனுப்புவரிடம் அவர்கள் முறையிட்டுப் பெற்று கொள்ளலாம்.

5. பாதுகாப்புப் பெட்டகங்கள்/பாதுகாப்பிற்காகக் கொள்ளப்பட்ட பொருட்களை அடைதல்

 நியமனம் செய்யப்பட்ட வாரிசோ அல்லது உயிருடன் இருக்கும் வைப்புதாரரோ பாதுகாப்புப் பெட்டகங்கள்/ பாதுகாப்பிற்காகக் கொள்ளப்பட்ட பொருட்களை அடைவதற்கு வைப்புகளுக்கு மேலே சொன்ன நடைமுறைகளையே அப்படியே பின்பற்ற அறிவுறுத்தப் படுகிறார்கள். விரிவான விளக்கங்கள் பின்னர் தனியாக அனுப்பப்படும்.

6. கேட்புகளுக்கு மீதான தீர்வுக்கு கால அவகாசம்

வங்கிக்குத் திருப்தி ஏற்படுகின்ற வகையில் இறப்புச் சான்றிதழ், கேட்புகளின் உண்மைத்தரச் சான்றுகள் கிடைத்த 15 தினங்களுக்குள் கேட்புகளுக்குரிய தொகை வழங்கப்படவேண்டும். இக்கால அவகாசத்திற்கு மேல் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ள கேட்புகள் பற்றி இயக்குநர் குழுவிற்கு ஒவ்வொரு கிளையும் அறிவிக்க வேண்டும்.

7. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949

1949 வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவு 45 ZA யிலிருந்து 45 ZF வரை உள்ள பிரிவுகளின் அம்சங்களையும் வங்கி நிறுவனங்கள் (நியமன)1985 விதிகளையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

8. எளிதாக்கப்பட்ட இயக்க நடைமுறைகள்

 மேலே கூறப்பட்ட அறிவுரைகளைக் கருத்தில் கொண்டு, இறந்த வைப்புதாரர்களின் பல்வேறு சூழ்நிலைகளில் எழும் கேட்புகளுக்கு ஏற்றாற்போல் ஒரு மாதிரி இயக்க நடைமுறைகளை இந்திய வங்கிகள் சங்கம் வெளியிடவேண்டும். வங்கிகள் தங்கள் தங்கள் நடைமுறைகளை மறுஆய்வு செய்து எளிய இயக்க நடைமுறைகளை வகுத்து தங்கள் இயக்குநர் குழுவின் ஒப்புதலைப் பெறவேண்டும்.

9. வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுதலும் விளம்பரமும்

 வாரிசு நியமனம்/உயிருடன் இருப்பவர் என்ற வார்த்தைகள் வைப்புகள் தொடங்கும்போது அல்லது புதுப்பிக்கப்படும்போது கடைப்பிடிக்கப்படுவது வாடிக்கையாளர்களுக்கு நன்மை விளைவிக்குமாதலால் இதற்கும் போதிய விளம்பரம்/அறிவிப்பு ஒருவர் இறந்துவிட்டால், உயிருடன் இருப்பவர் என்ற வார்த்தை இல்லாவிடில், தானாகவே மற்றவர்களுக்கு வைப்புத் தொகை கிடைக்காது என்பதை விளம்பரத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.

10. இறந்து போன வைப்புதாரர்களின் வாரிசுகளுக்கு/உயிருடன் இருக்கும் வைப்புதாரர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாடிக்கையாளர் சேவையை குறிக்கோளோடு இவ்வறிவுப்புகள் நோக்கப்படவேண்டும்.

11. கிடைத்தமைக்கு ஒப்புதல் அளிக்கவும்

 

நம்பிக்கையுள்ள

(ஆனந்த் சின்ஹா)
தலைமை பொது மேலாளர் பொறுப்பு

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்