Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (97.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 09/11/2009

காசோலைகளுக்கு மதிப்பு மறுக்கப்படுதல் -அடிக்கடி மதிப்பு மறுக்கப்படும் சம்பவங்களை கையாளுதல்

RBI/2009-10/213
DBOD.No.Leg.BC.59/09.07.005/2009-10

நவம்பர் 9, 2009

அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(வட்டார கிராமிய வங்கிகள் தவிர)

அன்புடையீர்,

காசோலைகளுக்கு மதிப்பு மறுக்கப்படுதல் -
அடிக்கடி மதிப்பு மறுக்கப்படும் சம்பவங்களை கையாளுதல்

2009 ஜூலை 1 தேதியிட்ட தொகுப்பு சுற்றறிக்கை DBOD.No.Leg.BC. 9/ 09.07.006/2009ன் பத்தி 15.4 ஐ பார்க்கவும்.  இதில் ரூ.1 கோடியும் அதற்கு மேலும் உள்ள காசோலைகள் அடிக்கடி மதிப்பு மறுக்கப்படும் சம்பவங்களை சமாளிக்க, வாடிக்கையாளர் சேவையின்கீழ் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்ட சில நடவடிக்கைகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

2. இது தொடர்பாக, ரூ.1 கோடிக்கும் குறைவாக மதிப்பு உள்ள காசோலைகளுக்கு அடிக்கடி மதிப்பு மறுக்கப்படுவது கவனம் செலுத்தப்பட வேண்டிய விஷயம் மற்றும் வங்கிகள் இவ்விஷயத்தில் பொருத்தமான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.  சிறிய காசோலைகள் விஷயத்தில் பத்தி 15.4ல் கூறப்பட்டுள்ளபடி அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முடியாவிட்டாலும் கட்டுக்கு அடங்காத வாடிக்கையாளர்களின் விஷயத்தில் வங்கிகள் தங்களது சொந்த பிரத்தியேக அணுகுமுறையை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆகவே ரூ.1 கோடிக்கும் குறைவாக மதிப்பு உள்ள காசோலைகள் மதிப்பு மறுக்கப்படும் விஷயத்தில் வங்கிகள் தங்களது குழுமம் ஒப்புதல் அளித்த கொள்கையை ஏற்படுத்திக் கொள்ளலாம்.  அக்கொள்கை மின்னணுத் தீர்வு சேவைக்கட்டளைகள் அடிக்கடி மதிப்பு மறுக்கப்படுவதற்கும் நடவடிக்கைகளை பரிந்துரைக்கலாம்.

தங்கள் உண்மையுள்ள

B. மஹாபாத்ரா
தலைமைப் பொது மேலாளர்.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்