RBI/2009-2010/211
UBD.BPD(PCB)Cir.No.19/13/01.000/2009-10
நவம்பர் 9, 2009
அனைத்து தொடக்க நகரக் கூட்டுறவு வங்கிகளின்
தலைமை நிர்வாக அதிகாரிகள்
அன்புடையீர்,
நகரக்கூட்டுறவு வங்கிகள் வசமுள்ள கோரப்படாத/
செயல்படாத முடங்கிய வைப்புக்கணக்குகள்
மேற்குறிப்பிட்ட விஷயங்குறித்து செப்டம்பர் 1, 2008 தேதியிட்ட UBD.DS.PCB. Cir.No.9/13/01.00/2008-2009 சுற்றறிக்கையைப் பார்க்கவும். அந்தச் சுற்றறிக்கையின் பத்தி 2(vi)ன்படி ஒரு கணக்கை செயல்படாத கணக்காக வகைப்படுத்திடும்பொருட்டு வாடிக்கையாளரால் அல்லது மூன்றாம் நபரால் மேற்கொள்ளும் வரவு அல்லது பற்று நடவடிக்கைக்கருத்தில் கொள்ளவேண்டும்.
2.சில கணக்குகளை உதாரணமாக எடுத்துக்கொண்டால், குறித்தகால வைப்பிலுள்ள வட்டியை சேமிப்புக்கணக்கில் வரவு வைத்திட அந்த வாடிக்கையாளர் கட்டளை அளித்திருப்பார். அதைத் தவிர அந்த சேமிப்புக் கணக்கில் எந்த பரிவர்த்தனையும் இல்லாமல் இருக்கலாம். இத்தகு கணக்குகள் 2 ஆண்டுகளுக்குப்பின்னர் செயல்படாத கணக்குகளாக கருதப்படலாமா என்பது குறித்து சில சந்தேகங்கள் எழுந்துள்ளன.
3.இது தொடர்பாக பின்வருமாறு நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். குறித்தகால வைப்பின் வட்டி, சேமிப்புக்கணக்கில் வாடிக்கையாளரின் கட்டளைப்படியே வரவு வைக்கப்படுகிறது. அது வாடிக்கையாளர் தரப்பில் செய்யப்படும் பரிவர்த்தனையாக கருத்தில் கொள்ளலாம். ஆகவே இவ்வாறு வட்டி வரவு வைக்கப்படும்வரை அது செயல்பாட்டில் உள்ள கணக்காகவே கருதப்படும். இறுதியாக வைப்புக்கணக்கின் வட்டி வரவு வைக்கப்பட்ட நாளிலிருந்து இரு ஆண்டுகளுக்குப் பின்னரே, இத்தகு கணக்குகள் செயல்படாத கணக்குகளாகக் கருதப்படும்.
(A.K.கெளந்த்)
தலைமைப்பொதுமேலாளர்
|