RBI/2009-10/202
DBOD. Leg. No.BC.55/09.07.005/2009- 10
அக்டோபர் 30, 2009
அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய கிராம வங்கிகள் நீங்கலாக)
அன்புடையீர்,
இயக்கப்படாத கணக்குகள்
DBOD.No.Leg.BC.9/09.07.006/2009-10 ஜூலை 1, 2009 தேதியிட்ட ‘வாடிக்கையாளர் சேவை’ என்ற தலைப்பில் எங்களது தொகுப்புச் சுற்றறிக்கையின் பத்தி 24.2 (iv) பகுதியை தயவு செய்து பார்க்கவும். அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்குமேல் எந்தவித பரிவர்த்தனைகளும் நடைபெறாத நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கு ஆகியவை இயக்கப்படாத/நடவடிக்கையில்லாத கணக்காக கருதப்படும். மேலும் பத்தி 24.2 (vi) சொல்லியுள்ளபடி, ஒரு கணக்கை இயக்கப்படாத கணக்கு என்று சொல்வதற்கு இரண்டு விதமான பரிவர்த்தனைகளும் அதாவது, வாடிக்கையாளர் அல்லது மூன்றாவது நபர் மூலமாக ஏற்படும் பற்று மற்றும் வரவு பரிவர்த்தனைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
2. ஒரு வாடிக்கையாளர் தனது நிரந்தர வைப்பிலிருந்து வரும் வட்டியை தனது சேமிப்பு வங்கி கணக்கில் செலுத்திடுமாறு வங்கிக்கு ஆணை அளித்துள்ளார். இதைத் தவிர வேறு எந்த பரிவர்த்தனைகளும் சேமிப்பு வங்கி கணக்கில் நடைபெறவில்லை. இம்மாதிரி சமயங்களில் அக்கணக்கை இரண்டு வருடங்களுக்குப் பிறகு இயக்கப்படாத கணக்கு என்று அறிவிக்கலாமா என்ற ஐயம் எழுப்பப்பட்டுள்ளது.
3. இது தொடர்பாக, நாங்கள் அளிக்கும் விளக்கம் என்னவென்றால் வாடிக்கையாளரின் ஆணையின்படி, நிரந்தர வைப்பிலிருந்து வட்டி, சேமிப்பு வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறது. இது வாடிக்கையாளர் மூலமாக ஏற்பட்ட பரிவர்த்தனைதான். எனவே நிரந்தர வைப்பிலிருந்து தொடர்ந்து சேமிப்பு வங்கிக்கணக்கிற்கு வட்டி வந்து கொண்டிருக்கும்வரை அது இயக்கப் படும் கணக்குதான். நிரந்தர வைப்பிலிருந்து வட்டிக்கான கடைசி வரவு பதிவிற்குபின் இரண்டு ஆண்டுகள் கடந்தபின் அந்த சேமிப்பு வங்கி கணக்கு இயக்கப்படாத கணக்காக கருதப்படும
தங்கள் உண்மையுள்ள
(B.மஹாபத்ரா)
தலைமைப் பொது மேலாளர்
|