Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (75.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 12/07/2005

இறந்த வைப்புதாரர்களின் வாரிசுகளின் கேட்பு மீது தீர்வு - எளிதாக்கப்பட்ட நடைமுறைகள்

RBI / 2005-06 / 48

RPCD.CO.RF.BC.No.12/07.38.01/2005-06                                         ஜூலை  12, 2005

தலைவர்கள் / தலைமை நிர்வாக அதிகாரிகள்

அனைத்து மாநில மத்தியக் கூட்டுறவு வங்கிகள்

அன்புடையீர்,

இறந்த வைப்புதாரர்களின் வாரிசுகளின் கேட்பு மீது தீர்வு - எளிதாக்கப்பட்ட நடைமுறைகள்

2003 நவம்பர் 3 ஆம் தேதி ஆண்டுக் கொள்கை அறிவிப்பின் இடைக்கால் சீராய்வில் கூறியபடி, சாதாரணக் குடிமகனுக்கு கிடைக்க வேண்டிய பொதுச் சேவைகளை வங்கிகள் மேம்படுத்தும் பொருட்டு “பொதுச்சேவை மற்றும் நடைமுறைகள் மீதான ஆய்வை” மேற்கொள்ள ஒரு குழுவை அமைத்தது. இக் குழு தனது அறிககை எண் 3 இல் ‘வங்கிச் செயல்பாடுகள், வணிகம் அல்லாத தனிநபர்களுக்கான் சேமிப்புக் கணக்குகள் மற்றும் இதர வசதிகள்’ என்ற தமைப்பில், தொல்லை கொடுக்கும் நடைமுறைகள் குறிப்பாக இறந்து போன் வைப்புதாரர்களின் குடும்பத்தாற்கு மிகவும் இன்ன்ல்களுக்கு உள்ளாகின்றன்ர். 2000 ஆக்ஸ்ட் 22 மற்றும் 2001 பிப்ரவரி 27 கேதியிட்ட எங்கள் சுற்றறிக்கைகள் RPCD.CO.No.RF.BC.09/07.38.01/2000-01 மற்றும் 59/07.28.01/2001-01, இறந்துபோன வைப்புதாரர்களின் வாரிசுகளின் கேட்புகள் மீது தீர்வு காண்பது சம்பந்தமாக அறிவுரைகள் வழ்ங்கியிருந்தாலும், மேற்கூறிய குழுவின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, இதற்கு முன்னர் அளிக்கப்பட்ட அறிவுரைகளை அகற்றி கீழே குறிப்பிட்டுள்ள அறிவுரைகள் வழங்கப்பருகின்றன. துரிதமான், தொல்லைகள் இல்லாத தீர்வாக வாரிசுகளின் கேட்புகள் முடிக்கப்பட வேண்டும்.

2. வைப்பில் உள்ள நிலுவைத்தொகையை அடைதல்

(A) உயிருடன் இருப்பொர் / வாரிசு நியமன்ம் உள்ளடக்கிய வைப்புகள் 

2.1 வைப்புதாரர், வைப்புகளுக்கு இருக்கும் வாரிசு நியமன வசதியப் பயன் படுத்தி, வாரிசை நியமித்திருந்தாலோ அல்லது ‘உயிருடன் இருப்பவர்’ என்ற வார்த்தையை வைப்புதாரர் பயன்படுத்தி ருந்தாலோ (யாராவது ஓருவர் அல்லது உயிருடன் இருப்பவர் ஒருவர் அல்லது உயிருடன் இருப்பவர், முன்னவர் / பின்னவர் அல்லது உயிருடன் இருபவர்) அப்படிப்பட்ட வைப்புகள், முதல்/ஒரு வைப்புதாரர் இறந்து உயிருடன் இருக்கும் மற்ற வைப்புதாரர் கேட்டாலோ அல்லது நியமன்ம் செய்யப்பட்ட வாரிசு கேட்டாலோ கீழே சொல்லப்பட்டவைகளை உறுதி செய்து கொண்டு, கொடுக்கப்படலாம்.

(a) உயிருடன் உயிருடன் வைப்புதாரர் / நியமிக்கப்பட்ட வாரிசின் அடையாளம் மற்றும் வைப்புதாரின் இறப்புக்கும் தகுந்த ஆவணங்கள்.

(b) ஏதேனும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்

 (c) உயிருடன் இருப்பவர்கோ அல்லது வாரிசுக்கோ கொடுக்கப்படுவது இறந்து போன்வரின் வாரிசுகள் அனைவருகும் அவரைப்பிரதிநிதி (ஏஜேன்டாக)யாகக் கருதித்தான் என்பதை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதாவது அவருக்கு கொடுப்பது என்பது மற்றவருடைய உரிமையையும் பாதிக்காது.

2.2 உயிருடன் இருப்பவர்கோ அல்லது வாரிசுக்கோ மேற்கூறிய நிவந்தனைகளுக்குட்பட்டு அளிக்கப்படும் தொகை, வங்கியின் பொறுப்புகளிலிருந்து முழுமையாக வங்கியை விடுவிப்பதால், சட்டரீதியாகச் சொல்வது தேவைக்கதிகமாக இருக்கிறது. தவிர்க்கக் கூடிய தொல்லைகளையே அளிக்கும். எனவே மரபுரிமச்சான்றிதழ், ஆட்சி உரிமை ஆவணம் விருப்புறுதிஸ் சான்றிதழ், ஈட்டுறிதிப்பிணைமுறி கடிதம் போன்ற சட்ட ஆவணங்களைக் கொடுக்கும்படி வற்புறுத்தத் தேவையில்லை. வைப்புத் தொகை எவ்வளவு இருந்தாலும் இது பொருந்தும்.

(A) உயிருடன் இருப்போர் / வாரிசு நியமன்ம் இல்லாத வைப்புகள்

 இறந்து போன வைப்புதாரர் வாரிசை நியமன்ம் செய்யாமலிருந்தாலோ அல்லது வைப்புகளில் ‘உயிருடன் இருப்பவர்’ என்ற வார்த்தை இல்லாமலிருந்தாலோ அவைகள் மீதான கேட்டிக்கு எளிதான் நடைமுறைக் கொள்கைகளை உருவாக்கிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை நிர்ணயம் செய்து கொண்டு அதற்குள் வரும் வைப்புகள் மீதான் கேட்புக்கு மேலே சொல்லப்பட்ட ஆவணங்களில் ஈட்டுறுதிப்பிணை முறிக் கடிதத்தை மட்டும் பெற்றுக் கொண்டு தீர்வு காணலாம்.

3. முதிர்வுத் தேதிக்கு முன்னரே வைப்புத் தொகை வழங்குதல் :

கணக்குத் துவக்கும் படிவத்திலேயே, வைப்புதாரர் வைப்பு முதிர்வுறும் காலத்திற்குள்ளாக்வே இறக்க நேரிட்டால், வைப்பு முதிர்வு நிலை அடைபுமுன்னரே உரிய தொகை வழங்க அனுமதிக்கலாம். முதிர்வு நிலை அடையுமுன்னரே முடித்துக்கொள்ளப்படும் வைப்புகளுக்குரிய நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் கூட அப்படிவத்திலேயே தெளிவுறுத்த வேண்டும். இது போன்ற, முதிர்வு நிலைக்கு முன்னர் கோரப்படும் வைப்புகளுக்கு அபராதத் தொகை ஏதும் விதிக்கக்கூடாது.

4. இறந்தவர் பெயரில் வரும் வரவுகள்

 உயிருடன் இருக்கும் வைப்புதாரர் / வாரிசுகளுக்கு இன்னலேதும் கொடுக்காவண்ணம் அவர்களிடம் ஒப்பந்தம் அல்லது ஒப்புதல் கடிதம் மூலம் இறந்தவர் பெயருக்கு வரும் வரவுகளை கீழே கண்டவகைகளில் ஏதேனும் ஒன்றைச் செயல் படுத்திடவேண்டும்.

உயிருடன் இருப்பவர் / வாரிசு இறந்தவர் பெயரில் ‘ அன்னாரின் உடைமை’ எனறு ஏடு கணக்குத் துவக்கி அவர் பெயரிக்கு வரும் வரவுகளை அக்கணக்கில் வரவு வைக்க வங்கிக்கு அதிகாரம் அளித்தல், ஆனால் இக்கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாது.

இறந்தவர் பெயர்க்கு வரும் வரவுகளை அனுப்பித்தவர்க்கே வைப்புதாரர் இறந்துவிட்டதைத் தெரியப் படுத்தி / திருப்பி அனுப்புவதோடு மடுமல்லாமல், உயிருடன் இருப்போர் / வாரிசுகளுக்கு அதனைத் தெரியப்படுத்தவேண்டும். பின்ன்ர் அனுப்பியவரிடம் அவர்கள் முறையிட்டு பெற்றுக் கொள்ளலாம்.

5. பாதுகாப்புப் பெட்டகங்கள் / பாதுகாப்பிற்காக

கொள்ளப்பட்ட பொருட்களை அடைதல்

 நியமனம் செய்யப்பட்ட வாரிசோ அல்லது உயிருடன் இருக்கும் வைப்புதாரரோ பாதுகாப்புப் பெட்டகங்கள் / பாதுகாப்பிற்காக் கொடுக்கப்பட்ட பொருட்களை அடைவதற்கு, வைப்புகளுக்கு மேலே சொன்ன நடைமுறைகளையே அப்படியே பின்பற்ற அறிவுறுததப்படுகிறார்கள். விரிவான விளக்கங்கள் பின்னர் தனியாக அனுப்பப்படும்.

6. கேட்புகளுக்கு மீதான தீர்ப்புக்கு காலஅவகாசம் :

வங்கிக்குத் திருப்தி ஏற்படுகின்ற வகையில் இறப்புச்சான்றிதழ், கேட்புகளின் உண்மைத்தர சான்றுகள் கிடைத்த 15 தினங்களுக்குள் கேட்புகளுகுரிய தொகை வழ்ங்கப்படவேண்டும். இக்கால அவகாசத்திற்கு மேல் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ள கேட்புகள் பற்றி இயக்குநர் குழுவிற்கு ஒவ்வொரு கிளையும் அறிவிக்க வேண்டும்.

7. வங்கி ஒழுங்கு முறைச்சட்டம் 1949 :

1949 வங்கி ஒழுங்முறைச்சட்டம் (கூட்டுறவுச் சங்கங்களுக்குரியது) பிரிவு 452- A யிலிருந்து 452 - F முடிய உள்ள பிரிவுகளைக் கவன்த்தில் கொண்டு செயல் பட வேண்டும்.

8. எளிதாக்கப்பட்ட இயக்க நடைமுறைகள் :

மேலே கூறப்பட்ட அறிவுரைகளைக் கருத்தில் கொண்டு, இறந்த வைப்புதாரர்களின் பல்வேறு சூழ்நிலைகளில் எழும் கேட்புகளுக்கு ஏற்றாற் போல் ஒரு மாதிரி - இயக்க நடைமுறைகளை நபார்டு (NABARD) வெளியிட வேண்டும்.

வங்கிகள் தங்கள் தங்கள் நடைமுறைகளை மறு ஆய்வு செய்து எளிய இயக்க நடைமுறைகளை வகுத்து தங்கள் இயக்குநர் குழுவின் ஒப்புதலைப் பெறவேண்டும்.

9. வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுதலும் விளம்பரமும்:-

வாரிசு நியமனம / உயிருடன் இருப்பவர் என்ற வார்த்தைகள் வைப்புக்ள தொடங்கும் போது அல்லது புதுப்பிக்கப்படும் போது கடைபிடிக்கப்படுவது வாடிக்கையாளர்களுக்கு நன்மை விளைவிக்குமாதலால் இதற்குப் போதிய விளம்பரம் / அறிவிப்பு செய்ய வேண்டும். கூட்டாகத் துவங்கும் வைப்புகளுக்கு, ஒருவத் இறந்து விட்டால், உயிருடன் இருப்பவர் என்ற வார்த்தை இல்லாவிடில், தானாகவே மற்றவர்களுக்கு வைப்புத்தொகை கிடைக்காது என்பதை விளம்பரத்தில் தெளிவு படுத்த வேண்டும்.

10. இறந்து போன் வைப்புதாரர்களின் வாரிசுகளுக்கு / உயிருடந் இருக்கும் வைப்புதாரர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் குறிக்கோளோடு இவ்வறிவுறைகள் நோக்கப்படவேண்டும்.

11. கிடைத்தமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

 

நம்பிக்கையுள்ள

C.S. மூர்த்தி

தலைமைப் பொது மேலாளர் - பொறுப்பு

 

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்