Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (73.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 03/09/2005

சிறுதொழில் மற்றும் குறுந்தொழில் முனைவர்கள் கணக்கிற்கான ஒரே தடவை ஒப்பந்தத் தீர்வுக்கான வழிகாட்டுதல்கள்

RBI/2005-06/153
RPCD/PLNFS/BC.No.39/06-02.31/2005-06

செப்டம்பர் 3, 2005

 

அனைத்துப் பொதுத்துறை வங்கிகளின்
தலைவர்கள்/ நிர்வாக இயக்குநர்கள்,

அன்புடையீர்,

சிறுதொழில் மற்றும் குறுந்தொழில் முனைவர்கள் கணக்கிற்கான ஒரே தடவை ஒப்பந்தத் தீர்வுக்கான வழிகாட்டுதல்கள்

ஆகஸ்ட் 19, 2005 தேதியிடப்பட்ட சுற்றறிக்கை எண் RPCD.PLNFS.BC. No.31/06.02.31/2005-06யின் பாரா எண் 8ஐப் பார்வையிடுக. இதன்படி ரூ.10 கோடிக்குக் கீழுள்ள “வருமானம் (வட்டி) ஈட்டா சொத்து வடிவிலான கடன்கள் வசூல் செய்யும் விதமாக கீழ்க்கண்ட வகையில் வகுக்கப்படும் “ஒரே தடவை ஒப்பந்தத் தீர்வு” தனை அனைத்துப்பொதுத்துறை வங்கிகளும் செயல்முறைப் படுத்திட வேண்டும். சிறுதொழில் மற்றும் குறுந்தொழில் முனைவர்கள்/ வியாபாரிகளுக்கு அளிக்கப்பட்டு, நாள்பட்ட வருமானம் (வட்டி) ஈட்டா சொத்தாக உள்ள கடன்களை ஒரே தடவை ஒப்பந்தத் தீர்வின்படி வசூலிக்க வழிசெய்யும் இந்த வழிமுறைகள் சுலபமானதாக பாரபட்சமற்றதாக மற்றும் தனிப்பட்ட அதிகாரம் செலுத்தாத செயல்வடிவமைப்பாக இருக்கும். அனைத்து வங்கி துறைகளும் ஒரேவிதமாக இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்தலாம்.

2. வலிந்து செய்யும் தவறுதல்கள், மோசடிகள் மற்றும் நெறிபிறழ்வுகளுக்கு இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தாது. வங்கிகள் இத்தகைய தவறுதல்கள், மோசடிகள், நெறிபிறழ்வுகளை இனங்கண்டு உடனடியாகச் செயல்படவேண்டும். சிறு மற்றும் குறுந்தொழில் துறையில் பொதுத்துறைகளால் வழங்கப்பட்ட வருமானம் (வட்டி) ஈட்டா சொத்தான வசூல் பாக்கியுள்ள் கடன்களை ஒரே தடவை ஒப்பந்தத் தீர்வு அடிப்படையில் வசூலிக்கப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பின்வருமாறு.

A. நாள்பட்ட வருமானம் (வட்டி) ஈட்டா சொத்தான கடன்கள் ரூ 10 கோடி வரையிலானவற்றிற்குரிய ஒரே தடவை ஒப்பந்தத் தீர்வுக்கான வழிகாட்டுதல்கள் 

i. பொருந்துமிடங்கள்

a. சிறு மற்றும் குறுந்தொழில் முனைவர்கள் துறைக்கு வழங்கப்பட்ட வருமானம் ஈட்டா சொத்தான கடன்களில் எவையெல்லாம் ஐயப்பாடுடயவை அல்லது நட்டமானவை என்று வகுக்கப்பட்டனவோ அந்த கடன்களின் நிலுவைத்தொகை (வகுக்கப்பட்ட தேதியில்) ரூ. 10கோடி அதற்குக்குறைவாக உள்ள, 31.3.2004ன் கணக்குப்படி நிலுவையில் உள்ளவை அனைத்திற்கும் இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தும்

b. மார்ச் 31, 2004ல் தரந்தாழ்ந்தவை என்று கணிக்கப்பட்ட வருமானம் ஈட்டா சொத்தான கடன்கள் பின்னர் ஐயப்பாடுடயவை அல்லது நட்டம் விளைவிப்பவை என்று அறிவிக்கப்பட்ட ரூ10கோடி அதற்குக்குறைந்த மதிப்புடைய (அறிவிக்கப்பட்ட நாளின் கணக்குப்படி) கடன் கணக்குகள் அனைத்திற்கும் இவை பொருந்தும்.

c. பிணைப்பொருட்களை மீட்டு வங்கியின் சொத்துக்களாக மாற்ற உரிமை வழங்கும் சட்டம் 2002ன்கீழ் வங்கிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்ட கடன் கணக்குகளுக்கு மேற்கண்ட வழிகாட்டுதல்கள் பொருந்தும். மேலும் நீதிமன்றங்கள்/ கடன் வசூல் நடுவர்மன்றங்கள்/தொழில் துறை நிதி மறு கட்டமைப்புக்குழுமம் இவற்றில் தீர்ப்பு நிலுவையிலிருக்கும் வழக்கு சார்ந்த கடன் கணக்குகளுக்கு மேற்சொல்லப்பட்ட வழிகாட்டுதல்கள் பொருந்தும்.

d. வேண்டு,மென்றே செய்த தவறுதல்கள், மோசடிகள் மற்றும் நெறிபிறழ்வுகளுக்கு இவை பொருந்தாது.

e. கடனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 31.3.2006 (வேலை நேரம் முடியும் வரை) திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி அவற்றின் மீது ஜுன் 30, 2006க்குள் நடவடிக்கை எடுத்து முடிக்கப்படும்.

ii. தீர்வுக்கான கோட்பாடு - தொகை

a) மார்ச் 31,2004 தேதியன்று கணக்கின்படி “வருமானம் ஈட்டா சொத்தாக” உள்ள ஐயப்பாடுடைய அல்லது நட்டமானவை என்று கணிக்கப்பட்ட கடன்தொகைகளின் (எந்த தேதியில் அவ்வாறு கணிக்கப்பட்டனவோ அந்த தேதியின்) நிலுவைத்தொகை முழுவதும் (100%) ஒரே தடவை ஒப்பந்தத் தீர்வுக்கான திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி வசூலிக்கப்படும்.

b) மார்ச் 31,2004ன் கணக்கெடுப்பின் தரந்தாழ்ந்தவை என்று கணிக்கப்பட்டப் பின்னர் ஐயப்பாடுடவை/ நட்டமாக மாறிய வருமானம் ஈட்டா சொத்து கணக்கு

மார்ச் 31,2004 யன்று தரந்தாழ்ந்தவை என்று கணிக்கப்பட்டுப் பின்னர் ஐயப்பாடுடவை/ நட்டம் ஈட்டுபவை என்று கணிக்கப்பட்ட “வருமானம் ஈட்டா சொத்துக்” கணக்குகள் நிலுவையிலிருக்கும (எந்த தேதியில் ஐயப்பாடுடைய என்று கணிக்கப்பட்டதோ அந்த தேதியின்) தொகை முழுவதுமாக (100%) அதோடு 1.4.2004 லிருந்து கடைசித்தீர்வு நாள் வரை பிரதான கடன் வட்டி விகிதத்தில் கணிக்கப்பட்ட வட்டியும் சேர்த்து குறைந்தபட்ச தொகையாக வசூலிக்கப்பட்டுவிடும்.

iii. பண வழங்கீடு

மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளிலும் தீர்வுக்காகக் கணக்கிடப்பட்ட தொகை முழுமொத்தத் தொகையாக ஒரே தடவையில் தரப்படவேண்டும் சில கடனாளிகள் முழு தொகையை ஒரே தடவையில் தரமுடியாமல் போனால் அந்த சமயங்களில் குறைந்தபட்சம் 25% தொகையாவது முன்னிலைப்படுத்தித் தரப்படவேண்டும். மீதமுள்ள 75% தொகையை நடைமுறையிலிருக்கும் பிரதான கடன் வட்டி விகிதத்தின்படி தீர்மானிக்கப்பட்ட தேதியிலிருந்து முடிவாக கடன் தீர்க்கப்படும் தேதிவரை கணக்கிடப்பட்ட வட்டியையும் சேர்த்து ஒரு வருடத்திற்குள் தவணை முறையில் வசூலிக்கப்படும்.

iv. ஒப்புதலளிக்கும் அதிகாரம்

“ஒரே தடவை ஒப்பந்தத் தீர்வு” அதைத் தொடரும், கடன் தளர்த்துதல் குறைத்தல் மற்றும் தள்ளுபடி செய்வதற்கான தீர்மானம் தகுதிவாய்ந்த அதிகாரியால் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தின்படி எடுக்கப்படும்.

v. தனியதிகாரம் செலுத்தாத செயல்பாடு

இந்த திட்டத்தின் கீழுள்ள ஒரே தடவை ஒப்பந்தத் தீர்வுக்கான எல்லா வருமானம் ஈட்டா சொத்தான கடன்கள் அனைத்திற்கும் மேற்கண்ட வழிகாட்டுதல்களை எந்தவித பாரபட்சமின்றி வங்கிகள் பின்பற்ற வேண்டும். இதில் செய்யப்பட்ட கடன் பட்டுவாடாக்களின் விவரங்கள் அதில் முன்னேற்றம் இவை குறித்த மாதாந்திர அறிக்கை ஒன்றினை அதற்குரிய அதிகாரி தமது மேலதிகாரிக்கும் அந்த வங்கியின் மைய அலுவலகத்திற்கும் சமர்பிக்கவேண்டும். இந்த வழிகாட்டுதல்களின் கருத்துப்படி தகுதிவாய்ந்த தவறிய கடனாளிகளுக்கு “ஒரே தடவை ஒப்பந்தத் தீர்வுக்கான இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வங்கிகள் அறிவிப்பும் விளம்பரமும் ஜனவரி 31, 2006 க்குள் வெளியிடலாம். வெவ்வேறு வழிமுறைகளில் இந்த வழிகாட்டுதல்களுக்கான போதுமான விளம்பரம் செய்யப்பட்டுள்ளதை அவர்கள் உறுதி செய்து கொள்வாராக.

vi. குழுமத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தல்

திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி நாள்பட்ட வருமானம் ஈட்டா சொத்து கடன்களுக்கான ஒரே தடவை ஒப்பந்தத் தீர்வு குறித்த முன்னேற்றம் பற்றிய அறிக்கையை வங்கிகள் ஒவ்வொரு காலாண்டிலும் தமது இயக்குநர் குழுமத்திற்கு சமர்பிக்கவேண்டும். இந்த காலாண்டு முன்னேற்ற அறிக்கையின் பிரதி எங்களுக்கும் அனுப்பி வைக்கப்படலாம்.

3. உடனடி செயல் நிறைவேற்றத்திற்காக், மேற்கண்ட வழிகாட்டுதல்கள் உங்களின் கட்டுப்பாட்டு அலுவலகங்களுக்கும் கிளைகளுக்கும் அறிவுறுத்தப்படலாம். உங்கள் வங்கி இணையதளத்தில்ய்ம் அவை அறிவிக்கப்படலாம்.

4. ஏதாவது ஒரு கடனாளிக்காக மேற்கண்ட கடன் தீர்ப்பு வழிகாட்டுதல்களிலிருந்து பிறழ்வினை வங்கி இயக்குநர் குழுமம் மட்டுமே செய்ய முடியும்.

5. பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதல் அனுப்புக

 

தங்களின் உண்மையுள்ள

G. ஸ்ரீநிவாசன்
தலைமை பொது மேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்