RBI/2005-06/196
DBOD.No.IBD.BC.663/23.67.001/2005-06
நவம்பர் 02, 2005
பிராந்தியக்
கிராம
வங்கிகள்
நீங்கலாக
அட்டவணையிலுள்ள
அனைத்து வணிக
வங்கிகளின்
தலைவர்கள்
மற்றும்
தலைமை
நிர்வாக
அதிகாரிகளுக்கும்
அன்புடையீர்,
தங்க நகைகள் மீது கடன்
1994 நவம்பர் 22
தேதியிட்ட
கற்றறிக்கை DBOD
No.BP.BC.138/ 21.01.023/ 94 ஐப்
பார்க்கவும
2. தங்க
நகைகளின்
தரம் அவை
எத்தனை காரட்
என்பதிலும்,
அதன் சுத்தத்
தன்மையிலும்
இருப்பது
அறிந்ததே.
தரக்குறியீடு
பொறிக்கப்பட்ட
நகைகளின்
அடமானத்தின்
மேல் கடன்
வழங்குவது
பாதுகாப்பானது
எளிது.
திரக்குறியீடு
பொறிக்கப்பட்ட
நகைகளுக்கு
முக்கியத்துவம்
கொடுத்து
வங்கிகள்
கடன்
வழங்குவது
என்பது
தரக்குறியீடு
பொறிக்கப்படும்
பழக்கத்தை
ஊக்குவிக்கும்.
தொலைநோக்குப்
பார்வையில்
வருங்காலங்களில்
வாடிக்கயாளர்,
கடன்
அளிப்பவர்,
நிறுவனம்
ஆகிய
அனைவரும்
பயன்பெறத்தக்க
வழி
இதுவேயாகும்.
3. எனவே
வங்கிகள்
நகைக் கடன்
வழங்கும்போது,
தரக்குறியீடு
உள்ள தங்க
நகைகளின்
மேல் கடன்
அளிப்பதில்
உள்ள
நன்மைகளை
கருத்தில்
எடுத்துக்கொண்டு,
வட்டி,
இழப்பிற்க்கான
ஈட்டுத்தொகைப்
பிடித்தம்
ஆகியவற்றை
முடிவு
செய்யலாம்.
4.தங்க
நகைகளின்
மேல்
அளிக்கும்
கடன்களுக்கான
இதர
நிபந்தனைகளில்
எந்தவித
மாற்றமும்
இல்லை.
நம்பிக்கையுள்ள
P.சரண்
தலைமை
பொது மேலாளர் |