RBI/2008-09/352
RPCD.SME&MFS.BC.No.84A/06.02.31(P)/2008-09
ஜனவரி 20, 2009
தலைவர்/நிர்வாக இயக்குநர்
அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய கிராமிய வங்கிகள் மற்றும் வட்டார வங்கிகள் உள்ளடக்கிய)
அன்புடையீர்,
இணைப்பிணையமில்லா கடன்கள்: குறு மற்றும் சிறு நிறுவனங்கள்(MSE)
உயர்மட்டக்குழு, சிறு தொழில் துறைக்கு (தலைவர் திரு. S.L. கபூர்) அளிக்கும் கடனின் நடைமுறைகளை எளிமையாக்கல் மற்றும் வழங்குமுறைமையை மேம்படுத்துவது போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்க ஒரு உயர்மட்ட குழு (தலைவர் திரு. S.L.கபூர்) ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்டுள்ளது. மற்றவற்றிற்கிடையே இது பரிந்துரை செய்வது என்னவென்றால் இணைப் பிணையம் /மூன்றாவது நபர் உத்தரவாதம் ரூ.25,000/- லிருந்து ரூ.1,00,000/- ஆக உயர்த்தப்படவேண்டும். இதற்கேற்ப ரூ. 25,000/- லிருந்து ரூ.1,00,000/- ஆக உயர்த்தப்படுவதற்கான ஆணைகள் வங்கிகளுக்கு 1999 அக்டோபர் 5லிருந்து வழங்கப்படும்.
2. RPCD/PLNFS/No.BC.65/06.02.31/1999-2000, 2000 மார்ச் 3ஆம்தேதியிட்ட சுற்றறிக்கையின் வாயிலாக மிகச்சிறு துறைக்கான விலக்கு வரம்பு ரூ.1,00,000/- இருந்து ரூ.5,00,000/- ஆக மேலும் உயர்த்தப்பட்டது. RPCD.PLNFS.BC.No.58 /06.02.80/2001-02, 2002 ஜனவரி 23 தேதியிட்ட சுற்றறிக்கையின் வாயிலாக இணைப்பிணையமில்லா கடன்கள் ரூ.5,00,000/- வரை அனைத்து சிறு தொழில் நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
3. RPCD/PLNFS/No.BC.3068/06.02.31/2007-08 சுற்றறிக்கையின் வாயிலாக 21.9.2007 அன்று வங்கிகள் அறிவுறுத்தப்பட்டது என்னவென்றால், அவர்கள் ரூ.5,00,000/- வரை இணைப்பிணையமில்லா கடன்களை, உற்பத்தி செய்யும் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு MSE (உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள்) MSMED 2006, சட்டத்தில் விளக்கம் அளிக்கப்படும் அனைத்து புதிய கடன்களுக்கும் அளிக்கப்படவேண்டும்.
4. மேலே சொன்னவைகள் எப்படியிருந்தபோதிலும், பல்வேறு தரப்பிலிருந்து எங்களுக்கு வரும் முறையீடுகள், உற்பத்திசெய்யும் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு (MSEs) ரூ.5,00,000/- வரையிலான புதிய கடன்களுக்கும் இணைப்பிணையம் கேட்கப்படுகிறது.
5. மீண்டும் நாங்கள் வலியுறுத்துவது என்னவென்றால் உற்பத்தி செய்யும் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு வங்கிகள் ரூ.5,00,000/- வரையிலான புதிய கடன்களுக்கு இணைப்பிணையமில்லா கடன்களை கொடுக்கலாம்.
6. இது சம்பந்தமாக தேவையான நடவடிக்கையையும் மற்றும் உத்தரவுகளையும் உங்களது கிளைகள்/கட்டுப்பாட்டு அலுவலகங்களுக்கு விரைவாக தொடங்கிடுமாறு நீங்கள் வேண்டப்படுகிறீர்கள்.
7. பெற்றமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
தங்கள் உண்மையுள்ள
(B.P.விஜயேந்திரா)
தலைமைப் பொது மேலாளர்
|