Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (98.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 24/06/2009

தங்களது கடன் அறிக்கையை பெறுவதற்கான வாய்ப்பு

RBI/2008-09/507
DBOD.No.Leg.BC.138/20.16.042/2008-09

 ஜுன் 24, 2009

i) அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
   (வட்டார கிராமிய வங்கிகள் நீங்கலாக) மற்றும்
ii) அறிவிக்கப்பட்ட அனைத்திந்திய நிதியியல் கழகங்கள்

அன்புடையீர்,

கடன் அறிக்கை பெறுவதை எளிதாக்குதல்

உடனடியாகத் தகவல் கட்டமைப்பு தளத்தை ஏற்படுத்தி, தாமதமின்றி எப்போதும் கடன் பற்றிய தகவல் பரிமாற்றத்தை திறம்பட அளிக்கும் தயார் நிலையில், இருக்கும்படி கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 2005ன் அடிப்படையில் வங்கிகள்/நிதி நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டனர்.  இது குறித்த DBOD.No.DL. 11590/20.16.034/2007-08, பிப்ரவரி  27 2008  தேதியிட்ட சுற்றறிக்கையை தயவு செய்து பார்க்கவும்.

2.         வங்கிகளிடமிருந்து வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த கடன் பற்றிய அறிக்கையை பெற முடியவில்லை என்று சமீபகாலத்தில் ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள், குறிப்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ன்கீழ் வருகின்றன.

3.         இது தொடர்பாக கடன் தகவல் நிறுவனங்கள்(ஒழுங்குமுறை) சட்டம் 2005ன் பிரிவு 21ன் உட்பிரிவு(1)ன் ஷரத்துக்களின்பேரில் உங்கள் கவனத்தைக் கோருகிறோம்.  இதன்படி “எந்த ஒரு நபரும், எந்த ஒரு கடன் நிறுவனத்திடமிருந்தும் கடன் வசதி கோரி விண்ணப்பிக்கும்போது கடன் தகவல் நிறுவனங்களிடமிருந்து இத்தகைய நிறுவனங்கள் பெற்ற கடன் பற்றிய தகவலின் ஒரு பிரதியை வேண்டினால், கேட்பவருக்கு அவரது கடன் பற்றி தகவலின் பிரதியை அளிக்கலாம்.  மேலும் மேலே சொன்ன விதியில் உப-விதி(2)ன்படி, ஒவ்வொரு கடன் நிறுவனமும், வேண்டுகோளைப் பெற்றவுடன், விதிமுறைகளின் கீழ், ரிசர்வ் வங்கி குறிப்பிடும் கட்டணங்கக்ளுக்குட்பட்டு அந்த நபருக்கு, கடன் விவரம் பற்றியதன் பிரதியை உப-விதி(1)ல் குறிப்பிட்டபடி கொடுக்க வேண்டும்.

4.         இம்மாதிரி நோக்கத்திற்காக கடன் தகவல் நிறுவனங்கள் ஒழுங்குமுறை விதிகள்  2006 வரையறுக்கப்பட்ட சட்டத்தின்கீழ் ஒழுங்குமுறை விதி 12(3)ல் அதிகபட்ச கட்டணமாக ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) என ஏற்கனவே ரிசர்வ் வங்கி நிர்ணயித்ததை நீங்கள் அறிவீர்கள். 

5.         எனவே வங்கிகளும் நிதிநிறுவனங்களும் கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 2005 மற்றும் அதன்கீழ் வரையறுக்கப்பட்ட விதிகளையும் நெறிகளையும் தவறாமல் கடைபிடிப்பதை உறுதி செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

பெற்றமைக்கு ஒப்புதல் அளிக்கவும்

தங்கள் உண்மையுள்ள

(வினய் பைஜால்)
தலைமைப் பொது மேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்