RBI/2009-2010/105
DPSS.CO.PDNo.147/02.14.003/2009-10
ஜுலை 22, 2009
அனைத்து முறைமை அளிப்போர்
(விசா/மாஸ்டர் கார்டு/அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்
அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
அன்புடையீர்,
விற்பனை முனையத்தில் பணம் எடுப்பது (Point of Sale –POS)
தற்போது பிளாஸ்டிக் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதி தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில் மட்டுமே (ATMs)உள்ளது. 2009 மே 31ல் நாட்டிலுள்ள ஏடிஎம்(ATM) மற்றும் விற்பனை முனையம் (POS) ஆகியவற்றின் எண்ணிக்கை முறையே 44,857 மற்றும் 4,70,237 ஆகும். பற்று அட்டைகளின் (Debit Cards) பயன்பாடு பி.ஓ.எஸ். களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் பணம் பிரயோக விஷயத்தில் வாடிக்கையாளரின் வசதியை அதிகரித்திட POSகளில் பணம் எடுப்பதை அனுமதிப்பது என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது. தொடக்கத்தில், ஒரு நாளைக்கு ரூ.1000/- வரை என்று இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள பற்று அட்டைகளுக்கு இவ்வசதி உண்டு.
2. இவ்வசதி எவ்வித நிபந்தனைகளின்கீழ் அளிக்கப்படுகிறது என்பது இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
3. இவ்வசதியை அளிக்க வங்கிகள், இயக்குநர்கள் குழுமத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். இயக்குநர் குழுமத்திடம் அளிக்கப்படும் குறிப்பில் பொருள் பற்றிய குறிப்பு, வங்கி எதிர்நோக்கும் இடர்வரவு மற்றும் இடர்வரவை குறைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
4. கொடுப்பு மற்றும் தீர்வு முறைமை சட்டம் 2007 (2007ன் சட்டம் 51) பிரிவு 18ன்கீழ் ரிசர்வ் வங்கிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இச்சுற்றறிக்கை வெளியிடப்படுகிறது.
தங்கள் உண்மையுள்ள
(G.பத்மநாபன்)
தலைமைப் பொது மேலாளர்
இணைப்பு: மேலே கண்டதுபோல
பிற்சேர்க்கை
விற்பனை முனையங்களில் பணம் எடுக்க நிபந்தனைகள்
1. இந்தியாவில் வெளியிடப்படும் பற்று அட்டைகளுக்கு மட்டுமே இந்த வசதி உண்டு.
2. விற்பனை முனையத்தில் ஒரு நாளில் எடுக்கக்கூடிய அதிகபட்சத் தொகை ரூ.1000/- என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. மிகுந்த கவனத்துடன் பரிசீலனை செய்தபின், வங்கி குறிப்பிடும் எந்த ஒரு வணிக நிறுவனத்திலும் இந்த வசதி செய்து தரப்படலாம்.
4. அட்டை வைத்திருப்பவர், பொருட்களை வாங்கினாலும் வாங்காவிட்டாலும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. விற்பனை நிறுவனத்தில் பொருட்கள் வாங்குவதோடு, பணமும் எடுக்கப்பட்டால், கிடைக்கும் ரசீதில் எடுக்கப்பட்ட பணம் தனியாகக் குறிப்பிட்டும் காட்டப்படவேண்டும்.
6. இத்தகு வசதியை செய்து தரும் வங்கி இது குறித்த புகார்களைத் தீர்வு செய்திட தனியானதொரு முறையை ஏற்படுத்த வேண்டும். இது குறித்த புகார்கள் வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டத்தின் செயல்பாட்டு எல்லைக்குள் அடங்கும்.
7. இத்தகு வசதியை அளித்திட முனையும் வங்கிகள் தத்தம் நிர்வாக மன்றத்தின் அனுமதியோடு இந்திய ரிசர்வ் வங்கி செயல்பாடு மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 பிரிவு 23ன்படி, அணுகி விண்ணப்பித்து ஒரு முறை அனுமதி பெற்று செயல்படலாம் (மன்றத்தின் குறிப்பு / அனுமதியின் பிரதி இணைக்கப்படவேண்டும்). |