RBI/2009-2010/100
DPSS.No.101/02.10.02/2009-2010
ஜூலை 17, 2009
தலைவர்/ நிர்வாக இயக்குநர்/தலைமை நிர்வாக அதிகாரிகள்
பட்டியலிடப்பட்ட அனைத்து வணிக வங்கிகளும், பிராந்திய
கிராம வங்கிகள் உட்பட/நகர கூட்டுறவு வங்கிகள்/
மாநில கூட்டுறவு வங்கிகள்/மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகள்
தானியங்கி பணம் வழங்கும் வசதி அளிப்போர்.
அன்புடையீர்,
தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களின் தவறுதல் காரணமான
பரிவர்த்தனைகளை சரி செய்தல் – கால வரையறை
------
மேற்கண்ட தலைப்பில் DPSS.NO.1424 மற்றும் 711/02.10.02/2008-09 என்ற 11.2.2009 தேதியிட்ட மற்றும் 23.10.2008 தேதியிட்ட சுற்றறிக்கைகளைப் பார்க்கவும். தவறான ஏடிஎம் பரிவர்த்தனைகளால் பணம் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்களிடமிருந்து புகாரைப் பெற்ற 12 நாட்களுக்குள் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அத்தொகை திருப்பித்தர வேண்டும் என்பதற்கான உத்தரவுகள் அதில் உள்ளன. இந்த உத்தரவை வங்கிகள் சரியான முறையில் கடைபிடிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கிக்கு அதிக எண்ணிக்கையில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும், எங்களது கவனத்திற்கு வந்த ஒரு விஷயம் பல்வேறு வங்கிகள் மற்ற வங்கி வாடிக்கையாளர்களுக்கு பணம் எடுப்பதற்கு பல்வேறு கடைசி தேதிகளை நிர்ணயிக்கின்றன. இவ்விஷயங்கள் ரிசர்வ் வங்கியால் விரிவான முறையில் சீராய்வு செய்யப்பட்டுள்ளன. வங்கிகள் கீழ்க்கண்ட உத்தரவுகளைக் கடைப்பிடிக்கலாம்.
-
தவறுதலான ஏடிஎம் பரிவர்த்தனைகள் மூலம் கணக்கில் தவறான பற்று வைக்கப்படும்பொழுது, வாடிக்கையாளர்களிடமிருந்து புகார் பெறப்பட்ட 12 வேலைநாட்களுக்குள் வாடிக்கையாளருக்கு பிடிக்கப்பட்ட தொகையை அளிக்கவேண்டும் என்பது வங்கிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது
-
புகார் கிடைத்த 12 வேலைநாட்களுக்குள் வாடிக்கையாளரின் கணக்கில் தவறுநேர்ந்த தொகையை சேர்ப்பிக்காவிட்டால் தாமதமாகும் ஒவ்வொரு நாட்களுக்கும் ரூ.100/-ஐ பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக அனுப்பப்படவேண்டும். ஏடிஎம் தவறுதலின் மூலம் உண்டான பிரச்சனையை நிவர்த்திசெய்யும் அதே நாளில், கோரிக்கையின்றியே வாடிக்கையாளர் கணக்கில் நஷ்டஈடும் சேர்க்கப்படவேண்டும்.
-
வாடிக்கையாளருக்கு அளிக்கப்பட்ட நஷ்டஈட்டை, அட்டை வெளியிடும் வங்கி, தாமதித்திற்கு காரணமான விற்பனையாளர் சார்பில் பணம் பெறும் (acquirer bank) வங்கியிடமிருந்து பெற உரிமை உண்டு. இதே அடிப்படையில் ஏடிஎம் வலைதளத்தை இயக்குவோர்களும் தங்கள் சார்பில் ஏற்படும் நஷ்டங்களுக்காக வங்கிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
-
தவறுதலான ஏடிஎம் பரிவர்த்தனைகளால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப அளிக்கும் செயல்பாடுகளை உடன்நிகழ் தணிக்கையின் (concurrent audit) கீழ் கொண்டு வரலாம்.
-
ஒவ்வொரு வங்கியும் ஏடிஎம் பரிவர்த்தனைகளைப் பற்றிய காலாண்டு மறுசீராய்வை தனது இயக்குநர்கள் மன்றத்திடம் சமர்ப்பிக்கவேண்டும். அதில் அளிக்கப்பட்ட அபராதங்களின் அளவு, அவற்றிற்கான காரணங்கள் மற்றும் அத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை பற்றியும் குறிப்பிடவேண்டும். குறிப்பு பற்றிய நகலுடன் கருத்துப் பதிவீடுகளையும் சேர்த்து தலைமை பொது மேலாளர், இஂந்திய ரிசர்வ் வங்கி, கொடுப்பு மற்றும் தீர்வு முறைமைகள் துறை, மும்பை என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
2. (2007 ன் சட்டம் 51) கொடுப்பு மற்றும் தீர்வு முறைமைகள் சட்டம் 2007ன் பிரிவு 8ன்கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதுஇச்சுற்றறிக்கையின் ஷரத்துக்களை பின்பற்றாவிட்டால் கொடுப்பு மற்றும் தீர்வு முறைமைகள் சட்டம் 2007(2007 ன் சட்டம் 51) பரிந்துரைத்துள்ளபடி தண்டனைத் தொகை செலுத்த நேரிடும்.
3. இச்சுற்றறிக்கையின் நகலை நிர்வாக மன்றத்தின் முன் வைக்க ஏற்பாடு செய்யவும்.
4. பெற்றமைக்கு ஒப்புதல் அளிக்கவும
தங்கள் உண்மையுள்ள
(G. பத்மநாபன்)
தலைமைப் பொது மேலாளர் |