RBI/2008-2009/430
RPCD.CO.RF.BC.No.96/07.38.01/2008-09
ஏப்ரல் 13, 2009
அனைத்து மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்,
கூட்டுறவு வங்கிகள் (நியமன) விதிகள்1985 – நியமனம் பற்றி
ஒப்புக்கொள்ளுதல் மற்றும் பற்றுவரவு ஏடுகள்/நிரந்தர வைப்பு
ரசீதுகள் போன்றவற்றில் பெயரைக் குறிப்பிடுதல்
கூட்டுறவு வங்கிகள் (நியமன) விதிகள்1985ன் விதி 2(9), 3(8) மற்றும் 4(9)ன்படி வைப்புதாரர்கள்/பாதுகாப்புப் பெட்டகங்கள் வாடகைக்கு எடுப்போர் ஆகியோரது பூர்த்தி செய்யப்பட்ட நியமனம் நீக்குதல், நியமனமாற்றம் போன்றவற்றிற்கான படிவங்களை பெற்றுக் கொண்டமைக்கு எழுத்து வடிவ ஒப்புதல் வங்கிகள் அளிக்கவேண்டும் என்பதனை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனினும் சில வங்கிகள் இந்நிபந்தனையை கடைபிடிக்கவில்லை என்பது எங்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது மேலும் சில வங்கிகளில், சேமிப்பு வங்கிக்கணக்கு தொடங்கும் படிவத்திலேயே நியமனத்தை ஒப்புக்கொள்வதற்கான வசதி இருந்தும் அத்தகைய ஒப்புதல்கள் உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
2. நியமனத்தை பூர்த்தி செய்யவும், நீக்கவும் மற்றும் நியமனத்தில் மாற்றம் செய்யவும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்றுக்கொண்டு ஒப்புதல் அளிப்பதை ஒழுங்குமுறை சட்டம் 1949(AACS) மற்றும் கூட்டுறவு வங்கிகள் (நியமன) விதிகள் 1985ன்படி வங்கிக்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அத்தகைய ஒப்புதல் வழங்குவது அவசியமாகிறது.
3. ஒரு வங்கிக்கணக்குதாரர் நியமன வசதியைப் பயன்படுத்தி அதனைப்பற்றி பற்று வரவு ஏட்டில் பதிவு செய்து வைத்தால், அந்த கணக்குதாரரின் மறைவுக்கு பின், இறந்தவரின் குடும்பத்தினர் அதனைப் படித்து அறிந்து தேவையான நடவடிக்கையை எடுக்கமுடிகிறது. எனவே வங்கிகள் பற்று வரவு ஏட்டில் நியமன வசதி பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிவிக்கும் வகையில், “நியமனம் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்க வேண்டும். குறித்தகால வைப்பு ரசீதுகளிலும் இதனைச் செய்யலாம்.
4. இதனோடு, வங்கிகள் நியமிக்கப்பட்டவரின் பெயரை பற்று வரவு ஏடுகள்/ கணக்குகள் பற்றிய அறிக்கை கால வைப்பு ரசீதுகள் போன்றவற்றில் குறிப்பிட வேண்டும் - இதற்கு வாடிக்கையாளர் ஒத்துக்கொள்ளும்பட்சத்தில். இது வாடிக்கையாளர்களுக்கும்/நியமிக்கப்பட்டவர்களுக்கும் மிகுந்த உபயோகமாக இருக்கும்.
தங்கள் உண்மையுள்ள
(B.P.விஜயேந்திரா)
தலைமைப் பொது மேலாளர். |