Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (154.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 03/11/2006

இடர்வரவினைக் கையாளும் முறைக்கான வழிமுறைகள் மற்றும் வெளிஆதாரங்கள் மூலம் வங்கிகள் செய்யும் நிதிசேவைக்கான நடத்தை நெறிமுறைகள்

RBI /2006/167

DBOD. No. BP. 40/21.04.158/2006-07

 

நவம்பர் 3, 2006

 

அனைத்து அட்டவணையிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய கிராமப்புற வங்கிகள் தவிர)

 

அன்புடையீர்,

 

இடர்வரவினைக் கையாளும் முறைக்கான வழிமுறைகள் மற்றும் வெளிஆதாரங்கள் மூலம் வங்கிகள் செய்யும் நிதிசேவைக்கான நடத்தை நெறிமுறைகள்

வெளிநிறுவனங்கள் மூலம் வங்கிகள் நிதிசேவை செய்வது பெருவாரியாகப் பயன்படுத்தப்படும் காலகட்டத்தில், அதில் உடனிருக்கும் இடர்வரவினைக் கையாளும் பொருட்டு அதற்கான பணிச்சட்டத்தை ஏற்படுத்தும் பொருட்டு 6.12.2005 அன்று ரிசர்வ் வங்கி பூர்வாங்கத் திட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஆலோசனைகளை ஆதாரமாகக் கொண்டு பூர்வாங்கத் திட்ட வழிகாட்டுதல்கள் ஏற்புடையதாக மாற்றியமைக்கப்படுகிறது.

2. வணிகநோக்கங்கள் உட்பட, அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு நிதிச்சேவை சார்ந்த அனுமதிக்கப்பட்ட ஒரு செயலை வெளியார் நிறுவனங்கள் மூலம் நடத்துவது விரும்பத்தக்கதா என்பதனைத் தீர்மானிக்கும் பொறுப்பு முழுவதுமாக அந்த வங்கிகளிடமே விடப்படுகிறது. ஆயினும் இந்த வழிகாட்டுதல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளதுபோல் தன்னிச்சையான தேர்வில் ஒரு குறிப்பிட்ட நிதிச்சேவை சார்ந்த நடவடிக்கையை வெளியார் நிறுவனத்திற்கு அளிக்க ஒரு வங்கி தீர்மானித்தால், அதில் இயல்பாக வரக்கூடிய இடர்வரவுகளுக்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் குறிவைத்து செயலாற்ற வேண்டும். வெளியார் நிறுவனங்கள் மூலம் நிதிச்சேவை செய்வதில் உள்ள இடர்வரவுகளைக் கையாளும் முறைகள் குறித்த அவற்றிற்து பொருந்தக்கூடிய நிறைவடிவான வழிகாட்டுதல்கள் பின்னிணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

3. இந்த வழிகாட்டுதல்கள் நிதிசார்ந்த வங்கிச் சேவைகளை வெளியார் மூலம் மேற்கொள்வதில் உள்ள இடர்வரவுகளைக் கையாளுவதற்கு மட்டுமே பொருந்தும். தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகள், வங்கித்துறை சாராத தனியார் அஞ்சலக சேவை(Courier), ஊழியர் உணவுக்கூடச் சேவை, குடியிருப்பு பாதுகாப்பு, வாயிற்காவலர் மற்றும் வளாகப் பாதுகாப்பு சேவை, ஆவணங்கள் கைமாற்றம் மற்றும் சேகரிப்பு பாதுகாப்பு இவை போன்ற சேவைகளுக்கு இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தாது.

4. பட்டயக் கணக்காயர் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் தணிக்கை சார்ந்த பணிகள், வங்கிகள் மேற்பார்வைத் துறை வகுத்திடும் திட்டம் மற்றும் கோட்பாடுகளால் தொடர்ந்து வழிநடத்தப்படும்.

5. இதன் பின்னிணைப்பில் பாரா 5.5.1ஐ வங்கிகள் கவனிக்க அதில் குறிப்பிட்டுள்ள கருத்தின்படி, வெளியார் நிறுவனங்களுடன் வங்கிகள் செய்துகொள்ளும் சேவைகுறித்து ஒப்பந்தங்கள் பின்வரும் கருத்துக்கூறுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியோ அல்லது அது அதிகாரமளிக்கும் நபர்களோ, போதிய காலத்திற்குள் சேவையளிக்கும் நிறுவனத்திடமிருந்து தக்க தகவல் அல்லது ஆவணத்தைப் பெறுவதற்கான அதிகாரம் வழங்கும்படியாக கருத்துக்கூறுகள் மேற்குறிப்பிட்ட அந்த ஒப்பந்தங்களில் இருக்க வேண்டும்.

 

நம்பிக்கையுள்ள

 

(பிரசாந்த் சரண்)

தலைமை பொது மேலாளர் பொறுப்பு

 

பின்னிணைப்பு

 

முன்னுரை:

1.1. போர்க்கால முக்கியத்துவம் வாய்ந்த குறிக்கோள்களை நிறைவேற்றவும் தம்மிடையே கிடைக்காத சிறப்பு வாய்ந்த வல்லுநர்களின் திறமைகளால் பயன்பெறவும், செலவினங்களைக் குறைக்கவும். உலகெங்கிலும் வங்கிகள் தமது சேவைப்பிரிவுகளை வெளியார் நிறுவனங்கள் மூலம் செய்து வருகின்றன. வங்கிகள் வழக்கமாகத் தொடர்ந்து ஏற்று நடத்தும் அல்லது எதிர்காலத்தில் நடத்தவிருக்கும் செயல்பாடுகளை செய்து முடித்திட தம் குழுமங்களின் இணைப்பாயுள்ள ஒரு நிறுவனத்திடம் அல்லது வெளிவேயுள்ள ஒரு நிறுவனத்திடம் பணியை ஒப்படைப்பதையே “வெளியார்மயமாக்கல்” என்று சொல்லலாம். தொடர்ந்து நடத்திட என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தைக் குறிக்கலாம்.

இந்த அகில உலக நடைமுறையை ஒட்டியே இந்தியாவும் பெருவாரியாக தனது பல்வேறு நடவடிக்கைகளை வெளியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கின்றன. இவை, வங்கிகளைப் பல்வேறு இடர்வரவுகளுக்கு உள்ளாக்கும் விளைவுக்களை (பாரா 1.3ல் கூறியபடி) ஏற்படுத்தும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? மேலும் இவ்வாறு வெளியார் நிறுவனங்கள்வசம் விடப்படும். நடவடிக்கைகள் யாவும் விதிமுறைகளின் கருத்தொல்லைக்குள் கொண்டுவரப்பட்டு, வாடிக்கையாளர்களின் நலன் பாதுகாக்க்ப்பட வேண்டும்.

வளர்ந்துவரும் வெளியார்மயமாக்கச் சூழலில் வங்கிகள் எதிர் நோக்கவிருக்கும் இடர்வரவுகளைக் குறிப்பாகச் சுட்டி சில வழிகாட்டுதல்களை இந்த பின்னிணியில் வங்கி வழங்குவதை ரிசர்வ் வங்கி பொருத்தமான ஒன்றாகக் கருதுகிறது.

குறிப்பிட்ட வங்கி மற்றும் ரிசர்வ் வங்கி அந்த சேவை செய்யும் வெளி நிறுவனத்திடமிருந்து தகவல் பெறவோ, புத்தகங்களைப் பார்வையிடவோ வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள இந்த வழிகாட்டுதல்கள், வாடிக்கையாளர் நலனைப் பாதுகாக்கும் செயல்முறைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

குறிப்பிடத்தக்க வகையில் வெளியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் படும் சேவைகள் பின்வரும் வகைசார்ந்தவை. கடன் வழங்க ஆரம்ப ஏற்பாடுகள், கடன் அட்டைசார்ந்த விவரங்கள், ஆவணப் பரிவர்த்தனைகள் விற்பனைச் சந்தை விவரங்கள், ஆராய்ச்சி, கடன் மேற்பார்வை, தகவல் சேகரிப்பு மற்றும் தகவல் பராமரிப்பு போன்றவை ஆகும்.

1.2 வங்கிகள் மேற்பார்வைக்கான பேசல் கமிட்டி (Basel Committee), சர்வதேச பங்கு பத்திரப் பொறுப்பாணைக்குழு அமைப்பு மற்றும் சர்வதேச காப்பீட்டு மேற்பார்வை அமைப்பு என்ற முத்தரப்பு அமைப்புகள் ஒருங்கிணைந்து வங்கிகளின் வெளியார்மயமாக்கல் குறித்த வழிகாட்டுதல்களை பெப்ரவரி 2005 ல் வெளியிட்டன. இந்த ஒருங்கிணைந்த அமைப்பு திரளான வழிகாட்டும் கோட்பாடுகளை வகுத்துத் தந்துள்ளன. ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை இவை தக்க இடங்களில் திரட்டி உருவாக்கப் பட்டுள்ளன. அகில உலக அளவில் ‘வெளியார்மயமாக்கல்’ குறித்த வழிகாட்டுதல்களை பல்வேறு நாடுகள் உருவாக்கியுள்ளன. அமெரிக்கா, பிரிட்டிஷ் தீவுகள், ஜெர்மனி, ஹாங்காங், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் இவற்றில் அடங்கும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் சர்வதேச அளவிலான நெறி முறைகளை உள்ளடக்கியவை ஆகும்.

1.3. வெளியார்மயமாக்கல் பல்வேறு இடர்வரவுகளைத் தம் பணிவகையில் கொண்டு வரலாம். அவற்றுள் முக்கியமானவை, கொள்கை இடர், நற்பெயருக்கு இடர், பின்பற்றுதலில் இடர், நடைமுறையில் இடர், சட்டரீதியான இடர், வெளியேற்ற கொள்கை இடர், மாற்றான் இடர், தேசிய இடர், உடன்படிக்கை இடர், வாய்ப்பில் இடர், ஒருமுனைப்பாடு மற்றும் வடிவமைப்பில் இடர். சேவை தரும் நிறுவனம் அல்லது குறிப்பிட்ட வங்கி ஒரு குறிப்பிட்ட சேவையைச் செய்யாது விட்டுவிட்டாலோ, நம்பிக்கையில் குந்தகம் (பங்கம்) ஏற்ட்டாலோ, ரகசியம் பாதுகாக்கப் படாவிட்டாலோ, விதிமுறைகளை, சட்டங்களைப் பின்பற்றாது விட்டாலோ, பணநட்டம் நற்பெயருக்கு பாதிப்பு இவற்றோடு வங்கிக் கட்டமைப்பினையே பாதித்துவிடும் அபாயமுண்டு. ஆகவே வெளியார் நிறுவனத்திடம் பொறுப்பினை ஒப்படைக்கும் வங்கி மேற்கண்ட இடர்வரவுகளை எதிர்நோக்கி அவற்றை கவனமாகத் தவிர்க்கும் வழிகளைக் காண உறுதி பூண்டிட வேண்டும்.

1.4. வெளியார்மயமாக்கல் நடவடிக்கைகளால் எழும் இடர்வரவுகளச் சரியான முறையில் கையாளும், முழுகவனத்தோடு செயல்பட்டு, ஆற்றலுடைய நுண்ணுர்வுடன் கூடிய இடர்வரவு மேலாண்மை பழக்கங்களைக் கைக்கொள்ளவும், வங்கிகளுக்கு உரிய கட்டளைகளை வழிகாட்டுதல்களை அளிக்கும் பொருட்டு இடர்வரவினைக் கையாளும், நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவிலோ வேறெங்குமோ உள்ள நிறுவனங்களோடு சேவைக்காக செய்து கொள்ளும் ஒப்பந்தங்களுக்கு இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தும். அந்த நிதிச்சேவை மேற்கொள்ளும் நிறுவனம் அந்த வங்கியின் குழுமம், கட்டமைப்பு சார்ந்த நிறுவனமாகவோ அல்லது எந்தத் தொடர்புமில்லாத நிறுவனமாகவோ இருக்கலாம்.

1.5. ரிசர்வ் வங்கியின் ஆற்றல் மிகுந்த மேற்பார்வைக்கு முட்டுக்கட்டையிடாதவண்ணமும், ரிசர்வ் வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றுதலில் குறைவு ஏற்படாதவண்ணமும் உறுதிபூண்டு, விதிமுறைக்குட்பட்ட நிறுவனம் தனது வெளியார்மயமாக்கலுக்கான ஒப்பந்த ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்பதே இந்த வழிகாட்டுதல்களின் அடிப்படை கோட்பாடகும். சேவைபுரிய முன்வரும் வெளிநிறுவனம் அதே உயரிய நிலை கவனத்தோடு அதாவது வங்கியே மேற்கொண்டால் எவ்வாறு செயல்படுமோ, அதே வகை கவனத்தோடு செயல்படுகிறதா என்பதை வங்கிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஆகவே வங்கிகள் தமது உள்துறை தணிக்கை, வர்த்தக நெறிமுறை நற்பெயர் இவற்றை விட்டுக் கொடுக்கும்வகையிலோ அல்லது அவற்றைத் தளர்த்திடும் வகையிலோ விளைந்திடும் வெளிமயமாக்க செயல்பாடுகளில் வங்கிகள் ஈடுபடக்கூடாது.

1.6. (i) நிதிசேவை புரியவரும் நிறுவனம் இந்தியாவிலோ வெளிநாட்டிலோ இருப்பினும் அவற்றோடு நிதிச்சேவை உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள விரும்பும் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதிபெற தேவையில்லை.

(ii) கடனட்டை சார்ந்த வெளியார் நிறுவனச் சேவைகளைப் பொறுத்தவரை, கடன் அட்டை நடவடிக்கைகளுக்கான சுற்றறிக்கை DBOD.FSD.BC.49/ 24.01.0111/2005-06 21 நவம்பர் 2005 தேதியிடப்பட்டதில் கண்டுள்ள ரிசர்வ் வங்கியின் விரிவான பரிந்துரைகள் பொருந்தும்.

2. வெளியாரிடம் ஒப்படைக்கக் கூடாத செயல்பாடுகள்

 

முதலீட்டுப்பட்டியல் மேலாண்மை கடன்களுக்கு (சிறுகடன்கள் உட்பட) அங்கிகாரம் வழங்கல் வைப்புக்கணக்குத் திறவின்போது கடைப்பிடிக்க வேண்டிய “உங்கள் வாடிக்கையாளரை அறிவீரா” கொள்கைகள் அதன் உடன்பாடு, உள்துறைத் தணிக்கை, நெறிமுறைக் கோட்பாட்டைப் பின்பற்றுதல் போன்ற முக்கியமான மேலாண்மைச் செயல்பாடுகளை நிதிச்சேவைகளை வெளியார் மயமாக்க எண்ணும் வங்கிகள் வெளியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது.

 

3. வெளியாரிடம் மதிப்புள்ள முக்கியப் பணிகளை ஒப்படைத்தல்

 

முக்கிய பணிகளை வெளியாரிடம் ஒப்படைத்தால் நேரிடும் இடர்வரவுகளை கையாளும் முறைகள் அவற்றின் தரம் போன்றவற்றை மதிப்பிடும் முகமாக வருடாந்திர நிதி ஆய்வுகளின்போது ரிசர்வ் வங்கி இந்த வழிகாட்டுதல்களின் செயல்முறைகளை திருத்தியமைக்கும் இடையூறு ஏற்பட்டால் வங்கியின் லாபம் ஈட்டும்திறன், நற்பெயர், வர்த்தகச் செயல்பாடுகள் இவற்றைக் கணிசமான அளவில் பாதிக்கக் கூடிய வல்லமை படைத்த பணிகள், முக்கியப்பணிகள் என்று கருதப்படும்.

வெளியாரிடம் ஒப்படைக்கப்படும் பணிகளின் முக்கியத் தன்மை கீழ்க்கண்டவற்றைப் பொறுத்தது.

 • வெளியாரிடம் ஒப்படைக்கப்படும் நடவடிக்கையின் முக்கியத்துவத்தின் அளவு

 •  இடர்வரவுப் பட்டியல், மூலதான சேகரிப்பு, லாபம், எளிதில் பணமாக்கும் திறன், கடன்தீர்க்கும்திறன் ஆகிய அளவைகளில் வெளியாரிடம் விடுவதால் ஏற்படக் கூடிய மாற்றத்தின் அளவு

 • சேவை செய்யவரும் வெளிநிறுவனம் செய்ய தவறினால் வங்கியின் நற்பெயர், பெயர் மதிப்பு, வங்கியின் நோக்கங்களைச் செயலாக்கும் திறன், சிறப்புக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் ஆகிய இவற்றில் ஏற்படக் கூடிய பாதிப்பு.

 • வங்கியின் மொத்த செயலாக்கத்துக்கான செலவோடு வெளிநிறுவனத்திடம் பணிகளை ஒப்படைப்பதால் ஏற்படும் செலவின் விகிதம்

 • வங்கி ஒரே நிறுவனத்திடம் தனது பல்வேறு பணிகளை ஒப்படைப்பதால் ஒட்டு மொத்தமாக அதனிடம் வெளியிடப் படும் தகவல்களின் அளவு

 

4. ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வைத் தேவைகள் இவற்றோடு வங்கியின் பங்கு.

 

4.1 வெளியாரிடம் ஒப்படைக்கப்படும் நடவடிக்கைக்கான முடிவான பொறுப்புடைய வங்கியின் நிர்வாகக் குழும மற்றும் உயர் பதவியிலுள்ள அதிகாரிகள் குழுவின் பொறுப்போ, வங்கியின் மொத்த கடமைப் பொறுப்போ, வெளியாரிடம் பணிகளை ஒப்படைக்கும்போது குறைவதில்லை. ஆகவே விற்பனை முகவர்கள், நேரடிச்சந்தை முகவர்கள், கடன் வசூலிப்பவர்கள் ஆகியவர்கள் உட்பட வெளியாரிடம் ஒப்படைக்கப்படும் பணிகளுக்கான பொறுப்பு வங்கிக்கு உண்டு. அவர்களிடம் தரப்படும் வாடிக்கையாளர்கள் பற்றி விவரங்களுக்கான ரகசியப்பாதுகாப்புக்கும் வங்கியே பொறுப்பு, முடிவான கட்டுப்பாட்டை இந்த விஷயத்தில் வங்கி கைக்கொள்ள வேண்டும்.

4.2. வெளியாரிடம் பணி ஒப்படைப்பில் போதிய கவனத்தோடு செயல்பட வேண்டியது வங்கிக்கு மிக மிக அவசியமான ஒன்றாகும், அதோடு தொடர்புடைய சட்டப்பிரிவுகள், விதிமுறைகள் வழிகாட்டுதல்கள் அனுமதிபெறத் தேவையான கட்டளைகள் உரிமம் பெறும் வழிகள் பதிவு செய்தல் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

4.3. வாடிக்கையாளர் தொடர்புடைய பொருத்தமான சட்டப் பிரிவின்கீழ் குறைதீர்ப்புப் பெறும்திறன் மற்றும் வாடிக்கையாளருக்கு வங்கியின் மீதான உரிமை இவற்றை வெளியார்மயமாக்கும் பணி ஒப்பந்தங்கள் பாதிக்கக் கூடாது. வங்கியோடு தொடர்பு கொள்ளும்போது அதனுடன் பணி ஒப்பந்தம் பெற்ற சேவை செய்யும் வெளிநிறுவனங்களோடும் தொடர்பு கொள்ள வேண்டிய நிலையில் வாடிக்கையாளர்கள் இருப்பதால் வங்கிகள் தமது விளைபொருட்கள் குறித்த கையேடுகள் சிறு அச்சுப்பிரதிகளில் ஒரு கருத்துக்கூற்றை அச்சடித்து அதில் அவை குறித்த விற்பனை மற்றும் விளம்பரங்களுக்கான விஷயங்களுக்கு வங்கிகளின் சேவை முகவர்களை அணுகலாம் என்ற விவரத்தைத் தெரிவிக்கலாம். அதிலேயே அந்த முகவர்களின் பங்கினையும் சற்றே பொதுவாக அறிவிக்கலாம்.

4.4 சேவை மேற்கொள்ளும் நிறுவனம் இந்தியாவிலோ அல்லது அயல்நாட்டிலோ இருப்பினும் அதனுடைய செயல்பாடுகளைத் திறம்பட மேற்பார்வையிட்டு, கண்காணிக்கும் வங்கியின் திறனில் தலையிடவோ, தடைபடுத்தவோ இந்தப் பணி ஒப்பந்தம் வழிசெய்யக் கூடாது. அதோடு கூடவே ரிசர்வ் வங்கியின் மேற்பார்வைப் பணிகளிலோ, நோக்கங்களிலோ முட்டுக்கட்டை போடுவதாகவும் அது அமைந்திடக்கூடாது.

4.5. வெளியாரிடம் நிதிச்சேவைகளை ஒப்படைப்பதால் வங்கியின் வலிமைவாய்ந்த குறைதீர்ப்பு அமைப்பின் செயல்பாட்டில், விட்டுக் கொடுத்தலோ முட்டுக்கட்டை போடுவதோ இருக்கக் கூடாது.

4.6. வங்கிக்காக சேவையை மேற்கொள்ளும் நிறுவனம் வங்கியின் துணை நிறுவனமாக இல்லாதபட்சத்தில் வங்கியின் நிர்வாகக்குழு உறுப்பினர் அதிகாரி அல்லது ஊழியர் அல்லது அவர்களின் சொந்தக்காரர் (கம்பெனிகள் சட்டம் 1956ன் விளக்கப்படி) எவரும் அந்த நிறுவனத்தின் சொந்தக்காரராகவோ, கட்டுபடுத்துவராகவோ இருக்கக் கூடாது.

 

5. வெளி நிறுவனங்களிடம் விடப்பட்ட நிதிச்சேவைகளால் ஏற்படும் இடர்வரவைக் கையாள வழிமுறைகள்

 

5.1 வெளியார்மயமாக்கும் திட்டம்

 வெளி நிறுவனத்திடம் நிதிச்சேவைப்பணியை ஒப்படைக்க நினைக்கும் வங்கி முதற்கண் நிர்வாகக்குழு அங்கிகரிக்கும் அகல்விரிவான ஒரு திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். ஒப்படைக்கவிருக்கும் நடவடிக்கைகள், நிறுவனங்கள் பாரா 3, சொல்லப்பட்டுள்ள அடிப்படைத்துவத்தின்பேரில் ஒப்படைக்கப்படும் முக்கியப்பணிகள் எவை என்பதன் அளவைகளைத் தீர்மானித்தல், இடர்வரவினையும் பணி முக்கியத்துவத்தையும் கண்க்கில் கொண்டு செய்யப்படும் அதிகாரப்பகிர்வு மற்றும் நிறுவனங்களிடம் விடப்பட்ட செயல்பாடுகளின் மறு ஆய்வு மற்றும் மேற்பார்வை ஆகிய அனைத்தும் மற்றவற்றுக்கிடையில் அந்தத் திட்டத்தில் வடிவமைக்கப் படவேண்டும்.

5.2 உயர்மேலாண்மை மற்றும் நிர்வாகக்குழுவின் பங்கு

 

5.2.1. வங்கியின் நிர்வாகக்குழு அல்லது அதன் அதிகாரமளிக் கப்பட்ட வாரியம் மற்றவற்றுக்கிடையில் கீழ்க் கண்ட வைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

 • நடப்பிலிருக்கும் மற்றும் எதிர்காலத்தில் வெளியாரிடம் ஒப்படைக்கப்படவிருக்கும் பணிகளால் ஏற்படும் இடர்வரவு மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்து அந்த ஏற்பாடுகளில் கைக்கொள்ள வேண்டிய திட்டங்களையும் 

 • நிர்மானிக்கும் சட்ட அமைப்பினை அங்கிகரித்தல்

 • வெளி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் பணிகளின் முக்கியத்துவம், இடர்வரவு இவற்றின் அடிப்படையில் பொருத்தமான அங்கிகாரமளிக்கும் அதிகாரிகளை அமைத்துத் தருதல்

 •  வெளியார்மயமாக்கலின் நடத்துமுறைகள் தொடர்ந்த அவைகளின் இயைபுத்தன்மை, பாதுகாப்பு மற்றும் செம்மை இவை குறித்த முறைப்பட்ட மறு ஆய்வினை மேற்கொள்ளுதல்

 •  வெளியாரிடம் விடப்படும் வர்த்தக நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை தீர்மானித்தல் மற்றும் அங்கிகாரம் அளிப்பதற்கான ஏற்பாடுகள்

 

5.2.2. உயர்மேலாண்மையின் பொறுப்பு

 

 • நிர்வாகக்குழு அங்கிகாரித்த சட்ட அமைப்பின்படி நடப்பிலுள்ள மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளும் வெளியார்மயமாக்கும் பணிகளால் ஏற்படும் இடர்வரவு மற்றும் முக்கியத்துவம் இவற்றை மறுபரிசிலனை செய்தல்

 •  வெளியார்மயமாக்கும் பணிகளின் இயல்பு பரப்பெல்லை அதிலுள்ள சிக்கல்கள் இவற்றிற்கு தக்கவகையில் சீராக அமைந்த செம்மையான மதிநுட்பமுள்ள கொள்கைகளையும் செயல்முறைகளின் உருவாக்கி செயல்படுத்தல்

 •  அவ்வப்போது இந்த கொள்கைகள் மற்றும் செயல் முறைகளின் செயல்திறனை மறுபரிசிலனை செய்தல்

 •  வெளியாரிடம் விடப்படும் பணிகளில் ஏற்படும் முக்கியமான இடர்வரவுகளை தக்கநேரத்தில் வங்கி நிர்வாகக்குழுவிற்கு எடுத்துரைத்தல்

 •  நிகழக்கூடிய மோசமான காட்சிநிலைகளைக் கருத்தில் கொண்டு உண்மையானதொரு சோதித்த நியப்பட்ட பொருத்தமான திட்டத்தை வருநிகழ்வுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தல்

 •  அளிக்கப்பட்ட கொள்கைகளின் தொகுதி பின்பற்றப்பட்டுள்ளதா என்பதைத் தனித்தியங்குகிற தணிக்கை மற்றும் மறுபரிசிலனைகள் மூலம் உறுதிப்படுத்துதல்

 •  வெளியாரிடம் ஒப்படைக்கும் பணி ஏற்பாடுகளில் புதிதாக இடர்வரவு ஏற்பட்டுள்ளதா என்பதை இனங்கண்டிட அவ்வப்போது அந்த ஒப்பந்த ஏற்பாடுகளைப் பரிசிலனை செய்தல்

 

5.3. இடர்வரவின் மதிப்பீடு

 

வெளியார்மயமாக்கலில் உள்ள வங்கிகள் மதிப்பிடவேண்டிய அடிப்படையான இடர்வரவு பின்வருமாறு:

 • ெகாள்ைக ரீதியான இடர்வர?

சேவையை நடத்தித்தரும் வெளி நிறுவனம் தனது போக்கிலே தனக்காக நடத்தும் வணிகம், வங்கியின் ஒட்டுமொத்த கொள்கைக்கு ஒவ்வாத அல்லது புறம்பானதாக இருக்கலாம்

 • நற்பெயருக்கு இடர்வரவு

வெளி நிறுவனங்கள் அளிக்கும் குறைவுள்ள வாடிக்கையாளர் சேவை மற்றும் வங்கியின் ஒட்டுமொத்த தரத்திற்கு இணையான வாடிக்கையாளர் நல்லுறவு இன்மை இவற்றால் வங்கியின் நற்பெயருக்கு இடர்வரலாம்.

 • பின்பற்றுதலில் இடர்வரவு

வாடிக்கையாளர் வருநிகழ்வுக்காப்பு குறித்த சட்டவிதிகள் மற்றும் ரகசியப் பாதுகாப்பு குறித்த சட்டங்கள் பின்பற்றாவிட்டால் ஏற்படும் இடர்வரவு

 • நடைமுறை இடர்வரவு

குறைதீர்க்கவோ, கடமைப்பொறுப்பை நிறைவேற்றவோ போதிய நிதிவசதியின்மை தொழில்நுட்பத்தில் குறைபாடு, பித்தலாட்டம் பிழை இவற்றால் ஏற்படும் இடர்வரவு

 • சட்டரீதியான இடர்வரவு:

வரையறுக்கப்படாத பின்வரும் வகையிலமைந்த இடர்வரவுகளை உள்ளடக்கியது. அவையாவன: மேற்பார்வை செயல்பாடுகளால் விளைந்திடும் அபராதம், தண்டனைத் தொகை மற்றும் தண்டனைக்குரிய இழப்பீடுக் கட்டணங்கள் இவற்றோடு வெளிநிறுவனம் அளிக்கும் சேவைகளிலுள்ள குறைநிறைகளால் ஏற்படும் தனிப்பட்ட ஒப்பந்த முடிவுகள்

 • வெளியேறும் உரிமைக்கொள்கையில் இடர்வரவு

ஓரே வெளியார் நிறுவனத்தை அதிகாமாகச் சார்ந்திருத்தல், வெளியாரிடம் விடப்பட்ட சேவைகளைச் செய்து கொள்ளப் போதிய திறமையின்மை அதனால் மீண்டும் வங்கியே அவற்றை ஏற்று நடத்த இயலாமை அல்லது ஒப்பந்தப்படி அவற்றை மீண்டும் ஏற்று நடத்தலாம் ஏற்படும் அதிக செலவினங்கள் இவ்வகையாக கொள்கையளவிலான வெளிவேறும் உரிமைகளில் இடர்வரவு ஏற்படலாம்.

 • எதிரிணை நபரால் இடர்வரவு

போதிய கடற்பொருள் காப்பீடு ஒப்பந்தங்கள் மற்றும் கடன் மதிப்பீடுகள் இல்லாமையால் ஏற்படும் இடர்வரவு

 • தேசம் அளாவிய இடர்வரவு

அரசியல், சமுதாய சட்டரீதியான நிலவரங்களில் ஏற்படும் மாறுதல்கள் உண்டாக்கும் இடர்வரவு

 • முனைப்பு மற்றும் செயலமைப்பில் இடர்வரவு

தனிப்பட்ட ஒரு வங்கியோ பல வங்கிகளின் கட்டமைப்போ ஓரே வெளியார் நிறுவனத்திடம் பணிகளை ஒப்படைத்துத் தகவல்களை வெளியிடுகையில் அதன்மீது போதிய கட்டுப்பாட்டினை விதிக்க இயலாமையால் ஏற்படும் இடர்வரவு.

 

5.4. சேவைபுரிய வரும் வெளிநிறுவனத்தின் தகுதியை மதிப்பீடு செய்தல்

 

5.4.1. வெளியார்மயமாக்க உடன்படிக்கையின்படி கடமைப் பொறுப்பினைச் செயலாற்றுவதற்குத் தேவையான நிறுவனத்தின் தகுதியை அளவிடவும், அந்த நிறுவனத்தினுடனான உடன்படிக்கையை மாற்றும் அல்லது புதுப்பிக்கும் தருணங்களில் தேவையான கவனத்தையும் விழிப்புணர்வையும் மேற்கொள்ள வேண்டும். அவ்வமயம், அளவு, தகுதி, நிதியியல், நடைமுறை, நற்பெயர் சார்ந்த காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். சேவைபுரியும் வெளிநிறுவனத்தின் செயல்முறைத்திட்டம் வங்கியின் அமைப்பு முறைக்கு இசைவானதாகவும் செயல்பாட்டுத்திறன் வாடிக்கையாளர் சேவை உட்பட வங்கியின் செயல்திறத்திற்கு ஏற்புடையதாக உள்ளதா என்பதை வங்கிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஓரே வெளிநிறுவனத்திடம் பணிகள் ஒப்படைப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் மனதில் கொண்டே அந்த நிறுவனத்தின் தகுதியளவை மதிப்பிடவேண்டும். தன்னுடைய கண்டுபிடிப்புகளோடு சாத்தியப்படும்போதெல்லாம் வங்கி தன்னிச்சையாக மறுபரிசிலனை செய்தும், சந்தைவிவரங்கள் வாடிக்கையாளரிடம் இருந்து பெற்றும் தகவல்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

5.4.2. வெளியார் நிறுவனம் குறித்த எல்லா தகவல்களையும் மதிப்பிட்டு உரிய கவனத்தோடு பின்வரும் வரையறுக்கப்படா பல விவரங்களை உள்ளடக்கி செயல்பட வேண்டும்.

குறிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் கொடுக்கப்பட்ட நடவடிக்கையை நிறைவேற்றி நடத்திடத் திறமையுள்ளதா என்பதை முன் அனுபவத்தை வைத்து மதிப்பிடல்

 மோசமான சூழ்நிலையிலும் தனது சேவைப் பொறுப்புகளை நிறைவேற்றத் தேவையான நிதிவலிமையும் தகுதியும் உள்ளதா என்று சோதித்தறிதல்

 வரவிருக்கும் சட்டத்தகராறுகள், புகார்கள் மற்றும் நிலுவை இருப்புகள் விதிகளைச் பின்பற்றும்திறன், வணிகத்தில் நற்பெயர் நாகரிக செயல்முறை இவை கவனத்தில் வைக்கப்பட வேண்டும்.

பாதுகாப்பு மற்றும் உள்துறைத் தணிக்கை அறிக்கையளித்தல், மேற்பார்வைக்கேற்ற சூழல் மற்றும் தொடர்ந்து வர்த்தகம் நடத்தும் மேலாண்மை.

வெளி நிறுவனம் செயலாற்றும் ஆட்சி எல்லைப் பகுதியில் நிலவும், அரசியல், பொருளாதார, சமூக, சட்டசூழல்கள் போன்ற வெளிக்காரணிகள் மற்றும் அந்த நிறுவனத்தின் செயல் திறனை பாதிக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகள்

 வெளியார் நிறுவனம் தமது அலுவலகப் பணியாளர்கள் மீது கொண்டுள்ள போதிய விழிப்புணர்வு மற்றும் கவனம்

 

5.5. வெளியார்மயமாக்க ஒப்பந்தம்

 

வங்கியும் சேவை மேற்கொள்ளும் வெளி நிறுவனமும் ஏற்படுத்திக் கொள்ளும் உடன்படிக்கையின் கருத்துக்களும் கட்டளைகளும் கவனத்தோடு வரையறுக்கப்பட்டு, எழுதப்பட்டு சட்டரீதியான அணுகுமுறைக்கும், பின்விளைவுகளுக்கும் ஏற்புடையதென்று வங்கியின் சட்ட ஆலோசகர்களால் புலன் விசாரணை செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். ஒவ்வொரு உடன்படிக்கையும், வரவிருக்கும் இடர்களைச் செயல்ப்பாட்டினையும் அளிப்பதாக இருக்கவேண்டும். சட்டபூர்வமான விதிமுறைகளை அமுல்படுத்த நினைக்கும் தருணங்களில் தகுந்த நடவடிக்கைகளோடு வங்கி குறுக்கிடவும் மற்றும் தேவைப்படும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் வழிவகுக்கும் வகையில் வளைந்துகொடுக்கும் தன்மையுடைதாக அந்த உடன்படிக்கை இருக்கவேண்டும். வங்கிக்கும் அந்த நிறுவனத்திற்கும் இடையேயான சட்டபூர்வ உறவுமுறையின் (முதல்வர் – முனைவர் அல்லது வேறெந்த வகையாயினும்) இயல்பினை எடுத்துக்காட்டுவதாக அந்த உடன்படிக்கை அமைய வேண்டும். அந்த உடன்படிக்கையின் சில அடிப்படைக்கோட்பாடுகள் பின்வருமாறு:

குறிப்பிடப்பட்ட சேவை மற்றும் தரநிர்ணயங்களோடு எந்தெந்த நடவடிக்கைகள் வெளி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகின்றன என்பது தெளிவாக அளிக்கப்பட வேண்டும்.

வெளி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட பணிகள் சார்ந்த புத்தகங்கள், ஆவணங்கள், தகவல்களைப் பெற வங்கிக்கு உரிமையளிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட வேண்டும்.

சேவை மேற்கொள்ளும் நிறுவனத்தை வங்கி தொடர்ந்து கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் அதனால் திருத்தங்கள் தேவைப்பட்டால் உடனுக்குடன் செயல்முறைப் படுத்தவும் அந்த உடன்படிக்கை வழிவகை செய்திட வேண்டும்.

உடன்படிக்கையை முடித்துக்கொள்ள வழிவகுக்கும் சட்டக்கூறும் அந்த உடன்படிக்கை முறிவுக்குத் தேவைப்படும் காலகெடுவும் தேவைப்பட்டால் அதில் இணைக்கப்பட வேண்டும்.

வாடிக்கையாளர் சார்ந்த தகவல்களின் ரகசியப்பாதுகாப்பும், அதற்கு பாதிப்போ, வாடிக்கையாளர் குறித்த விவரம் வெளியே பரவுவதால் ஏற்படும் விளைவுகளுக்கோ நிறுவனம் பொறுப்பேற்க போதிய கட்டுப்பாட்டுகள் விதிக்கப் பட்டுள்ளதை உறுதி செய்யப்பட வேண்டும்.

தொடர்ந்த வர்த்தகத்தை உறுதிசெய்யும் எதிர்பாரா நிகழ்வுகளுக்கான திட்டங்கள்

 

வெளி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் பணி முழுமையாகவோ, உப ஒப்பந்தக்காரர்களிடம் விடப் படுவதற்கு வங்கியின் முன்அனுமதி அல்லது அங்கிகாரம் பெறுவதன் அவசியம் ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட வேண்டும்.

வங்கி நடத்தும் சேவைகளுக்கு இணையான சேவைகளை ஏற்று நடத்தும் வெளியார் நிறுவனத்தின் செயல்பாடுகளின் தணிக்கையை வங்கி (உட்துறை அல்லது வெளி தணிக்கையாளர் அல்லது அவர்தம் சார்பில் செயல்பட உரிமையளிக்கப்பட்ட முகவர் மூலமாக) செய்திடும் உரிமை பெறவும் மற்றும் தணிக்கையறிக்கைகள், மறுபரிசிலனைகள் குறித்த அறிக்கைகள், கண்டுபிடிப்புகள் இவற்றின் பிரதிகளை பெறவும் ஒப்பந்தம் வழிவகுத்திட வேண்டும்

 வங்கியின் சேவையை ஏற்று நடத்தும் வெளி நிறுவனத்தின் பயன்பாட்டிற்காகவும் தொகுத்து வைக்கும்பொருட்டும் வங்கி அளித்திடும் ஆவணங்கள் நடவடிக்கைப்பதிவுகள் மற்றும் தகவல்களை ரிசர்வ் வங்கியோ அல்லது அதனால் அங்கிகரிக்கப்பட்ட நபர்களோ, குறிப்பிட்ட காலத்தில் பார்வையிட அனுமதி அளித்திடும் கருத்துக்கூறினை வெளியார்மயமாக்க ஒப்பந்தம் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.

வங்கியின் சேவையை மேற்கொள்ளும் நிறுவனத்தின் புத்தகங்கள் மற்றும் கணக்குகளை ரிசர்வ் வங்கியின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரிகள், அலுவலர்கள் அல்லது வேறு நபர்கள் மேற்பார்வையிட ஏதுவாக ரிசர்வ் வங்கியின் உரிமையை இனங்கண்டு ஒப்புக்கொள்ளும் கருத்துக்கூறும் வெளியார்மயமாக்க ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும்.

இந்தியாவில் செயல்படும் அயல்நாட்டு வங்கிகளின் தலைமை மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகங்கள் இந்தியாவில் புரியும் செயல்பாடுகளுக்கான நடவடிக்கைகளை வெளியார்மயமாக்க நினைக்கும் வேளையில் அத்தகு ஒப்பந்தங்களில் பின்வரும் கருத்துக்கூறுகள் இடம்பெற வேண்டும். வங்கி சேவையை ஏற்று நடத்தும் வெளி நிறுவனத்தின் பயன்பாட்டிற்காகவும் மற்றும் தொகுத்துவைப்பதற்காகவும் வங்கி அளித்திடும் ஆவணங்கள், நடவடிக்கைப்பதிவுகள் மற்றும் தகவல்கள் போன்றவற்றை ரிசர்வ் வங்கியோ அல்லது அதனால் அங்கிகரிக்கப்பட்ட நபர்களோ, குறிப்பிட்ட காலத்தில் பார்வையிட அனுமதி அளிக்கும் கருத்துக்கூறு இடம்பெற வேண்டும். வங்கியின் சேவையை மேற்கொள்ளும் நிறுவனத்தின் புத்தகங்கள் மற்றும் கணக்குகளை ரிசர்வ் வங்கியின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரிகள், அலுவலர்கள் அல்லது வேறு நபர்கள் மேற்பார்வையிட ஏதுவாக ரிசர்வ் வங்கியின் உரிமையை இனங்கண்டு ஒப்புக்கொள்ளும் கருத்துக்கூறும் இடம்பெற வேண்டும்.

ஒப்பந்தக்காலம் முடிந்தாலோ, முறிவுற்றாலோ அதன்பின்பும் வாடிக்கையாளர் குறித்து வங்கிகள் வெளியார் நிறுவனத்திடம் அளித்த தகவல்களின் ரகசியம் பாதுகாக்கப் படவேண்டும். இதற்கும் ஒப்பந்தம் வழிவகை செய்ய வேண்டும். வங்கி வெளி நிறுவனத்திட்டம் ஒப்படைத்த் ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அவை தொடர்பான வங்கியின் சட்டரீதியான விதிமுறைப் பொறுப்புகளுக்கேற்ப பாதுகாத்து வைக்கப் படவேண்டும்.

5.6. இரகசியக்காப்பு மற்றும் பாதுகாப்பு

 

5.6.1. ஒரு வங்கியின் நிலைத்தன்மைக்கும் நற்பெயருக்கும் அத்தியாவசியத் தேவை, பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளரின் நல்லெண்ண உறுதிப்பாடு ஆகியவை ஆகும். ஆகவே வெளி நிறுவனத்தின்வசம் அளிக்கப்படும் வாடிக்கையாளர் சார்ந்த தகவல்களின் ரகசியக்காப்பு மற்றும் பாதுகாப்பினை வங்கி உறுதி செய்திட வேண்டும்.

5.6.2. வெளி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் செயலைச் செய்வதன்பொருட்டும் தேவைக்கேற்ற அளவுக்கு மட்டுமே அந்நிறுவனத்தின் அலுவலர்கள் வங்கி அளித்திடும் வாடிக்கையாளர் குறித்த தகவல்களை பெறலாம்.

5.6.3. வங்கி அளிக்கும் வாடிக்கையாளர் சார்ந்த தகவல்கள் குறிப்பேடுகள், ஆவணங்கள், சொத்துக்கள் இவற்றைப் பாதுகாத்து அவற்றின் நம்பகத் தன்மையைக் காத்திட, அவற்றைத் தனியாக இனங்கண்டு பிரித்துவைத்திட வெளி நிறுவனத்திற்கு தகுதியும் போதிய வசதியும் உள்ளதா என்பதை வங்கி உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் ஒரே வெளி நிறுவனம் பல்வேறு வங்கிகளின் சேவையை ஏற்று நடத்தும்பொழுது கவனத்தோடு சிறப்பான தகவல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தகவல்கள் ஆவணங்கள், சொத்துக்கள் ஒன்றுக்கொன்று கலந்து போகாமல் இருக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளதா என்பதை வங்கி கவனிக்க வேண்டும்.

5.6.4. சேவைபுரியும் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு செயல்முறைத் திட்டங்களை முறைப்படுத்தப்பட்ட வகையில் வங்கி மறுபரிசிலனையும் மேற்பார்வையும் செய்துவர வேண்டும். ஒருவேளை பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதாவது பிளவு ஏற்பட்டால் அதனை அந்த நிறுவனம் உடனே வங்கியிடம் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்.

5.6.5. சேவைபுரியும் நிறுவனத்தின் பாதுகாப்பு, ஏற்பாடு அல்லது வாடிக்கையாளர் குறித்த தகவல்களின் ரகசியப் பாதுகாப்பு இவற்றில் ஏற்படும் பிளவுகளை வங்கி உடனடியாக ரிசர்வ் வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். இத்தகைய நிகழ்ச்சிநிலைகளால் வங்கி வாடிக்கையாளருக்கு தண்டனைக்கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும்.

5.7 நேரடி விற்பனைமுகவர்/நேரடி சந்தை முகவர்கள்/வசூல் முகவர்கள் இவர்தம் கடமைப் பொறுப்பு

 

5.71 நேரடி விற்பனை முகவர்களுக்காக இந்திய வங்கிகள் கூட்டமைப்பினால் உருவாக்கப்பட்ட நடத்தை நெறி முறைகளைப் பயன்படுத்தி அவரவருக்கான நெறிமுறைகளை நேரடி விற்பனை முகவர்கள்/நேரடி சந்தை முகவர்கள்/வசூல் முகவர்கள் வகுத்துக் கொள்ளலாம். இத்தகு முகவர்கள் கடமைப் பொறுப்பினை கவனத்தோடும் உணர்வுத்திறத்தோடும் கையாளப் போதிய பயிற்சி முறிப்பாக, வாடிக்கையாளரை அணுகி ஆதரவு நாடுதல், வாடிக்கையாளறுடன் தொடர்பு கொள்ளும் நேரம், வாடிக்கையாளர் குறித்த தகவலின் ரகசியப்பாதுகாப்பு மற்றும் விளம்பரம் செய்யும் பொருள குறித்த சரியான விவரங்கள் அளித்தல் போனற அம்சங்களில் போதிய பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை வங்கி உறுதி செய்து கொள்ள வேண்டும்.

5.7.2 கடன்நிலுவைத்தொகை வசூலிப்புமுறைகளுக்கான நடத்தை நெறிமுறைகளோடு, நடைமுறையிலுள்ள (சுற்றறிகை DBOD.Leg.No. Bc.104/09.07.007/2002-2003. 5.5.2003 தேதியிடப்பட்ட) “ கடன் வழங்க நியாயமான பழக்கங்களுக்கான நடத்தை நெறி முறைகளையும் ” வசூல் முகவர்கள் பின்பற்ற வேண்டும். வங்கிகள் தம்வசம் எந்த நடத்தை நெறிமுறைகளும் இல்லாத பட்சத்தில், குறைந்தபட்சம் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அளித்துள்ள “கடன் வசூல் மற்றும் பிணைப்பொருள் மீட்புக்கான “ நடத்தை நெறிகுறைகளைப் பின்பற்றலாம். வாடிக்கையாளரின் நம்பிக்கையை கவன்த்தோடு காத்தும், வங்கியின் நேர்மை மற்றும் நற்பெயருக்கு ஆபத்து விளைவிக்கும் எந்தச்செயலிலும் வசூல்முகவர்கள் ஈடுபடாதிருக்க வேண்டியது அவசியமாகும்.

5.7.3 கடன் வசூலிக்கும் முறைகளில், பேச்சளவிலோ, உடல்ரீதியாகவோ, அச்சுறுத்தும் வகையிலோ, அலைக்கழிக்கும் விதத்திலோ மற்றும் பொது இடங்களில் கடன்காரரை அவமானப்படுத்தும் விதமாகவோ, கடனாளியின் குடும்ப அங்கத்தினர்களின் மற்றும் அவர்களுக்குச் சான்றுரைத்த நபர்கள், நண்பர்கள் இவர்களின் தனிவாழ்வினைபாதிக்கும் விதமாகவோ பொய்யான, தவறான் வழிகாட்டும் அறிவிப்புகளைச்செய்வதும் பெயரைக்குறிப்பிடாமல் அச்சுறுத்தும் வகையில் தொலைபேசி அழைப்புகள் விடுப்பதும் போன்றவை உள்ளிட்ட எத்தகைய செயல்பாட்டு முறைகளையும் வங்கி முகவர்கள் நாடக்கூடாது.

5.8 தொடரும் வர்த்தகம் மற்றும் பேரழிவு மீட்புத்திட்டமேலாண்மை

5.8.1 தொடரும் வர்த்தகப்பணி மற்றும் மீட்புக்கான செயல் முறைகளை ஆவணப்பதிவாக்கவும், பாதுகாக்கவும், சோதித்தறியவும் வலிவான சட்டக்கட்டமைப்பினை சேவைமேற்கொள்ளும் நிறுவனம் வளர்ந்து நிலைபெறச் செய்யவேண்டும் என்று வங்கி அறிவுறுத்த வேண்டும். சேவை செய்யும் நிறுவனம் தொடரும் வர்த்தகத்தையும், மீட்புத்திட்டங்களையும் ஒழுங்காக சோதித்தறிகிறதா என்பதனை வங்கி உறுதி செய்து கொள்வதோடு, எப்போதாவது வங்கியும் இணைந்து அந்த சோதனைகளையும் மீட்பு முறை செயல்பாடுகளையும் மேற்கொள்ள முன்வரலாம்.

5.8.2. சேவை மேற்கொள்ளும் நிறுவனம் திடிரென திவாலானாலோ, வெளியார்மயமாக்க ஒப்பந்தம் எதிர்பாராத வகையில் முரிக்கப்பட்டாலோ, ஏற்படக்கூடிய இடர்வரவினைக்குறைக்கும் வகையில் அந்த ஒப்பந்தப்பணிகளில் வங்கி குறிப்பிட்ட அளவு கட்டுப்பாட்டினைத்தன் வசம் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் அதிக அளவு தடுக்கும் செலவினங்கள் இல்லாமல், வங்கியின் செயல்பாடுகளில், வாடிகையாளர் சேவைகளில் தடை ஏதும் ஏற்படாவண்ணம் ஒப்பந்த நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளைத் தக்க முறைகளோடு இடையிட்டு செயல்படுத்தும் உரிமையை வங்கி தம்வசம் வைத்திருக்க வேண்டும்.

5.8.3 பின்னிகழும் இடரினை எதிர்கொள்ள வளமான ஒரு திட்டத்தை நிறுவிடும்போது கவனிக்க வேண்டியவை பின்வருமாறு மாற்று சேவை நிறுவனம் உள்ளதா ? வெளியாரிடம் விடப்பட்ட பணிகளை நெருக்கடி நேரத்தில் மீண்டும் வங்கியுனுள்ளே ஏற்றுசெயல்படுத்த முடியுமா ? அவ்வாறாயின் அதில் ஏற்படும் செலவு, காலவிரயம், மூலதனம் இவை அனைத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

5.8.4. சேவை செய்யும் நிறுவனத்திடம் உள்ள செயல்முறை வசதிகளைப்பகிர்ந்து கொள்ளும் தேவை வெளியார்மயமாக்கலினால் விளையக்கூடும். வங்கியின் தகவல், ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் சொத்துக்களை சேவைபுரியும் நிறுவனம் தனிப்படுத்தி வைக்க இயலுமா என்பதனை வங்கி உறுதிசெய்து கொள்ள வேண்டும். மோசமான காலகட்டத்தில், சேவை நிறுவனத்திடம் அளிக்கப்பட்ட ஆவணங்கள், நடவடிக்கைப்பதிவேடுகள், தகவல்கள், மற்றும் வங்கியின் சொத்துக்கள் ஆகியவை வங்கியின் செயல்பாடுகளைத் தொடரும் பொருட்டு மீண்டும் பறிக்கப்படலாம், அல்லது அவை அழிக்கப்பட்டாலாம் அல்லது செயலிழக்கம் செய்யப்படலாம்.

5.9 வெளியாரிடம் விடப்பட்ட நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை

5.9.1 வங்கி வெளியாரிடம் ஒப்படைக்கும் பணிநடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் மேற்பார்வை செய்யவும் தகுந்த மேலாண்மை கட்டமைப்பு உடையதாக இருக்க வேண்டும். ஒப்படைக்கப்படும் நடவறிக்கைகளை மேற்பார்வையிடவும் கட்டுப்படுத்தவும் உரியன் வற்றை ஒப்பந்தங்கள் குறிப்பிட்டுக்காட்டுகின்றனவா என்பதை வங்கி உறுதி செய்திடல் வேண்டும்.

5.9.2. உயர் மேலாண்மை மற்றும் வங்கிநிர்வாகக்குழு உடனே பார்வையிடவும், பரிசீலனை செய்யவும் வழிசெய்யும் வகையில் முக்கியமான வெளியாரிடம் விடப்பட்ட பணிகளின் மையப் பதிவுகளை வங்கி பாதுகாத்து பேணிக்காத்திட வேண்டும். அந்த பதிவுகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு அரையாண்டு பரிசீலனை அறிக்கைகள் வங்கி நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

5.9.3. வெளியார்மயமாக்க ஒப்பந்தங்களை கண்காணித்து மேற்பார்வை யிருக்கையில், இடர்வரவினைக் கையாளும் முறைகள் போதிய அளவில் உள்ளதா என்பதை மதிப்பிடவும், மற்றும் இடர்வரவுக்கண்காணிப்புக்கான் சட்டஅமைப்பினையும், அதன் வழிகாட்டுதல்களின் தேவைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும், ஒழுங்கு முறையிலமைந்த உள்துறை தணிக்கையாளர் அல்லது வெளி தணிக்கையாளர் மூலமாக வங்கி தணிக்கை செய்திடல் வேண்டும்.

5.9.4 சேவையை மேற்கொண்ட நிறுவனம் அதிகமான பொறுப்புகளைத்தொடந்து நிறைவேற்றும் திறம்படைத்ததா என்பதை மதிப்பிட அதன் நடைமுறை மற்றும் நிதிநிலை நிலவரங்களை வங்கிகள் ஆண்டுக்கொருமுறையாவது பரிசிலனை செய்திட வேண்டும். சேவை நிறுவனம் குறித்து அளிக்கப்பட்ட எல்லா விவரங்களின் அடிப்படையில் அமைக்கப்படும் இதற்கு கவனமான பரிசிலனைகள் பின்வரும் விவரங்களை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைய வேண்டும். அவையாவன - செயல்முறைத் தரத்தில், நம்பகத்தன்மையில் மற்றும் தொடந்த வர்த்தகத்திற்கான வளமான தயார்நிலை இவற்றில் இழிநிலை அல்லது பிளவு.

5.9.5. ஏதாவது ஒரு காரணத்தால் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தால், வாடிக்கையாளர் சேவை நிறுவனத்தைத் தொடர்ந்து அணுகி வரவேற்காதிருக்கும் பொருட்டு, அத்தகவல் பறைசாற்றிடப் படவேண்டும்.

 

5.10. வெளியாரிடம் விடப்பட்ட சேவைகளில் குறைதீர்ப்பு

 

. வங்கிகளுக்குள்ளே குறைதீர்ப்பாயம் ஒன்றினை ஏற்படுத்தி மின்னணு மற்றும் அச்சு ஊடகம் மூலம் அதற்கு விரிவான் விளம்பரத்தினைச்செய்திடல் வேண்டும். வங்கியின் நியமிக்கப்பட்ட குறைதீர்ப்பு அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்புக்கான தொலைபேசி எண் அனைவருக்கும் அறியும்படி பரவச்செய்திடல் வேண்டும். தாமதம் ஏதுமின்றி வாடிக்கையாளரின் உண்மையான புகார்கள் தீர்க்கப்படுவதை நியமிக்கப்பட்ட அதிகாரி உறுதி செய்து கொள்ள வேண்டும். வெளிமுகவரிடம் ஒப்படைக்கப்பட்ட சேவைகளில் ஏற்படும் பிரச்சனைகளையும், வங்கியின் குறைதீர்ப்பு செயலமைப்பு மையம் தீர்த்துவைக்கும் என்பது தெளிவாக எடுத்துக்காட்டப்படவேண்டும்.

. குறைகள் மற்றும் புகார்களை முன்வைக்க 30 நாட்கள் காலஅவகாசம் பொதுவாக அளிக்கப்படலாம். வங்கியின் குறைதீர்ப்பு மையத்தின், செயல்முறை மற்றும் புகார்களுக்கான மறுமொழி அளிக்க எடுத்துக்கொள்ளும் காலம் ஆகியவை வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

. வங்கியிடம் அளிக்கப்பட்ட புகாருக்கு திருப்திகரமான பதில் புகார்தாரருக்கு அவர் புகார் அளித்த நாளிலிருந்து 60 நாட்களுக்குள் கிடைக்கவில்லையென்றால், அந்த வங்கியின் உரிய குறைதீர்ப்பாளர் அலுவலகத்தை நாடும் விருப்பத்தேர்வு அவருக்கு உண்டு.

5.11. வாடிக்கையாளர் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனத்தின் பணநடவடிக்கை அறிக்கைகள் மற்றும் சந்தேகமளிக்கும் நடவடிக்கை அறிக்கைகளை, நிதியியல் சார்ந்த பண்நாட்டு அறிவார்ந்த அமைப்பு (FIU) அல்லது ஏதாவது உரிய அதிகாரம் பெற்ற அதிகாரியிடமோ சமர்ப்பித்திட வங்கி பொறுப்பேற்றிட வேண்டும்.

 

6. வெளியார்மயமாக்கப்பணி முகவர்களின் மையப்படுத்தப்பட்ட பட்டியல்

 

சேவை மேற்கொள்ளும் நிறுவனத்தின் சேவை ஒப்பந்தம் வங்கியால் முறிக்கப்பட்டால், அந்த விவரம் அதற்கான் காரணத்தோடு இந்திய வங்கிகள் கூட்டமைப்பிற்குத் தெரிவிக்கப்படவேண்டும். இந்திய வங்கிகள் கூட்டமைப்பு இத்தகைய நிறுவனங்களின் பட்டியலைப் பேணிப்பாதுகாத்து வங்கிளை எச்சரிக்கும் பொருட்டும், எல்லா வங்கிகளும் பகிர்ந்து அறிந்து கொள்ளும் வகையிலும் அளிக்கும்.

 

7. நிதிச்சேவைகளில் கடல்கடந்து வெளியார்மயமாக்கல்

 

வெளிநாட்டிலுள்ள நிறுவனங்களிடம், வங்கிகள் நிதிச்சேவைகளை ஒப்படைக்கும்பொழுது, அது தேசிய அளவிலான் இடர்வரவிற்கு வங்கியை உள்ளாக்குரிறது. அந்நாட்டின் பொருளாதார சமூக அரசியல் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் வங்கியை மோசமாக பாதிக்கலாம். அந்நிலையில், வங்கியோடு நிறுவனம் வகுத்துக்கொண்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை நிறுவனம் நிறைவேற்றுவது தவிர்க்கப்படலாம். இத்தகைய தேசிய அளவிலான இடர்வரவுப்பிரச்சனைகளைக் கையாளவும் அதனைக் கண்காணிக்கவும் (மதிப்பீடு செய்யும் வகையில்) வங்கி அந்த (நிறுவனம் அமைந்திருக்கும்) வெளிநாட்டின் பொருளாதார அரசியல், சமூகக்கொள்கைகள், சட்ட நிலவரம் அகியவற்றை கருத்தில் கொண்டு, கூர்ந்து கண்காணித்து செயல்பட்டு, தொடர்ந்த அடிப்படையில் வளமான செயல் முறைகளை நிலைபெறச்செய்திடல் வேண்டும். “எதிர்பாரா பின்னிகழ்வு” மற்றும் “வெளியேறும் கொள்கை” போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பொதுவாக, நம்பகத்தன்மைக்கான கருத்துக்கூறினை ஏற்றுப்போற்றி ஒப்பந்த வழி நடக்கும் ஆட்சி எல்லைக்குள் செயல்படும் நபர்களோடு மட்டுமே ஒப்பந்த ஏற்பாடுகள் செய்து கொள்வதைக்கொள்கையாகக் கொள்ளலாம். அந்த ஏற்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டம் எது என்பது குறிப்பிடவேண்டும்.

7.2 வங்கியின் இந்தியப்பணிகளை மேற்பார்வையிடும், மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகளை பாதிக்காத வகையில் வெளிநாட்டில் உள்ள நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட பணிகள் நடத்தப்படவேண்டும்.

7.3 இந்திய வங்கிகளின் கடல்கடந்த செயல்பாடுகளை வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கையில், மேற்கண்ட வழி காட்டுதல்களாலும் மற்றும் அந்த குறிபிட்ட வெளிநட்டின் வழிகாட்டுதல்களாலும் அவை கட்டுப்படுத்தப்படும். இவற்றுக்குள் வேறுபாடுகள் இருக்குமாயின் அதிக கெடுபிடியானவை நடப்பிலிருக்கும். ஆயினும் இரண்டுக்குள், முரண்பாடுகள் இருக்குமாயின், ஆதரிக்கும் தேசத்தின் வழிகாட்டுதல்கள் மேலோங்கி நிற்கும்.

8. ஒரே குழுமம்/பல்திரள் கூட்டமைப்போடு வெளியார்மயமாக்கல் ஒப்பந்தம்

 தொடர்புடைய நபரோடு வெளியார்மயமாக்க ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளும் போது, வங்கி மேற்கொள்ளும் இடர்வரவு கண்காணிப்பு நடைமுறைகள் இந்த வழிகாட்டுதல்களில் உள்ள பாரா.5 ல் குறிப்பிடப்பட்டுள்ளவற்றிற்கு ஒப்பானவையாகும்.

 

9. நடைமுறையிலுள்ள/முன்கொணரவுள்ள வெளியார்மயமாக்க

ஏற்பாடுகள் குறித்த சுயமதிப்பீடு

 நடைமுறையிலுள்ள வெளியார்மயமாக்க ஏற்பாடுகளை வங்கிகள் குறித்த காலதிட்டத்தின்படி, சுயமதிப்பீடு நடத்தி, மேற்கண்ட வழிகாட்டுதல்களுக்கு இசைவுடையதாக விரைந்து செயல் படுத்திட வேண்டும்.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்