RBI/2008-09/207
DPSS.CO.No.611/03.01.03(P)/2008-09
அக்டோபர் 8, 2008
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் / முக்கிய நிர்வாக அதிகாரி
அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் பிராந்திய கிராமப்புற வங்கிகள் உட்பட / நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள் /
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்
மின்னூடக பண அளிப்பு சாதனங்கள் மற்றும்
வெளியூர் காசோலை சேகரிப்பு இவற்றிற்கு
விதிக்கப்படும் சேவை கட்டணங்கள்
மின்னூடகம் வாயிலாக மேற்கொள்ளப்படும் பண அளிப்புசேவைகள் மற்று வெளியூர் காசோலை சேகரிப்பு ஆகியவற்றிற்காக வங்கிகள் விதிக்கும் கட்டணங்களின் வடிவமைப்பு உடனடி செயல்பாட்டிற்கு பின்வருமாறு நிர்ணயிக்கப்படுகிறது.
1. மின்னூடக பண அளிப்பு சாதனங்கள்
a) உள்முக உடனுக்குடனான மொத்தத் தீர்வு (RTGS) / தேசிய மின்னணு நிதிமாற்றம் (NEFT) / மின்னணு தீர்வுச் சேவை (ECS) பரிவர்த்தனைகள் - இலவசமாக கட்டணம் ஏதுமின்றி.
b) வெளிமுக பரிவர்த்தனைகள்
(i) |
உடனுக்குடனான மொத்தத் தீர்வு (RTGS) - ரூ.1 முதல் 5 லட்சம் வரை |
ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25-ற்கு மிகாமல் |
|
ரூ.5 லட்சத்திற்கு மேல் |
ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.50-ற்கு மிகாமல் |
(ii) |
தேசிய மின்னணு நிதிமாற்றம் - ரூ.1 லட்சம் வரை |
ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5-ற்கு மிகாமல் |
|
ரூ.1 லட்சத்திற்கு மேல் |
ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25-ற்கு மிகாமல் |
c) காசோலை பணமளிக்கப்படாமல் திருப்பியனுப்பப்படும்போது விதிக்கப்படும் கட்டணத்திற்கு மிகாமல், வங்கிகள் மின்னணுத் தீர்வு சேவை பற்றுகள் தவறினால் கட்டணங்கள் விதிக்கலாம்.
d) இத்தகு கட்டணங்கள் வங்கிகளுக்கிடையேயான நிதிமாற்றங்கள் உட்பட எல்லாவகையான பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.
2. வெளியூர் காசோலை சேகரிப்பு
a) |
ரூ.10,000/- வரை |
ஒரு உபகரணத்திற்கு ரூ.50-ற்கு மிகாமல் |
|
ரூ.10,000/- முதல் ரூ.1,00,000/- வரை |
ஒரு உபகரணத்திற்கு ரூ.100-க்கு மிகாமல் |
|
ரூ.1,00,000/-ற்கு மேல் |
ஒரு உபகரணத்திற்கு ரூ.150-ற்கு மிகாமல் |
b) மேற்குறிப்பிட்ட கட்டணங்கள் அனைத்தையும் உள்ளடக்கியவையாகும். இது தவிர கூரியர் கட்டணம், இதர சிறு செலவினங்கள் போன்ற கூடுதல் கட்டணங்களை வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்கக்கூடாது.
c) தீர்வுமுறை சுழற்சி நேரத்தைக் குறைக்கவும், மின்னூடக பண அளிப்பு சாதனங்களை ஊக்குவிக்கவும், கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் (Drawee bank) உடனுக்குடனான மொத்தத் தீர்வு (RTGS), தேசிய மின்னணு நிதிமாற்றம் (NEFT) ஆகியவற்றை பயன்படுத்தி சேகரிக்கும் வங்கிக் கிளைக்கு (collecting bank branch) பணம் அனுப்பலாம்.
d) சிறந்த முறையில் சேவை அளிக்க வங்கிகள் விரைவுத் தீர்வு மற்றும் தேசியத் தீர்வு முறைமை வசதிகளை அதிகளவில் பயன்படுத்தலாம்.
3. இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டு இந்தியாவிற்குள் பணம் அளிக்கப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே மேற்குறிப்பிட்ட கட்டணங்கள் பொருந்தும்.
4. மிகப்பெரிய தொகைக்கான பரிவர்த்தனைகளை கையாளும்போது, வங்கிகள் விதிக்கும், 'பணம் கையாளும் கட்டணங்க'ளுக்கு இந்தச் சுற்றறிக்கையின் கருத்துக்கள் பொருந்தாது.
5. எந்தவொரு வங்கியும் தனது வாடிக்கையாளருக்கு பண் அனுப்பீட்டுக்குரிய எந்தவொரு சாதணம் / உபகரணம் / சேவையை அளிக்க மறுக்கக்கூடாது. வெளியூர் காசோலையை சேகரத்தின்பொருட்டு ஏற்பதற்கு மறுப்பு தெரிவிக்கக்கூடாது.
6. கொடுப்பு மற்றும் தீர்வு முறைமைகள் சட்டம், 2007 (2007ன் சட்டம் 51)-ன் பிரிவு 18-ன் கீழுள்ள அதிகாரங்களை செலுத்தும் முகமாக இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை வேறு ஏதாவது சட்டத்தின் கீழ் தேவைப்படும் அனுமதி / ஒப்புதல்களுக்கு பங்கமின்றி வெளியிடப்படுகின்றன.
தங்கள் உண்மையுள்ள
(G. பத்மநாபன்)
தலைமைப் பொது மேலாளர்
|