Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (49.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 10/11/2006

2004 – மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் கீழ் வழங்கப்படும்வட்டியில் வரிப்பிடித்தம் செய்தல் – படிவம் எண் 15H மற்றும் 15 G ஆகியவற்றை வங்கிகள் ஏற்காமை

RBI/2006-07/171

DGBA.CDD.No.H-7667/15.15.001/2006-07 நவம்பர் 10, 2006

பொது மேலாளர்அரசு கணக்குத்துறை- தலைமை அலுவலகம்

பாரத/இந்தூர்/பாட்டியால/பிகானெர் மற்றும் ஜெய்பூர்/சௌராஷ்டிரா/ திருவாங்கூர்/ஹைதராபாத்/மைசூர் வங்கிகள்அலகாபாத் வங்கி/ பாங்க் ஆப் பரோடா வங்கி/ பாங்க் ஆப் இந்தியா/

பாங்க் ஆப் மஹாராஷ்ட்ரா/கனரா வங்கி/

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா/கார்ப்பரேஷன் வங்கி/

தேனா வங்கி/இந்தியன் வங்கி/இந்தியன் ஓவர்சீஸ் வங்கி/

பஞ்சாப் நேஷனல் வங்கி/சின்டிகேட் வங்கி/யூகோ வங்கி/

யூனியன் பாங்க் ஆப் இந்தியா/யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா/ஐசிஐசிஐ பாங்க் லிட்/ விஜயா வங்கி

அன்புடையீர்,

2004 – மூத்த குடிமக்கள் சேமிப்புத்திட்டம் கீழ் வழங்கப்படும்வட்டியில் வரிப்பிடித்தம் செய்தல் – படிவம் எண் 15H மற்றும் 15 G

ஆகியவற்றை வங்கிகள் ஏற்காமை

2006 ஜுன் 28 தேதியிட்ட எங்கள் சுற்றறிக்கை RBI/2005-06/431 எண் DGBA.CDD. எண் H-20692/15.15.001/2005-06ஐ சரி பார்க்கவும். 2004 – மூத்த குடிமக்கள் சேமிப்புத் ட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டியில் வரிப்பிடித்தம் செய்தல் சம்பந்தமாக சில விளக்கங்களைக் கூறியிருந்தோம்.

2. முதலீட்டாளர்கள் சமர்பிக்கும் படிவம் எண் 15H(அ) படிவம் எண் 15 G இவற்றை முகமை(Agency) வங்கிகள் ஏற்க மறுப்பதோடு வட்டித் தொகையில் வரிப்பிடித்தம் செய்வதாக கூறி தங்களுக்கு அதிக அளவிலான புகார்களும்/முறையீடுகளும் வருவதாக இந்திய அரசு, நிதி அமைச்சகம், புது தில்லி அனுப்பிய கடிதத்தை நாங்கள் பெற்றிருக்கிறோம்.

3. எனவே முதலீட்டாளர் படிவம் 15H(அ) , 15 G(அ) பிரிவு 197(1) வருமான வரிச்சட்டம் 1961ன் கீழ் சான்றிதழோ சமர்பித்தால், முகமை வங்கிகள், எந்த வரிப்பிடித்தமும் செய்யவேண்டாம் என திரும்பவும் அறிவுறுத்துகிறோம். இதற்காக இந்திய அரசு அலுவலக நினைவுக்குறிப்பு எண் 2/8/2005-NS- II 2006 ஜுன் 23, தேதியிட்ட விதிமுறை நகல் ஏற்கனவே உங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

4. உங்கள் கிளைகளுக்கெல்லாம் இச்சுற்ற்றரிக்கையின் விவரங்களைத் தெரியப்படுத்தி நடைமுறைப்படுத்த ஆவண செய்யவும்.

5 கிடைத்தமைக்கு ஒப்பு அளிக்க

நம்பிக்கையுள்ள

 

(P.P. சங்மா)

பொது மேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்