RBI/2008-09/186
DBOD,No.Leg.BC.47/09.07.005/2008-09
செப்டம்பர் 19, 2008
அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய கிராமப்புற வங்கிகள் நீங்கலாக)
அன்புடையீர்
வங்கிகள் முடக்கி வைத்துள்ள கணக்குகள் மீதான வட்டி வழங்குதல்
அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வழங்கும் ஆணையின் அடிப்படையில் சில நேரங்களில் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கி வைக்க நேரிடலாம் என்பது வங்கிகள் அறிந்ததே. இவ்வாறு முடக்கி வைக்கப்பட்ட கணக்குகள் மீதான வட்டி வழங்குவது குறித்து ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.
2. இந்தப் பிரச்சனை இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் ஆலோசனையோடு ஆய்வு செய்யப்பட்டு பின்வரும் செயல்முறையை பின்பற்ற வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன. அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் முடக்கப்பட்ட கணக்கு குறித்தகால வைப்புக் கணக்காக இருக்கும் பட்சத்தில் பின்வருமாறு செயல்படலாம்.
(i) அந்த வைப்பினை கணக்கு தொடங்கியபோது உள்ள அதே கால அளவிற்கு முதிர்விலிருந்து புதுப்பிக்க ஒரு வேண்டுதல் கடிதத்தை வாடிக்கையாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
(ii) இதற்கு தனியாக ரசீது தரவேண்டியது இல்லை. ஆயினும் வைப்புப் பதிவேட்டில் புதுப்பிக்கப்பட்டதற்கான குறிப்பினை பதிவுசெய்திடல் வேண்டும்.
(iii) இவ்வாறு வைப்பு புதுப்பிக்கப்பட்ட தகவலை பதிவுத் தபால் அல்லது விரைவுத் தபால் அல்லது குரியர் மூலம் உரிய அரசுத் துறைக்கு அனுப்பப்படும். வைப்புதாரருக்கும் புதுப்பிக்கப்பட்ட வட்டி விகிதத்துடன் இதுபற்றிய தகவல் தெரிவிக்கப்படும்.
(iv) வாடிக்கையாளரிடமிருந்து வேண்டுதல் கடிதம் வைப்பின் முதிர்விலிருந்து 14 நாட்களுக்குள் பெறப்பட்டால் முதிர்வுத் தேதியிலிருந்தே அந்த வைப்பை புதுப்பிக்கலாம். ஆனால் இது 14 நாட்களைத் தாண்டிவிட்டால் வங்கி அந்த வைப்புத்தொகையை இடைப்பட்ட காலத்திற்கு வட்டியில்லாத ஒரு துணைக் கணக்கில் வைத்திருந்து அதன் கொள்கைப்படி உரிய வட்டியை வழங்கலாம். ஆனால் அசல்தொகை எப்பொழுது முதிர்வடைந்து வழங்கப்படுகிறதோ அப்பொழுது அந்த வட்டியை வழங்கலாம்.
3. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சேமிப்புக் கணக்கை முடக்கிவைக்க உத்தரவிட்டிருந்தால் வங்கிகள் வழக்கம்போல் இவற்றிற்குரிய வட்டியை வரவு வைக்கலாம்.
தங்கள்உண்மையுள்ள
(பிரசாந்த் சரன்)
தலைமைப் பொது மேலாளர் (பொறுப்பு)
|