அந்நிய நாடுகளிலிருந்து போலியான மலிவான பண அனுப்பீடு குறித்து பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை
RBI/2008-09/126 UBD.PCB.Cir.No.6/12.05.001/2008-09
ஆகஸ்ட் 12, 2008
தலைமை நிர்வாக அதிகாரி அனைத்து தொடக்கநிலை (நகர) கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்
பொதுமக்களை ஏமாற்றும் வகையில் போலியான லாட்டரி விளம்பரங்கள் பண சுழற்சி திட்டங்கள் போன்றவை அவ்வப்போது வெளியிடுவது நீங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே. அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம் 1999ன்கீழ் பரிசுத் திட்டங்களில் கலந்து கொண்டு பணம் அனுப்புவது என்பது தடைசெய்யப்பட்டதாகும் என்பதை தெளிவுபடுத்துகிறோம். மேலும் பரிசு திட்டம் போன்ற வேறு பெயர்களில் செயல்படும் திட்டங்கள் அதாவது பணச் சுழற்சி திட்டம் அல்லது பரிசு/விருதுகளைப் பெறும் நோக்கில் பணம் அனுப்புவது போன்றவற்றிற்கும் இத்தகைய தடைகள் பொருந்தும். இவ்விஷயம் குறித்து டிசம்பர் 7, 2007 தேதியிடப்பட்ட ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட பத்திரிகை குறிப்பை (நகல் இணைக்கப்பட்டது) பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். அந்த பத்திரிகை குறிப்பின் கருத்துகளை உங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவும்.
தங்கள் உண்மையுள்ள
(A.K.கெளண்ட்) தலைமைப் பொது மேலாளர
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்