RBI/2007-2008/364
UBD.CO.BPD.(PCB).No.51/09.39.000/2007-08
ஜூன் 12, 2008
தலைமை நிர்வாக அதிகாரிகள்
அனைத்து தொடக்க (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள்
அன்புடையீர்
பார்வை குறைபாடு உடையவருக்கு வங்கி வசதிகள் -
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்
பார்வை குறைபாடு உடையவர்கள் வங்கி வசதிகளைப் பெறுவதில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவது ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தகு வாடிக்கையாளர்கள் சட்டரீதியாக உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ள தகுதியுடையவர்கள். ஆதலால் காசோலை புத்தக வசதி / தானியங்கி பணம் வழங்கு இயந்திரங்களை பயன்படுத்துதல் / பாதுகாப்பு பெட்டக வசதிகள் உட்பட வங்கி வசதிகளை இவர்களுக்கு அளிக்க மறுத்திட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
2. செயல்திறன் குறைபாடு உடையவர்களுக்கான மாண்புமிகு தலைமை ஆணையர் நீதிமன்றம் 2791/2003 எண்ணிடப்பட்ட வழக்கில் 05.09.2005 தேதியிட்ட ஆணைகளை (நகல் இணைக்கப்பட்டுள்ளது) பிறப்பித்துள்ளது. காசோலை புத்தக வசதி / தானியங்கி பணம் வழங்கு இயந்திரங்களை பயன்படுத்துதல் / பாதுகாப்பு பெட்டக வசதிகள் உட்பட வங்கி வசதிகளை பார்வை குறைபாடு உடையவர்களுக்கு அளித்து அவர்கள் பணம் எடுக்கும்பொழுது உதவிட மாண்புமிகு நீதிமன்றம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. காசோலை புத்தக வசதி / தானியங்கி பணம் வழங்கு இயந்திரங்களை பயன்படுத்துதல் / பாதுகாப்பு பெட்டக வசதிகள் ஆகியவற்றை பயன்படுத்தும்பொழுது ஏற்படக்கூடிய இடர்வரவினை கருத்தில்கொண்டு பார்வை குறைபாடு உடையவர்களுக்கு இத்தகு வசதிகளை மறுக்கக்கூடாது ஏனெனில் மற்ற வாடிக்கையாளர்கள் இவற்றை பயன்படுத்தும்பொழுதும் இடர்வரவு ஏற்பட வாய்ப்புண்டு என்று மாண்புமிகு நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட ஆணையின் பத்தி 14-ல் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. ஆகவே காசோலை புத்தக வசதிகள் (மூன்றாம் நபருக்கான காசோலைகள் உட்பட), தானியங்கி பணம் வழங்கு இயந்திரங்களை பயன்படுத்துதல், இணையதள வங்கி வசதி, பாதுகாப்பு பெட்டக வசதிகள், சிறிய கடன் வசதிகள், கடன் அட்டைகள் போன்ற வங்கி வசதிகள் பார்வை குறைப்பாடு உடையவர்களுக்கு எந்தவிதமான பாராபட்சமுமின்றி அளிக்கப்படுவதை வங்கிகள் உறுதிசெய்திடுமாறு அறிவுறுத்தப்படுகின்றன. பார்வை குறைபாடு உடையவர்கள் பல்வேறு வங்கி வசதிகளை பெறுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு வங்கிகள் தங்களின் கிளைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கலாம்.
தங்கள் உண்மையுள்ள
(A.K. Khound)
முதன்மைப் பொது மேலாளர் |