Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (99.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 30/05/2008

அந்நியச் செலாவணி நிர்வாகம் (வைப்பு) விதிகல் 2000 - குடியிருப்போரல்லாதோரின் (அந்நிய) ரூபாய் கணக்குகளுக்கு வரவு வைப்பது

RBI/2007-08/343
A.P.(DIR Series) Circular No.45

                                                               மே 30,2008

அனைத்து வகையிலான –I அங்கீகரிக்கப்பட்ட முகவர் வங்கிகள்
மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள்

அன்புடையீர்

அந்நியச் செலாவணி நிர்வாகம் (வைப்பு) விதிகள் 2000
குடியிருப்போரல்லாதோரின் (அந்நிய) ரூபாய்
கணக்குகளுக்கு வரவு வைப்பது

அந்நியச் செலாவணி நிர்வாக (வைப்பு) விதிகள் 2000 [FEMA 5/2000 RB, 2000  மே 3 தேதியிட்ட ] அவ்வப்போது திருத்தப்படுவது அனுமதிக்கக்கூடிய கடன்களை  குடியிருப்போரல்லாதோரின் (அந்நிய) ரூபாய் கணக்கில் அளிக்கிறது.  இதற்கு அந்நியச் செலாவணி நிர்வாக (வைப்பு) விதிகள் 2000ன் ஷரத்து 1 பத்தி 3ன்மேல் அங்கீகரிக்கப்பட்ட ஈடுபடும் பிரிவு 1 (ஏடி பிரிவு (AD) -I)  வங்கிகளின் கவனம் கோரப்படுகிறது.  மேலும் கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக்குவதற்கு எதிரான (cf.AP(DIR வரிசை ) 2007 அக்டோபர் 17 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 14) முழுஅளவிலான பண மாற்றாளர்கள் (Full Fledged  Money changers –FFMCS) தங்களது அந்நிய பணத்தை இந்திய பணமாக்க மற்றும் 3000 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு ஈடான அளவிற்கு பணம் அளிக்கவும் அனுமதிக்கப்படுகிறது.  3000 அமெரிக்க டாலருக்கும் மேலாக உள்ள தொகையயும், கேட்பு வரைவோலை அல்லது வங்கியாளர் காசோலை மூலமாக அளிக்கப்படவேண்டும்.

2. தாராளமயமாக்கலின் ஒரு நடவடிக்கையாகவும் என்.ஆர்.இ. (NRE-Non Resident External) கணக்குதாரர்களின் நியாயமான தேவைகளுக்காகவும் அந்நிய பணத்தை ரூபாய்களாக்குவதற்கு எதிராக வெளியிடப்படும் கேட்பு வரைவோலை/வங்கியாளர் காசோலைகள் இவற்றிலிருந்து வருபவற்றை குடியிருப்போரல்லாத இந்தியரின் என்.ஆர்.இ. கணக்குகளில் வரவு வைக்க வங்கிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிரது.  இதில் என் ஆர் இ. கணக்குதாரருக்கு அளிக்கப்படும் உபகரணங்களுக்கு ஈடாக  ஏடி பிரிவு -I/ பிரிவு II ஆகியவை வெளியிடும் பணமாக்கும் சான்றிதழ் இருந்திட வேண்டும்.

3. ஏடி பிரிவு -1 வங்கிகள் மற்றும் அதிகாரப்பூர்வ வங்கிகள் இச்சுற்றறிக்கையின் விஷயங்களை தங்களைச் சார்ந்த நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

4. வேறு ஏதேனும் சட்டத்தின்கீழ் ஏதேனும் அனுமதிகள்/அங்கீகாரங்கள் பெற வேண்டியிருந்தால் அதற்கு தடையேதுமின்றி அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம், 1999 (42 of 1999)ன் கீழ் பிரிவு10(4)  மற்றும் 11(1)ன்கீழ்  வெளியிடப்பட்ட இச்சுற்றறிக்கையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

தங்கள் உண்மையுள்ள

(சலீம் கங்காதரன்)
தலைமைப் பொது மேலாளர் – பொறுப்பு

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்