Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (43.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 10/04/2008

1.4.2008 லிருந்து சில வகை வரிசெலுத்துவோர் கட்டாயமாக மின்னணு மூலம் வரிசெலுத்த வேண்டும்.

RBI/2007-08/280
DGBA.GAD.No.H.10875/42.01.038/2007-08

                                                 ஏப்ரல்10, 2008

தலைவர்/நிர்வாக இயக்குநர்/தலைமை நிர்வாக இயக்குநர்
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகளும்
அனைத்து தேசிய வங்கிகள்/ ஆக்ஸிஸ்  வங்கி லிமிடெட்/
எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட்/ஐசிஐசிஐ வங்கி லிமிடெட்/
ஐடிபிஐ லிமிடெட்

அன்புடையீர்,

1.4.2008 லிருந்து சில வகை வரிசெலுத்துவோர் கட்டாயமாக
மின்னணு மூலம் வரிசெலுத்த வேண்டும்.

கீழ்க்கண்ட வகை வரிசெலுத்துவோர் 1.4.2008லிருந்து மின்னணு மூலம் வரிசெலுத்த வேண்டும் என்பது நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தால் தனது 13.3.2008 தேதியிட்ட அறிவிக்கை எண் 34/2008 மூலம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது என்பதனை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.

       அ.    ஒரு நிறுவனம்
       ஆ.    ஒரு தனிநபர் (நிறுவனம் அல்லாத) அவருக்கு பிரிவு 44 AB
              பொருந்தும்.

2. இவ்விஷயத்தில் அரசு அறிக்கை அமலாக்கத்தின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய உத்தரவுகள்:

  1. பெயரிலிருந்தே அனைத்து நிறுவன வரி செலுத்துவோரின் நிலை பற்றி அடையாளங்கண்டிடலாம்.  மேலும் அனைத்து நிறுவன வரி செலுத்துவோரின் நிரந்தர கணக்கு எண்ணின் நான்காவது இலக்கம் “C” என்று இருக்கும்.  அத்தகைய வரி செலுத்துவோரிடமிருந்து ஏட்டு வடிவ சலான்களை, கவுண்டரில் நேரடியாக வாங்க ஒப்புக் கொள்ள முடியாது.
  2. பிரிவு 44 ABயின்கீழ் வரும் வரிகொடுப்பாளர்கள், வங்கி கவுண்டர்களில் ஏட்டுவடிவ சலான்கள் மூலம் வரிகட்ட முற்பட்டால் அதற்கான தகுதிசான்று பற்றி வற்புறுத்தக்கூடாது. மின்னணு செலுத்தும் பொறுப்பு வரி கொடுப்பாளரிடமே பிரதானமாக உள்ளது.  எனவே வரி கொடுப்பாளர்களின் முடிவே இறுதி முடிவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
  3. சம்பந்தப்பட்ட வங்கி மின்னணு செலுத்துதலுக்கான ஒப்புதலை உடனே திரையில் தெரியும்படி செய்யவேண்டும்.
  4. மின்னணு செலுத்துதலின் சங்கேத அடையாளம் வங்கி அளிக்கும் அறிக்கையில் இடம் பெறவேண்டும்.
  5. ஒவ்வொரு வங்கியும் மின்னணு செலுத்தும் நுழைவாயில் பக்கத்தை தெளிவாக முன்னிருத்தி காட்ட வேண்டும்; செலுத்தும்பொழுது ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், வரி செலுத்துபவர் சந்திக்க வேண்டிய அதிகாரி, மின்னணு பரிமாற்றம் முடிந்துவிட்டது பணம் கட்டிய அடையாளத்தின் மறுபாதியை உருவாக்குதல் போன்றவை அதில் காட்டப்படவேண்டும்.
  6. ஒவ்வொரு வங்கியும் வருமான வரித்துறை (ITD-Income Tax Department)  மற்றும் தேசிய பத்திரங்கள் வைப்புக் கழகம் (NSDL-National Securities Depository Ltd) இவற்றிற்கு அதிகாரிகளின் தொடர்பு விவரங்கள் பற்றிய பட்டியல் அளிக்கப்படவேண்டும், ஏனெனில் ஏதேனும் பிரச்சனை ஏற்படும்போது ITDயோ அல்லது வரி செலுத்துபவரோ தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.

3. உங்களுடைய சம்பந்தப்பட்ட கிளைகளுக்கு தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்84019 கலாம்.

தங்கள் உண்மையுள்ள

(M.T. வர்கீஸ்)
பொது மேலாளர்.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்