Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (63.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 10/03/2008

தானியிங்கி பணம் வழங்கு இயந்திரத்தின் மூலமாக பணம் பெறுதல் மற்றும் இருப்பு நிலை தகவல் தேவைகளுக்கு உரித்தான வாடிக்கையாளர் கட்டணங்கள்

RBI/2007-2008/260
DPSS.No.1405/02.10.02/2007-08

                        மார்ச் 10, 2008

தலைவர்/தலைமை நிர்வாக அதிகாரி
அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
வட்டார கிராமிய வங்கிகள் உட்பட

அன்புடையீர்,

தானியிங்கி பணம் வழங்கு இயந்திரத்தின் மூலமாக பணம் பெறுதல் மற்றும் இருப்பு நிலை தகவல் தேவைகளுக்கு உரித்தான
வாடிக்கையாளர் கட்டணங்கள்

இந்தியாவில் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு ஒரு முக்கிய வாயிலாக தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் (ATM – Automated Teller Machines) மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.  தங்களது ஆற்றல் எல்லையை அதிகரிக்க வங்கிகள் ஏடிஎம்(ATM)களை நிறுவுகின்றன.  ஏடிஎம்(ATM)கள், பல்வேறு வங்கி பரிமாற்ற வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்தாலும், பணம் எடுத்தல் மற்றும் இருப்பு நிலை பற்றி தகவல் தருவதும் முக்கிய சேவையாக கொண்டுள்ளது.  2007 டிசம்பர் கணக்கின்படி இந்தியாவில் 32,342 ஏடிஎம்(ATM)கள் நிறுவப்பட்டுள்ளன.  பெரிய வங்கிகள், தங்கள் கிளைகள் பரவுவதற்கு ஈடாக அதிக அளவில் ஏடிஎம்(ATM)களை நிறுவுகின்றன.  அதிக வாடிக்கையாளர்கள் உள்ள மற்றும் நல்ல உபயோகம் உள்ள இடங்களில் பெரும்பாலான வங்கிகள் ஏடிஎம்(ATM)களை நிறுவும் இடங்களாக தேர்ந்தெடுக்கின்றன.  ஒரு வழங்கும் வாயிலாக ஏடிஎம்(ATM)களின் உபயோகத்தை அதிகரிப்பதற்காக வங்கிகள் இருபக்க மற்றும் பலபக்க ஏற்பாடுகளை மற்ற வங்கிகளுடன் செய்து கொண்டு, அதன் மூலம் வங்கிகளிடையே ஏடிஎம்(ATM) வலைப்பின்னலை ஏற்படுத்துகின்றன.

2.  வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலாக்கப்படும் கட்டணங்கள், வங்கிக்கு வங்கி அவர்கள் பயன்படுத்தும் ஏடிஎம் வலைப்பின்னலுக்கு ஏற்றவாறு வேறுபடும்.    இதனால் ஒரு வாடிக்கையாளர் வேறொரு வங்கியின் ஏடிஎம்(ATM)ஐ பயன்படுத்தினால் அந்த ஒரு ஏடிஎம்(ATM) பரிவர்த்தனைக்கு எவ்வளவு கட்டணம் என்பதை முன்பே அறிய முடிவதில்லை.  இதனால் மற்ற வங்கிகளின் ஏடிஎம்(ATM)க்களை ஒரு வாடிக்கையாளர் பயன்படுத்துவதற்கான ஊக்கத்தைக் குறைக்கிறது.  எனவே ஒளிவுமறைவற்றத் தன்மையை உறுதிப்படுத்துவது அவசியமாகிறது.

3. சர்வதேச அனுபவம் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் நாட்டிலுள்ள அனைத்து ஏடிஎம்(ATM)களிலும் இலவசமாக பரிவர்த்தனை செய்யமுடியும்.  எனினும் வெள்ளை அடையாளச்சீட்டு கொண்ட ஏடிஎம்(ATM)கள் அல்லது வங்கிசாரா அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் ஏடிஎம்களில் கட்டணமின்றி முடியாது. பொதுக் கொள்கை கண்ணோட்டத்தில், சர்வதேச அளவில் ஒழுங்குபடுத்துபவர் மூலம் கட்டண வடிவமைப்பை ஒழுங்குபடுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.  மிக நல்லதொரு சூழல் என்றால், நாட்டில் நிறுவப்பட்ட எந்த ஒரு ஏடிஎம்.மிலும் வாடிக்கையாளர் அணுகி கட்டணமின்றிப் பயன்படுத்திட வங்கிகள் சமமான ஒத்துழைப்புடன் கூடிய முன்முயற்சி மூலம் நடந்திட வேண்டும்.

4. இதன் விளைவாக, ரிசர்வ் வங்கி தனது இணையதளத்தில் ஒரு அணுகவேண்டிய அறிக்கையை அளித்து பொதுமக்களிடமிருந்து விமர்சனங்களை வரவேற்றது. பெறப்பட்ட விமர்சனங்கள் பரிசீலிக்கப் பட்டன. அளிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் சேவைக் கட்டணங்கள் அனைத்து வங்கிகளாலும் கீழ்க்கண்டவாறு அமலாக்கப்படும்.

வ. எண்

சேவை

கட்டணங்கள்

1.

அந்தந்த வங்கிகளின் ஏடிஎம்(ATM)இல் எந்த சேவையை பயன் படுத்தினாலும்
 

இலவசம் (உடனடியாக)     

2.

மற்ற வங்கி ஏடிஎம்(ATM)களில் இருப்பு நிலை பற்றிக்கேட்கும் பொழுது

இலவசம் (உடனடியாக)     

3.

மற்ற வங்கி ஏடிஎம்(ATM)களிலிருந்து பணம் எடுத்தால்     

  • ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20க்கு மேல் வசூலிக்கும் வங்கிகள், இனிமேல் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20க்கு மிகாமல் குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • 2009 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும்.

5.  மேலே குறிப்பிடப்பட்டுள்ள சேவைகள் (1) மற்றும் (2) ஆகியவற்றிற்கு வாடிக்கையாளரிடம் எந்த ஒரு தலைப்பின்கீழும் கட்டணம் வசூலிக்கப் படாது.  சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

6. மேலே குறிப்பிடப்பட்டுள்ள சேவை (3) ற்கு கட்டணம் ரூ.20/- குறிப்பிடப் பட்டது அனைத்தையும் உள்ளடக்கியதாகும் மற்றும் எவ்வளவு தொகை எடுத்தாலும் வேறு எந்த கட்டணங்களும் வாடிக்கையாளர்கள்மீது விதிக்கப் பட மாட்டாது.

7. கீழ்க்கண்ட வகையில் பணம் எடுக்கும் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் தாங்களாகவே சேவை கட்டணங்களை நிர்ணயித்துக் கொண்டுள்ளன.

அ. கடன் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் எடுப்பது
ஆ. வெளிநாட்டில் உள்ள ஏடிஎம்.களில் இருந்து பணம் எடுப்பது

8. தங்களது மண்டல அலுவலகத்தில் இந்த சுற்றறிக்கையைப் பெற்றதற்கான ஒப்புதலை தெரிவிக்கவும்.

தங்களது உண்மையுள்ள

(அருண் பஸ்ரிகா)
பொது மேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்