Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (136.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 27/02/2008

6.5% சேமிப்பு பத்திரங்கள் (2003) (வரி விதிக்கப்படாத) திருப்பித்தருதல்

RBI Circular No.249/2007-08
Ref.DGBA.CDD.No.H.9362/13.04.137/2007-08  

 பிப்ரவரி 27, 2008
பாந்ரா 8, 1929(S)

பொது மேலாளர்
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் கூட்டாளி வங்கிகள்
மற்றும் 17 தேசிய வங்கிகள்
ஐசிஐசிஐ வங்கி லிமிடெட்/ஐடிபிஐ லிமிடெட்
எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட்/ஆக்ஸிஸ் வங்கி லிமிடெட்
மற்றும் எஸ்எச்சிஐஎல்

அன்புடையீர்,

6.5% சேமிப்பு பத்திரங்கள்  (2003) (வரி விதிக்கப்படாத) திருப்பித்தருதல்

மார்ச் 15, 2003 தேதியிட்ட  6.5% சேமிப்பு பத்திரங்கள் (2003) (வரி விதிக்கப் படாத) கடன் சுற்றறிக்கை எண் CO.DT.13.01.298/H-3566/2002-03 குறித்த சுற்றறிக்கையைப் பார்க்கவும்.  மார்ச் 15, 2003 தேதியிட்ட  அரசு அறிவிப்பு எண்.F.4(9) W&M/2003ல் காணப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வெளியிடப் பட்ட மேற்படி பத்திரங்கள் அந்தந்த முதலீடுகளின் தேதியைப் பொறுத்து மார்ச் 24, 2008  முதல் திருப்பி அளிக்க முதிர்வடைந்திடும்.  இந்திய அரசின், நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை, புதுதில்லி வெளியிட்ட  22 பிப்ரவரி 2008 தேதியிட்ட பத்திரிகை வெளியீடு தகவலுக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.  பத்திரப்பதிவேட்டுக் கணக்கில் வைக்கப்பட்டுள்ள பத்திரங்களின் முதிர்வுத் தொகையை திருப்பித்தருதல் தொடர்பாக முகவர் வங்கிகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய பொதுவான செயல்முறை பின்வருமாறு:

  1. முதலீட்டாளருக்கு தகவல் தருவது:  பத்திரப்பதிவேட்டுக் கணக்கில் வைக்கப்பட்டுள்ள பத்திரங்களின் வரவிருக்கும் முதிர்வுத் தேதி குறித்த தகவலை முதலீட்டாளருக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பிற்சேர்க்கை (1)ல் (நகல் இணைக்கப்பட்டுள்ளது) காணப்பட்டுள்ள படிவத்தில் அனுப்பி பத்திர முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கலாம்.  இத்தகு தகவல்கள் பதிவு அஞ்சல்/விரைவு அஞ்சலில் அனுப்பப் படலாம். நிறுத்த குறிப்புகள் இல்லாத பத்திரப்பதிவேட்டு முதலீடுகளுக்கு மட்டுமே இத்தகு தகவல் அனுப்பப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

  2. முதிர்வுக்குப் பின்னர் வட்டி: முன்னரே குறிப்பிட்ட மார்ச் 15, 2003 தேதியிட்ட  சுற்றறிக்கையின் பத்தி 15ல் குறிப்பிட்டபடி வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் பத்திரங்கள் முதிர்வடைந்து திருப்பித் தரப்படும்.  அந்தப் பத்திரங்களின் முதிர்வுத் தேதிக்குப் பின்னர் பத்திரத்தின் எந்த வட்டியும் சேராது.  ஆகவே இத்தகு முதலீடுகளின் முதிர்வுக்குப் பின்னர் வட்டி கிடையாது என்பதை இந்த தகவல் கடிதங்களில் தனியாகத் தெளிவாகக் குறிப்பிடுதல் அவசியம்.

  3. முதலீட்டாளர்கள் பத்திரங்கள் மீதான பொறுப்பினை முடித்து அனுப்புதல்:
      1. அரசுப் பத்திரங்களின் விதிகள் 2007   பிரிவு 24(2)(b) (நகல் எங்களின்  டிசம்பர் 7, 2007 தேதியிட்ட DGBA.CDD.No.H.6298/11.29.002/2007-08  கடிதத்தின் மூலம் உங்களுக்கு அனுப்பப்படுகிறது)யின்படி, பத்திரப்பதிவேட்டுக் கணக்கில் ஒரு முதலீட்டாளர்  வைத்துள்ள பத்திரங்கள் முதிர்வுத் தொகை அவருக்கு கொடுப்பு ஆணை மூலமாகவோ அல்லது ‘வங்கிக் கணக்கில் மின்னணு நிதிமாற்றம் மூலமாகவோ அளிக்கப்படும்.  இதன்பொருட்டு விதிகள் 24(2)(d)ன்கீழ் பத்திர முதலீட்டாளர்கள் தங்களின் வங்கிக்கணக்கு விபரங்களை முகவர் வங்கிகளிடம் அளித்திட வேண்டும்.  இதனால் முதலீட்டாளர் பிற்ச்சேர்க்கை (1)ஐ  சமர்ப்பித்து பத்திரங்களின் மதிப்பை முதிர்வின்போது திருப்பிக்கோரும் தேவையின்றி முதிர்வுத் தேதியில், முகவர் வங்கிகள் தாமாகவே முதிர்வடைந்த பத்திரங்களின் மதிப்பை வங்கிக்கணக்கில் வரவு வைத்து பின்னர் அதற்கான தகவலையும் அனுப்பிடமுடியும்.  இவ்வாறு தாமாகவே பத்திரப்பதிவேட்டுக் கணக்கிலுள்ள பத்திரங்களின் முதிர்வு மதிப்பை பத்திர முதலீட்டாளர் வங்கிக்கணக்கில் வரவு வைத்திட வசதியாக தேவையான தகவல்களுடன் வங்கிக்கணக்கில் மின்னணு முறையில் வரவு வைத்திட ஒரு ஆணையைப் பெற்றிட வேண்டும்.  இத்தகைய ஆணை இல்லாதபட்சத்தில் இதுவரை செய்ததுபோல் பிற்சேர்க்கை 1A யில் பொறுப்பு முடித்த ரசீதைப் பெறலாம்.  அதன்பேரில் பணத்தை முதலீட்டாளருக்குத் திருப்பித் தரலாம்.  முதிர்வுத் தகவல் கடிதம் (பிற்சேர்க்கை   1) மேற்குறிப்பிட்ட மாற்றத்தை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  முதலீட்டாளருக்கு அனுப்ப வேண்டிய தகவல் கடிதம் மற்றும் ஆணையின் படிவங்களின் நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

      2. நிரந்தரக் கணக்கு எண், GIR எண் இவையிரண்டும் இல்லாதபட்சத்தில் படிவம் 60இல் திரும்பப் பெறும் பணத்தின் மதிப்பு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமானால்

4. முதலீட்டாளருக்கு பணம் அளித்தல்

      1. பிற்சேர்க்கை 1Aன்படி முதிர்வுக்கு முன்னரே ரசீது பெறப்பட்டாலும் பத்திரங்களுக்கான முதிர்வுத் தொகை முதிர்வுத் தேதியில்தான் அளிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்திட வேண்டும்.  அதே போன்று மின்னணு முறையில் பணம் அளிக்கப்படும்போது, முதலீட்டாளரின் வங்கிக்கணக்கு முதிர்வுத் தேதியன்றுதான் (அதற்கு முன்பாகக் கூடாது) வரவு வைக்கப்பட வேண்டும்.  முதிர்வுத் தேதி மாற்று முறிச்சட்டம் 1981ன்கீழ் மாநில அரசால் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுவிட்டாலோ அல்லது ஞாயிறுக்கிழமை போன்ற விடுமுறை நாளாக அமைந்துவிட்டாலோ முதிர்வுத் தொகையை அதற்கு முதல் நாளே அளிக்கலாம்.

      2. பத்திரப்பதிவேட்டுக் கணக்கை வைத்திருக்கும் வங்கிக்கிளையே பத்திரங்களின் முதிர்வுத்தொகையை வழங்கவேண்டும்.  முதலீட்டுப் பத்திரங்களின் முடிவடைந்த தேதிகள், தொகை ஆகியவை பத்திரப்பதிவேட்டில் தவறாமல் உரிய மேற்பாரிவையிடும் அதிகாரிகளின் கையொப்பத்துடன் உறுதிப் படுத்தப்பட்டு குறிப்பிடப்படவேண்டும்.

      3. ஒரே பத்திரப்பதிவேட்டுக் கணக்கில் பல்வேறு முதலீடுகள் செய்யப்பட்டால் ஒவ்வொரு முதலீடு திருப்பி அளிக்கப்படும் போதும் அது அந்த பதிவேட்டுக் கணக்கில் காட்டப்பட்டு, அவரது மொத்த முதலீடுகள் ஒவ்வொரு முதலீட்டு வகை குறித்த முதிர்வு தேதி, தொகை இவற்றோடு பத்திரப்பதிவேட்டு எண் குறிப்பிடப்பட்டு, புதிய முதலீட்டுத் தகவல் அறிக்கை தரப்பட வேண்டும்.  பத்திரப்பதிவேட்டில் காணப்படும் நிலுவை முதலீட்டுத் தொகை அறிக்கையில் காட்டப்படும் மொத்த நிலுவை இரண்டும் ஒன்றாக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

5. கொடுப்பாணை அளித்தல்:   முதலீட்டாளருக்கு கொடுப்பாணைகள் மூலம் பணம் அளிக்கப்படுமானால் அத்தகு கொடுப்பாணைகள் முதலீட்டாளருக்கு அளிக்கப்பட முதிர்வுத்தேதிக்கு முன்னதாகவே தயார் நிலையில் வைக்கப்படவேண்டும்.  தபாலில் அனுப்பப்படும்பட்சத்தில் அவர்களுக்கு 1 நாள் முன்னதாகவும் ஒருவேளை முதலீட்டாளர் முதியவரானால் 3 நாட்களுக்கு முன்னதாகவே சென்று சேரும்படி பதிவு/ விரைவு தபாலில் அனுப்பப்பட வேண்டும்.

6. வட்டி அனுப்புதல்:  “திரளாத” முதலீட்டுத் திட்டங்களில் ஒருவர் பத்திரப்பதிவேட்டுக் கணக்கில் முதலீடு செய்திருந்தால் கடைசி ‘விடுபட்ட’ காலத்திற்கு உரிய வட்டி அசலுடன் சேர்த்து தரப்படும்.  இத்தகு முதலீடுகளுக்குரிய வட்டிக்கான அந்த குறிப்பிட்ட நபர் முதலீட்டுப் பணத்தை திரும்பப் பெற ரசீது படிவத்தை முதிர்வு தேதியின் போது அளித்திராதபோதும், ‘வட்டி பற்றாணைகள்’ முதிர்வு தேதியில் அனுப்பப்பட வேண்டும்.  இவ்வாறு வட்டிபற்றாணைகள் முதலீட்டாளருக்கு அனுப்பும்போது அதனுடன் அனுப்பப்படும் கடிதத்தில் அவருடைய முதலீடு குறிப்பிட்ட தேதியில் முதிர்வடைந்து விட்ட தகவலை குறிப்பிடவேண்டும்.  முதலீட்டாளருக்கு அனுப்பப்படும்  எல்லா கடிதங்களிலும் “முதலீட்டின் மீது ......... தேதி (முதிர்வு தேதி) யிலிருந்து வட்டி “சேகரம் ஆகாது” என்கிற முக்கிய வாசகம் தவறாமல் இடம்பெற வேண்டும்.

7.கணக்கிடுதல்:  அசலும் வட்டியும் தனித்தனியே கணக்கில் காட்டப்பட்டு, தொகை காட்டப்பட்டு ஆவணப்பதிவுகளாக வைக்கப்பட வேண்டும்.  அவ்வப்போது வெளியிடப்படும் நடைமுறையிலுள்ள அறிவுறுத்தல்களின்படி தணிக்கை/சோதனைகளுக்காக இந்த கணக்குகள் தயாரித்து பதிவு செய்து வைக்கப்பட வேண்டும்.

8.  இந்திய அரசிற்கு அறிக்கை அளித்தல்:  நியமிக்கப்பட்ட வங்கிக் கிளைகள் தங்களின் பத்திரப்பதிவேட்டுக் கணக்கில் உள்ள முதலீடுகளில் முதிர்வில் திருப்பிப் பணம் அளிக்கப்பட்டவை மற்றும் நிலுவையிலிருப்பவை குறித்த அறிக்கையை, மாதவாரியாக புதுதில்லியில் உள்ள நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறைக்கு, கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு அந்த வங்கிகளின் தொடர்பு அலுவலகம் மூலம் அனுப்பிடவேண்டும்.  அசல், வட்டிக்கான தொகைப் பட்டியல் தனித்தனியே (MOP யின் பிற்சேர்க்கை    XI மற்றும் XIIன்படி) தயாரிக்கப்படவேண்டும்.

9. செயல்பாட்டு எல்லையிலுள்ள பொதுக்கடன் அலுவலகத்திற்கு அறிக்கை அளித்தல்:  வங்கிகளின் தத்தம் செயல்பாட்டு எல்லையிலுள்ள பொதுக்கடன் அலுவலகத்திற்கு இணைப்பு IVல் பகுதி  Dயில் காட்டப்பட்டு உள்ளபடி தகவல்களைத் தவறாமல் மாதந்தோறும் அறிக்கையில் அளிக்க வேண்டும்.  இவற்றோடு கூடவே    MOPயின் இணைப்பு  XIIல் காட்டப்பட்டு உள்ளபடி அசல், வட்டிக்கு தனித்தனியே தொகைப் பட்டியலைத் தயாரித்து அதனுடனே அனுப்பிடவேண்டும்.

10.நாக்பூர், மத்திய கணக்குப் பிரிவு – செலவு ஈடு செய்தல்: முகவரி வங்கிகள் தாங்கள் வழங்கிய கொடுப்புகளைப் பொறுத்தவரை கொடுப்பு ஒப்பந்தத்தின் பத்தி 1.14 மற்றும் 1.18ல் கண்டுள்ளபடி ஈடுசெய்து பெற்றுக் கொள்ளலாம்.  அசலுக்கும் வட்டிக்கும் தனித்தனியே தொகைப் பட்டியல்களைத் தயார் செய்து தங்களின் தொடர்பு மையங்கள் மூலம் நாக்பூரில் உள்ள மத்திய கணக்குப் பிரிவுக்கு வழக்கப்படி அனுப்பலாம். ஆனால் ‘இவ்வாறு கோரப்படும்’ தொகைக் கணக்குள் உள்ளக தணிக்கையாளர் அல்லது உடன் நிகழ் தணிக்கையாளரால் 100% முழுவதும் சோதிக்கப்பட்டு அந்த தொகை முதலீட்டாளருக்கு அளிக்கப்பட்டது  உறுதிப்படுத்தப்பட்டு அதற்கான சான்றிதழ் அளிக்கப் படவேண்டும்.

11.ஆவணப் பதிவுகள் பாதுகாப்பு: ஆவணப் பதிவுகளைப் பாதுகாப்பது குறித்த கொடுப்பு குறித்த ஒப்பந்தத்தின் பத்தி 1.22ல் உள்ள அறிவுறுத்தல்கள் நுட்பமாகப் பின்பற்றப்படவேண்டும்.

12. நியமிக்கப்பட்ட வங்கிகளுக்கு அறிவுரை: பெருபாலான வங்கிக்கிளைகள் தங்களின் செயல்பாடுகளை முழுவதுமாக கணினி வழியே ஆற்றி வருகின்றன.  ஆகவே மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை செயல்படுத்திட தேவையான முறைமை மாற்றங்களை முன்கூட்டியே செய்து, இதனால் நடைமுறையில் எந்த சிக்கல்களும் நேராவண்ணம் தடுப்பதோடு, முதலீட்டாளர்களுக்கு நல்ல முறையில் சேவைகள் செய்திட முடியும்.  இந்த சுற்றறிக்கையின் கருத்துகள் உடனடியாக உரிய (நியமிக்கப்பட்ட) வங்கிக்கிளையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

13. மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்கள் எடுத்துக்காட்டாக சொல்லப் பட்டவையே அன்றி முழுமையானவை என்று கருதப்பட முடியாது.  ஆகவே அவைகள் கொடுப்பு ஒப்பந்தம், அரசுப்பத்திரங்கள் 2006, அரசு பத்திர விதிமுறைகள் 2007 ஆகியவற்றோடு சேர்ந்து படித்து கருத்தில் கொள்ள வேண்டும்.  இதில் ஏதாவது குறிப்பிட்ட சந்தேகங்கள் கேள்விகள் இருந்தால், நியமிக்கப்பட்ட வங்கிகள்/கிளைகள் தங்களின் செயல்பாட்டு எல்லைக்குரிய பொதுக்கடன் அலுவலகத்தை அணுகலாம்.

14. பெறுதலுக்கு ஒப்புதல் அளிப்பதோடு, இவற்றைக் கடைப்பிடிப்பதை கண்காணிக்கவும்.

 

தங்கள் உண்மையுள்ள

(டாக்டர்.K.பாலு)
துணைப் பொது மேலாளர்.


பிற்சேர்க்கை

Ref.No. ……………………………….                                                       தேதி:

பெறுநர்:

(முதலீட்டாளரின் பெயர் மற்றும் முகவரி)

அன்புடையீர்,

6.5% சேமிப்பு பத்திரங்கள்  (2003) (வரி விதிக்கப்படாத) திருப்பித்தருதல்

நீங்கள் செய்த முதலீடுகள் கீழ்க்குறிப்பிட்ட திட்டங்களில் பின்வரும் வகையில் முதிர்வடைந்துள்ளன என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.

பத்திரப் பதிவேட்டு கணக்கு எண்   

முதலீட்டுத் தேதி  

முதிர்வுத் தேதி  

அசல்

வட்டி 

மொத்தத் தொகை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மொத்தம்

 

2. அரசுப் பத்திரங்களின் விதிமுறைகள் 2007ன்படி, வங்கிக் கணக்குத் தகவல்களை முதலீட்டாளர்கள் முன்னமே அளித்திருந்தால், மேற்குறிப்பிட்ட முதலீடுகள் தாமாகவே முதிர்வுக்குப் பின்னர் திருப்பி அளிக்கப்படும்.  இதன் பொருட்டு  மின்னணு முறையில் முதிர்வுத் தேதியன்று உங்களின் வங்கிக் கண்க்குகளில் வரவு வைக்கப்படும்.  முதிர்வுப் பணத்தைப் பெற தனியாக விண்ணப்பமோ/ரசீதோ அல்லது பத்திரப்பதிவேட்டு கணக்கின் மூலப்படிவத்தை அளிக்க வேண்டிய நிர்பந்தமோ அப்போது கிடையாது.

3. வங்கிக் கணக்குத் தகவல்களை முதலீட்டாளர்கள் சமர்ப்பிக்காதபட்சத்தில் இத்துடன் இணைக்கப்பட்ட கட்டளை உரிமைப் படிவத்தில் அவற்றை அளித்து தேவைப்படும் இடங்களில் வங்கியின் சான்றுடன் அதனை அளிக்கவும்.

4. வங்கிக்கணக்கு குறித்த தகவல்களை கட்டளை உரிமைப்படிவத்தில் தராவிட்டால், அவர்கள் இந்த தகவல்களை பிற்சேர்க்கை 1Aயில் பூர்த்தி செய்து அவற்றோடு ரெவின்யூ ஸ்டாம்ப் (அதற்குரிய இடத்தில்) ஒட்டிய ரசீதுடன் அளித்தால் கொடுப்பாணை அளிப்பதில் எங்களுக்கு அது உதவியாக இருக்கும்.

5. ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக முதிர்வுத் தொகையை ஒரு முதலீட்டாளர் பெறும்போது நடப்பிலிருக்கும் அறிவுறுத்தல்களின்பதி அவர் PAN/GIR எண் (அவையில்லாதபட்சத்தில் படிவம் 60ல் உறுதிமொழி) பற்றி தகவல் அளிக்க வேண்டும்.

6. பிப்ரவரி 28, 2003 தேதியிட்ட F 4(5)- W&M/2002 எண்ணிட்ட அரசின் அறிக்கையின்படி மேற்குறிப்பிட்டபடி முதலீடுகளில் “முதிர்வுத் தேதிக்குப் பின்னர் முதலீட்டில் வட்டி வருவாய் கிடைக்காது”.

7. தேவைப்படும் தகவல்/படிவம் ஆகியவற்றை 20 நாட்களுக்கு முன்னராகவே அளித்தால், உங்களுக்கு முதிர்வுத் தேதியன்றே முதலீட்டுப் பணம் திருப்பி அளிக்கப்படும்.

 

தங்கள் உண்மையுள்ள

கையொப்பம்
(பெயர்  மற்றும் பதவி)


பிற்சேர்க்கை 1(A)

அனுப்புநர்

பெறுநர்

வங்கிக்கிளை மேலாளர்

அன்புடையீர்,

6.5% சேமிப்பு பத்திரங்கள்  (2003) (வரி விதிக்கப்படாத) திருப்பித்தருதல்

நான்/நாங்கள் கீழ்க்கண்ட எனது/எங்களின் பத்திரப் பதிவேட்டு கணக்கில் 6.5% சேமிப்பு பத்திரங்கள்  திட்டம் 2003ன்படி உள்ள முதலீடுகளுக்கான முதிர்வுத் தொகையை கொடுப்பாணைமூலம் அளிக்குமாறு வேண்டுகிறேன்/றோம்.

பத்திரப் பதிவேட்டு கணக்கு எண்  

முதலீட்டுத் தேதி 

முதிர்வுத் தேதி 

அசல்

வட்டி

மொத்தத் தொகை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மொத்தம்

 

தங்களின் உண்மையுள்ள

கையொப்பம்/ப்பங்கள்

பெயர்/கள்

  • எனது/எங்களின் கொடுப்பாணை/களை தபால்/குரியர் சேவை மூலம் எனது பொறுப்பில் அனுப்பலாம். அதை என்/எங்கள் வீட்டிலுள்ள யாரிடம் நான்/நாங்கள் இல்லாதபட்சத்தில் கொடுக்கலாம்.
  • தேவையில்லாவிடில் இதை கோடிட்டு ரத்து செய்யலாம்.

ரசீது

6.5% சேமிப்பு பத்திரங்கள் 2003யில் ................ எனது/எங்களது பத்திரப் பதிவேட்டு கணக்கில் கீழ்க்குறிப்பிட்டபடி உள்ள முதலீடுகளின் அசல் மற்றும் அதில் சேகரமான வட்டியுடன் சேர்த்து ரூ.................(ரூபாய்.............................) (நியமிக்கப்பட்ட வங்கி/கிளையின் பெயர்) யிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.

எண்                            பெயர்                                     நிரந்தரக் கணக்கு எண்
                                                                        (தொகை ரூ.1லட்சத்திற்கு மேலானால்)

1.

2.
3.

 

ரெவின்யூ ஸ்டாம்ப்

இடம்:
தேதி:


மின்னணு தீர்வு சேவை (வரவுதீர்வு) கட்டளை உரிமைப்படிவம்

(முதலீட்டின் முதிர்வு தொகை/வட்டித் தொகையை வரவுத்தீர்வு முறைமை மூலம் பெறும் விருப்பத்தேர்வு)

1. முதலீட்டாளர்/களின் பெயர்/பெயர்கள்:

2. உறுப்பினர் அடையாள எண்/    பத்திரப் பதிவேட்டு கணக்கு                 :

3. வங்கிக் கணக்கு குறித்த தகவல்கள்

A.        வங்கியின் பெயர்                              :
B.        வங்கிக்கிளை                                     :
            முகவரி                                               :
            தொலைபேசி எண்                           :
C.        வங்கிக்கிளையின் 9 இலக்க குறியீட்டு எண்:
            (MICR காசோலையில் உள்ளபடி)
D.        வங்கிக்கணக்கின் வகை (சேமிப்பு/நடப்பு/ ரொக்கக்கடன் கணக்கு)
              கணக்கு குறியீட்டு எண்                :
E.        பதிவேட்டு/பதிவேட்டு பக்க எண்ணுடன்:

F.         வங்கிக்கணக்கு எண்(காசோலைப் புத்தகத்தில் உள்ளபடி):

(கீழ்க்குறிப்பிட்டபடி, வங்கியிலிருந்து சான்றிதழ் பெறமுடியாதபட்சத்தில், கோடிட்டு ரத்துசெய்யப்பட்ட எழுதப்படாத காசோலை அல்லது அதன் நகல் அல்லது சேமிப்புக் கணக்குப் புத்தகத்தில் முதல்பக்க நகல் ஆகியவற்றை உங்களின் வங்கிக்கணக்கு குறித்த தகவல்களை சரிபார்க்கும் பொருட்டு சமர்ப்பிக்கலாம்)

செயல்படுத்தப்படும் தேதி

4. மேற்குறிப்பிட்ட தகவல் உண்மையானவை மற்றும் முழுமையானவை என்று நான் உறுதியளிக்கிறேன்.  நான் அளித்த தகவல்கள் சரியாக /முழுமையாக இல்லாத காரணத்தால் வங்கியின் பரிவர்த்தனை நடத்தப்பட முடியாமல் போனாலோ அல்லது தாமதமானாலோ அதற்கு நான் அந்த செயல்பாட்டு நிறுவனத்தை பொறுப்பாளியாக்க மாட்டேன்.  எனக்கு அளிக்கப்பட்ட விருப்பத் தேர்வு கடிதத்தை படித்தேன்.  அதிலுள்ளபடி என்னிடம் எதிர்பார்க்கப்படும் பொறுப்பை இத்திட்டத்தின் பங்கேற்பாளர் என்ற முறையில் நிறைவேற்றுவேன்.

தேதி: 

..........................
முதலீட்டாளர்கையொப்பம்

.................................................................................................
எங்களின் பதிவு ஆவணங்களில் கண்டுள்ளபடி மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியானவை என்று உறுதியளிக்கிறேன்.

வங்கியின் முத்திரை தேதி

................
(வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி)

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்