RBI/2007-08/128
DBOD.No.Leg.BC.30/09.07.05/2007-08
செப்டெம்பர் 3, 2007
அனைத்து
பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய கிராம வங்கிகள் நீங்கலாக)
அன்புடையீர்
கிளை
அளவிலான வாடிக்கையாளர் சேவை குழுக்கள்
வங்கிகளிலுள்ள வாடிக்கையாளர் சேவை பற்றிய செயற்குழுவின் (தல்வார் குழு) 172 எண்
பரிந்துரைப்படி, வங்கிகள் கிளை அளவில் வாடிக்கையாளர் சேவை குழுக்களை ஏற்படுத்திட
அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை பற்றிய குழுவின்
(கோய்போரியா குழு) 3.68 எண் பரிந்துரைப்படி வங்கிகள், கிளை அளவிலான வாடிக்கையாளர்
சேவைக் குழுக்களை புதுப்பித்திட அறிவுறுத்தப்பட்டன. எனினும் அறியப்படுவது
என்னவென்றால் அத்தகைய குழுக்கள் இல்லை அல்லது செயல்படாமல் இருக்கின்றன.
2.
கிளை அளவில் வங்கிக்கும், வாடிக்கையாளர்-களுக்குமிடையே முறையான தகவல் தொடர்பை
ஊக்குவிக்க, வாடிக்கையாளர்களின் அதிக பங்களிப்போடு கிளை அளவிலான குழுக்களை
வலுப்படுத்திட வங்கிகள், தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
வாடிக்கையாளர்களையும் உள்ளடக்கிய கிளை அளவிலான குழுக்கள் அமைப்பது நல்லது. மேலும்,
மூத்த குடிமக்கள், சாதாரணமாக ஒரு வங்கியில் ஒரு முக்கிய பிரிவாக இருப்பதால், ஒரு
மூத்த குடிமகனையும் சேர்த்துக் கொள்ளலாம்.
3.
கிளை அளவிலான குழுக்கள், வாடிக்கையாளர் சேவைக்கான நிலைக்குழுவிடம் காலாண்டு
அறிக்கைகளை அளித்து, அதன் மூலம் தேவையான ஆலோசனைகள் மற்றும் உள்ளீடுகளை வழங்கி அதன்
மூலம், வாடிக்கையாளர் சேவைக்கான நிலைக்குழு அவற்றை பரிசீலித்து வாடிக்கையாளர்
சேவைக் குழுவின் வாரியத்திடம் தேவையான கொள்கை / நடைமுறை நடவடிக்கைக்காகவும்
கொடுக்கலாம். கிளை அளவிலான வாடிக்கையாளர் சேவைக் குழு மாதம் ஒருமுறை கூடி,
வாடிக்கையாளர் மற்றும் குழுவின் அங்கத்தினர்களிடம் புகார்களை ஆராய, ஆலோசனைகள்,
தாமதமாகும் விதங்கள், எதிர்கொள்ளும் தொல்லைகள் இவைகள் பற்றி விவாதிக்கின்றன.
உங்கள்
உண்மைக்குரிய
(பிரஷாந்த் சரன்)
தலைமைப்
பொது மேலாளர்-பொறுப்பு |