Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (47.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 30/08/2007

காணாமல் போகும் சந்தாதாரர்களுக்கு பி.பி.எப். தீர்வு செய்வது

RBI/2007-2008/125

DGBA.CDD.H-2281/15.02.001/2007-08                                                  ஆகஸ்ட் 30, 2007

 

பெறுநர்

 

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் / நிர்வாக இயக்குனர்

அரசு கணக்குத் துறை, தலைமை அலுவலகம்

பாரதிய ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகள்

அலஹாபாத் வங்கி / பரோடா வங்கி / பேங்க் ஆப் இந்தியா /

பேங்க் ஆப் மஹாராஷ்ட்ரா / கனரா வங்கி / செண்ட்ரல்

பாங்க் ஆப் இந்தியா / கார்பரேஷன் வங்கி / தேனா வங்கி /

இந்தியன் வங்கி / இந்தியன் ஓவர்சீஸ் வங்கி / பஞ்சாப்

நேஷனல் வங்கி / சிண்டிகேட் வங்கி / யுனைடெட் பாங்க் ஆப்

இந்தியா / விஜயா வங்கி / ஐசிஐசிஐ வங்கி

 

அன்புடையீர்,

 

வருங்கால வைப்பு நிதி திட்டம் 1968 (PPF) பிபிஎப்

காணாமல் போகும் சந்தாதாரர்களுக்கு

பி.பி.எப். தீர்வு செய்வது

 

     பி.பி.எப். திட்டத்தில் காணாமல் போகும் சந்தாதாரர்களுக்கு தீர்வு செய்வது பற்றி வழிகாட்டு நெறிகளைக் கேட்டு இந்திய அரசாங்கம் பல தொடர்புகளை பெற்றுக் கொண்டிருக்கிறது.

 

2.    இந்திய அரசின் அரசாணை எண் 7/7/2005-N.SII ஆகஸ்ட் 6, 2007 தேதியிட்டதன்படி, பிபிஎப் திட்டத்தில் காணாமல் போகும் சந்தாதாரர்களுக்கு, இந்திய சாட்சி சட்டம், 1872ன்படி பிரிவு 107/108 ஷரத்துகளின் அடிப்படையில் தீர்வு செய்யப்படும்.  2007ம் ஆண்டு ஆகஸ்ட் 6 தேதியிட்ட இக்குறிப்பாணையின் நகல் வழிகாட்டுதலுக்கும் விவரத்திற்கும் இணைக்கப்பட்டுள்ளது.

 

 

3.    உங்கள் வங்கியின் கிளைகளுக்கு விவரத்திற்காகவும், நடவடிக்கைக்காகவும், உட்கருத்துக்களை சுற்றறிக்கையாக அனுப்பிடவும்.

 

 

4.    பெற்றமைக்கு ஒப்புதல் அறிக்கவும்.

 

 

உங்கள் நம்பிக்கைக்குரிய

 

 

 

(இம்தியாஸ் அகமது)

உதவிப் பொது மேலாளர்



 

 

 

No.7/7/2005-NSII

நிதி அமைச்சகம்

பொருளாதார விவகாரங்களுக்கான துறை

(வரவு செலவு பிரிவு)

 

புதிடெல்லி

 6 ஆகஸ்ட் 2007

 

அலுவலக குறிப்பாணை

 

பொருள்:- காணாமல் போன பி.பி.எப் சந்தாதாரர்களின்

          உரிமைக் கோரிக்கைகளுக்குத் தீர்வு செய்வது

 

 

காணாமல் போன பி.பி.எப் சந்தாதாரர்களின் உரிமைக் கோரிக்கைகளுக்கு தீர்வு செய்வதற்கு, அதற்கான ஷரத்து பிபிஎப் சட்டம் / திட்டத்தில் இல்லாததால் சரியான வழிகாட்டல் வேண்டுமென்று இந்த அமைச்சகத்திற்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளதாக கீழே கையொப்பம் இட்டவர் தெரிவிக்கிறார்.

 

2.    சட்டம் மற்றும் நிதி அமைச்சகத்தின் சட்ட விவகாரங்களுக்கான துறை ஆலோசனையோடு இவ்விஷயம் பரிசீலிக்கப்படவேண்டும்.  பிபிஎப் சட்டம் / திட்டத்தின் கீழ் எந்த குறிப்பான ஷரத்துகளும், காணாமல் போன சந்தாதாரர்களின் கணக்குகளுக்கு தீர்வு செய்ய இல்லாததால், இந்திய சாட்சி சட்டம் 1872ன் பிரிவு 107/108ன் ஷரத்துகளின்படி அக்கணக்குகளுக்கு தீர்வு காண அறிவுறுத்தப்படுகிறது.

 

3.    இந்திய சாட்சி சட்டம் 1872ன் பிரிவு 107 தொடர்ந்து வாழ்வதைப் பற்றி சொல்லுகின்றது ஆனால் பிரிவு 108 இறப்பைப் பற்றி சொல்திறது.  இந்திய சாட்சி சட்டத்தின் பிரிவு 108 இவ்வாறு கூறுகிறது.

 

ஒரு மனிதன் உயிரோடிக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்ற கேள்விக்கு, அவரைப் பற்றி சாதாரணமாக கேள்விப்படுபவர்களால், அவர் உயிருடன் இருக்கிறாரா என்பது பற்றி, ஏழு வருடங்களுக்கு எந்த தகவலும் அறியப்படாமல் இருக்குமேயானால், அவர் உயிருடன் இருப்பதை நிரூபிக்கும் பொறுப்பு அவருடையதாகிறது.

 

4.    இந்திய சாட்சி சட்டம் பிரிவு 108ன் ஷரத்துகளின்படி இறப்பு பற்றி முடிவு செய்வதை அவனோ / அவளோ காணாமல் போன தேதியிலிருந்து ஏழு வருடங்கள் ஆன பிறகு முடிவு செய்யவேண்டும்.  இதனால் காணாமல்போன சந்தாரரால் நியமிக்கப்பட்டவர், இந்திய சாட்சி சட்டத்தின் பிரிவு 107/108ன் கீழ், தகுதியான நீதிமன்றத்தின் முன் சந்தாதாரரின் இறப்பு பற்றிய ஊகத்தை வெளிப்படுத்திடவேண்டும்.  நீதிமன்றம் அவனோ / அவளோ இறந்துவிட்டதாக உத்தேசமாக முடிவு செய்யும்போது நியமிக்கப்பட்டவர் காணாமல்போன சந்தாதாரரின் பிபிஎப் கணக்கிலுள்ள நிலுவைத் தொகையை பெறுவதற்கு உரிமையுள்ளவராகிறார்.

 

5.    தபால் துறையும் இந்திய ரிசர்வ் வங்கியும் காணாமல் போன சந்தாதாரர்களின் உரிமைக் கோரிக்கைகளை தீர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிகளை வெளியிடலாம்.

 

 

(எம்.ஏ.கான்)

இந்திய அரசாங்கத்திற்கு சார்பு செயலாளர்

 

பெறுனர்

 

1.  தபால் துறை  [DDG (FS)]F.S. பிரிவு, டாக் பவன், சன்சாட் மார்க், புதுடெல்லி

 

2.  இந்திய ரிசர்வ் வங்கி (இம்தியாஸ் அஹவமது, துணைப் பொது மேலாளர்) அரசு மற்றும் வங்கி கணக்குத்துறை, மத்திய அலுவலகம், எதிரில் மும்பை மத்திய ரயில்வே நிலையம், பைகுல்லா, மும்பை-400 008.

 

 

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்